தோக்யோவில்
பெண்கள் தனியாகக் குடிக்கிறார்கள்,
கண்ணாடிக் கோப்பைகளில்
தங்கள் தனிமையை உறிஞ்சி.
தனியாக நடனமாடுகிறார்கள்,
நியான் வெளிச்சத்தில்
கூட்டத்தில் தொலைந்து
தங்கள் நிழலோடு.
தனியாக வாழ்கிறார்கள்,
விபச்சார விடுதிகளுக்குச் சென்று,
ஆண் விபச்சாரர்களின் வியர்வையில்
தங்கள் வெறுமையை நிரப்ப முயல்கிறார்கள்.
தனியாக நாய் வளர்க்கிறார்கள்.
தனியாகக் குழந்தை பெற்று,
காயின் லாக்கர்களில்
கனவுகளோடு சேர்த்துத்
தம் சிசுவையும்
பூட்டிவிட்டுச் செல்கிறார்கள்.
தனியாக,
மௌனத்தின் கயிற்றில் தொங்குகிறார்கள்,
அல்லது
தனியாக
ஓடும் ரயிலில் விழுகிறார்கள்.