நாட்டு நடப்பு (2)

இந்த நண்பரின் எழுத்தை நம்மால் எந்தக் காலத்திலும் ரசிக்கவே முடியாது என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களில் முதல் இடம் ஆர். அபிலாஷுக்குத்தான்.  விநாயக முருகனுக்கு இரண்டாம் இடமே.  ஆனால் அந்தப் பாவி மனுஷன் அபிலாஷ் என் நம்பிக்கையை ஐந்தே நிமிடத்தில் உடைத்து எறிந்து விட்டார்.  அவருடைய மிக நெகிழ்ச்சியான கட்டுரை ஒன்றைப் படித்த போது இப்படியும் எழுதக் கூடியவரா இவர், அல்லது ஆங்கிலத்தில் எழுதி யாரோ ஒருவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று சந்தேகப்பட்டு கட்டுரையின் கீழே ரொம்பத் தேடினேன்.  ம்ஹும்.  அபிலாஷே எழுதியதுதான்.  இப்படி எழுதக் கூடியவர் ஏன் உயிர்மையில் யமுனா ராஜேந்திரனாக மாறி ராஜ பிளவைப் போடுகிறார் என்று தெரியவில்லை.  இவர் கிரிக்கெட் பற்றி எழுதும் கட்டுரைகளைப் படித்து மண்டை காய்ந்து எவ்வளவோ ரூபாயை இழந்திருக்கிறேன்.  ரெமி மார்ட்டின். ரெமி மார்ட்டின்.  அப்பேர்ப்பட்ட புகழ் வாய்ந்த ஆர். அபிலாஷின் எனக்குப் பிடித்த கட்டுரையின் இணைப்பு இது.  எந்த எழுத்தாளனைப் பற்றியும் வேறொருவர் இப்படி எழுதி நான் படித்ததில்லை.  ஜெயமோகன் மீது பொறாமை கொண்ட தருணம் இது.  ஆனால் விதை விதைத்தால்தானே அறுக்கவும் முடியும்?  நான் யாரிடமும் ஒரு நிமிடம் கூடப் பேசப் பிரியப்பட மாட்டேன்.  பேசினால்தானே எனக்கும் யாரோ ஒருவர் இப்படிப்பட்ட நெகிழ்ச்சிக் கட்டுரை எழுதுவார்கள்?  லாட்டரி சீட்டே வாங்காமல் லாட்டரி விழுமா என்று பார்த்தால் மண்டையில் கல்தானே விழும்?  நீ உன்னை மாற்றிக் கொண்டு உன்னைத் தேடி வருபவர்களிடம் பேசு என்று சொல்லிக் கொண்டேன்.  ம்ஹும்.  அது நடக்கவே நடக்காது என்று தோன்றுகிறது.  என்னை நான் நன்றாக அறிவேன்…

http://thiruttusavi.blogspot.in/2015/04/blog-post_26.html

Comments are closed.