என் கவிதைகளை முன்வைத்து… (3)

Some thing black நாவலை முடித்து விட்டேன். வசன கவிதையிலான நாவல். ஆனால் எதுவுமே புரியவில்லை. ஒரு வார்த்தைகூட புரியாத வார்த்தை இல்லை. ஆனால் வாக்கியமாக எதுவுமே புரியவில்லை. கீழ் வரும் ஒரு பத்தியைப் பாருங்கள்.

Come down and sleep in this tree in this tree

Push back the earth in this tree in this tree

Scoop out the earth in this tree in this tree

Disinvent the dark in this tree in this tree

Rebuild your legs in this tree in this tree

Decline the dust in this tree in this tree

Cut the light in this tree in this tree

Fill the orbits in this tree in this tree

Write, write yourself alive in this tree.

இப்படியே 140 பக்கங்கள். ஏன் in this tree என்று திரும்பத் திரும்ப வருகிறது என்று இந்த நாவல் குறித்த மதிப்புரைகளில் தேடினேன். திரும்பத் திரும்ப மந்திர உச்சாடனம் போல் சொல்லி மனோவசியம் செய்வதற்காக எழுதியிருக்கிறார் என்று விளக்கப்பட்டுள்ளது. நான் தமிழில் எழுதியிருந்தால் தீர்த்துக்கட்டியிருப்பார்கள். மேற்கத்திய இலக்கிய உலகம் கொஞ்சம் நீக்குப்போக்காகத்தான் இருக்கிறது.