பயணம்

கடைசியாக வீசா வந்து விட்டது.  ஒரு மாத காலம் தங்கலாம்.  ஆனால் ஒரு வாரம் தங்குவதற்குத்தான் நிதி நிலைமை அனுமதிக்கிறது.  இப்போது எனக்கு இருக்கும் கால நெருக்கடியில் இந்த ஐரோப்பியப் பயணத்தையே ஆறு மாத காலம் ஒத்திப் போட்டு விடலாம்; ஆனால் இது மூன்று மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது.  எந்த நாடு, எப்போது கிளம்புகிறேன் என்பதையெல்லாம் எழுதி வைக்காதே என்று அவந்திகா உத்தரவு போட்டிருப்பதால் அந்த விபரங்களை எழுத முடியவில்லை.  எழுதவில்லை என்று என்னிடம் பொய் சொல்லி விட்டு எழுதி விடாதே என்றாள்.  நான் காந்தியின் வழியில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று பதில் சொன்னேன்.

என்னதான் எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டாலும் காலட்சேபம் நடக்க வேண்டுமே?  வெளிநாட்டில் போய் வெறும் காற்றையும் மண்ணையுமா தின்ன முடியும்?  பணம் வேண்டும்.  இதெல்லாம் பத்திரிகைகள் செய்ய வேண்டிய வேலை.  நூறு ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் பத்திரிகையானாலும் சரி, நூறு நாட்களாக வந்து கொண்டிருக்கும் பத்திரிகையானாலும் சரி, நீ ரெண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு கட்டுரை எழுதிக் கொடு; நாங்கள் அதை வெளியிட்டு ரெண்டாயிரம் ரூபாய்க்கு செக் அனுப்புகிறோம் என்கிறார்கள்.  இதில் விளம்பரத்துக்காக மட்டுமே இருபது கோடி ரூபாய் செலவு செய்யும் பத்திரிகைகளும் அடக்கம்.  மூன்று மாதத்திற்கு முன்னால் ஒரு பத்திரிகை நண்பரிடம் இந்த யோசனையைச் சொன்னேன்.   ரெண்டு வாரம் வெளிநாடு போய் வந்தால் எப்படியும் ரெண்டு மாதம் எழுதலாம்.  ரெண்டு லட்சம் செலவாகும்.  கொடுங்கள், எழுதுகிறேன்.  எல்லா பணமும் வேண்டாம்.  ஒரு கட்டுரைக்கு 20000 என்றாலும் சரியாக வந்து விடும்.  மீதியை நான் போட்டுக் கொள்கிறேன்.  ப்ரபோஸல் அனுப்பினேன்.  இப்போது ஃபோன் செய்தால் ஃபோனையே எடுப்பதில்லை.   வீதிக்கு வீதி விளம்பரம் மட்டும் தூள் பறக்கிறது.  நிலைமை இதுதான் நண்பர்களே, ரெண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து இப்போது ஐரோப்பா செல்கிறேன்.  திரும்பி வந்து கட்டுரை எழுதுவேன்.  ரெண்டாயிரம் ரூபாய் கொடுப்பார்கள்.

எனவே, உங்களிடம் பணம் கேட்க வேண்டிய நிலைமை.  இவ்வளவு கஷ்டப்பட்டு நீ ஏன் வெளிநாடு போகிறாய் என்று கேட்கலாம்.   என்னிடம் அதற்குப் பதில் இல்லை.  எனக்கு எழுத்தே உயிர் மூச்சு.  இஸ்தாம்பூல் என்ற நூலைப் படித்ததும் அந்த நகரைப் பார்க்கத் தோன்றியது.  கிளம்பத் திட்டமிட்டேன்.  அவ்வளவுதான்.

முடிந்தவர்கள் பணம் அனுப்புங்கள்.  முடியாதவர்கள் ராத்தூக்கம் தொலைக்காதீர்கள். உங்கள் உறக்கத்தை விட பணம் முக்கியம் அல்ல.  மற்றபடி திட்டுபவர்கள் திட்டலாம்.  என்னைத் திட்டுவதால் சந்தோஷம் கிடைக்கிறது என்றால் சந்தோஷமாகத் திட்டுங்கள்.  இனிமேல் பணம் கேட்டு எழுத மாட்டேன்.  இன்னும் ஆறு மாதங்களுக்குக் கடுமையான வேலை இருக்கிறது.

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI ACCOUNT K. Arivazhagan,

ICICI Bank Account No. 602601505045

t.nagar branch, chennai 28.

FSC Code: ICIC0006026

MICR Code: 600229010

 

 

buy essay fast online

Comments are closed.