the alchemy of desire

சற்று முன்புதான் அராத்துவிடமும் துரோகியிடமும் பேசினேன். (என் நண்பர்களின் பெயரைப் பாருங்களேன். உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்கு இப்படி அமையுமா?) ஒரு வாரமாக வாக்கிங் போகவில்லை; சரியாகத் தூங்கவில்லை; ராணுவ ஒழுங்குடன் வாழும் என் தினசரி வாழ்க்கை அத்தனையும் தலைகீழ் ஆயிற்று. ஒரு நாவலால். தருண் தேஜ்பால் எழுதிய the alchemy of desire. இரண்டு லட்சம் வார்த்தைகள். பொடி எழுத்தில் 550 பக்க்ங்கள். என் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்து யாரோ எழுதியது போல் இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம். கதாநாயகன் விஸ்கி குடிக்கிறான். நான் பிராந்தி…  அட அடா அடா. படித்த மகிழ்ச்சியில் கொஞ்சம் ரெமி மார்ட்டின் அருந்திக் கொண்டிருக்கிறேன். இது நாவல் இல்லை; காவியம் (epic) என்று தருணுக்கு மெஸேஜ் பண்ணினேன். your appreciation means a lot to me என்று பதில் வந்தது. நீங்களும் அந்த நாவலைப் படித்துப் பாருங்கள். லோசாவுக்கு அடுத்து, கஸான்ஸாகிஸுக்கு அடுத்து தருணின் இந்த நாவல்தான். தருணை நான் லோசா, கஸான்ஸாகிஸ் அளவில் வைக்கிறேன்.  இந்திய நிலப்பரப்பில் இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் படித்ததில்லை…

என் வாசகர் வட்டத்தில் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது நிறைய பாடல்களைக் கேட்டோம்.  அப்போது ஒரு நண்பர் இந்தப் பாடகியை அறிமுகப் படுத்தினார்.  கேட்டுப் பாருங்கள்…  தப்புத் தாளங்கள் என்ற என் புத்தகத்தில் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்..’

http://www.youtube.com/watch?v=tfBK1PM8f14

Comments are closed.