மக்சேசே சர்ச்சை பற்றி கருந்தேள் ராஜேஷ்

மக்சேசே விருது..

ஒரு கருத்து. குண்டாந்தடி அட்டாக் செய்யாமல், விவாதம் செய்யணும் என்று நண்பர்கள் கமெண்ட் போட்டால் நலம்.

ஒரு ஆள் இருக்கார். தன்னோட சுயசாதி மேல, கொஞ்சம் பிரச்னை உடையவர். சுயசாதி சார்ந்த தொழில்தான் செய்யுறார். ஆனால் அவருக்கு இருக்கும் பிரச்னைகளால், இந்தத் தொழிலைக் குப்பத்துல இருக்குறவங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்னு கிளம்புறார் (கவனிக்க: ராமானுஜர் கூரையேறிக் கத்தின மாதிரி, எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன் அப்புடீன்னு சொல்லல. குப்பம்னு மட்டும் சொல்றார்… அதேபோல் அறிமுகம் தான்.. கத்துக்கொடுக்குறேன்னு எல்லாம் சொல்லல..ஒரு அகாடெமி போன்ற மேட்டர்லாம் ஆரம்பிக்கல).. சிலவாட்டி குப்பம் போயி பாடுறார். திரும்பிடுறார்.. அதைப்பத்தியும், அவரோட பிரச்னைகள் பத்தியும் சிலபல கட்டுரைகள் எழுதுறார்..

அவ்வளவே. ’social inclusiveness in culture’ என்ற அடிப்படையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மக்சேசே விருது கொடுத்திருக்காங்க. நல்லது. அவரோட சேர்ந்து அந்த விருது, வில்சன் என்பவருக்கு, ‘asserting the inalienable right to a life of human dignity’ என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கு. யார் இந்த வில்சன்ன்னு பார்த்தா, Safai Karmachari Andolan என்ற பெயரில் ஒரு அம்மைப்புக்குக் கன்வீனர். அப்புடி என்ன பண்ட்டார் வில்சன்னு பார்த்தா, களத்துல இறங்கிப் பல வருஷம் வேலை செஞ்சிருக்கார். Manual scavenging என்று அழைக்கப்படும் கொடூரமான ப்ராக்டிசை வேரறுக்கப் பல போராட்டங்கள் செய்திருக்கார். இறங்கிப் பிரச்னைகள் பண்ணிக் கடுமையாவும் பாதிக்கப்பட்டிருக்கார்.

ஒருபுறம் கட்டுரைகள் மட்டுமே எழுதியவர். இன்னொரு புறம் களப்பணியாளர். இந்த ரெண்டு பேருல நமக்குக் கட்டுரை எழுதியவரைத்தான் தெரியும். ஆனால் வில்சன் என்ற களப்பணியாளரோடு ஒப்பிட்டால், கட்டுரை எழுதிய டி.எம்.கிருஷ்ணா எதுவுமே செய்யல. நீங்களே தேடிப் பார்க்கலாம். மலம் அள்ளுபவர்கள், சாக்கடைகளில் இறங்கும் பாவப்பட்ட நபர்கள், அதில் விஷவாயு தாக்கி இறப்பவர்கள் (போன வாரம் கூட பெங்களூரில் 5 பேர் இப்படி இறந்தாங்க) ஆகியவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி, அவங்களைத் தயார் செய்து, எஜுகேட் பண்ணி, மனுஷனா வாழவைப்பதெல்லாம் நினைச்சிக் கூடப் பார்க்கமுடியாத காரணம். நடமாடும் தெய்வம்னே வில்சனை சொல்லலாம்.

என் சந்தேகமெல்லாம், இத்தகைய மக்சேசே விருது, டி.எம்.கிருஷ்ணாவுக்குக் கிடைக்க என்ன முகாந்திரம்? அவர் ஒண்ணுமே செய்யலையே? அவர் எழுதிய கட்டுரைகள் சில படிச்சிருக்கேன். ஆழமே இல்லாத, மேலோட்டமானவைதான் அவை. அதேபோல் கச்சேரி பண்ண மாட்டேன், குப்பத்துக்குக் கச்சேரியை எடுத்துட்டுப் போவேன் போன்ற அறிக்கைகளாலும், செயல்களாலும் மனித சமுதாயத்துக்கு என்ன நன்மை? ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமே செய்துகொண்டிருந்த கர்நாடக சங்கீதத்தைக் குப்பத்துக்கு எடுத்துட்டுப் போயி என்ன செய்ய? அவங்ககிட்டதான் அதைவிட மிகச்சிறந்த சிறந்த இசை இருக்கே?

ஒருவேளை சுயசாதி எதிர்ப்புதான் முகாந்திரமா? அப்படிப் பார்த்தா எக்கச்சக்கமானவங்களுக்கு மக்சேசே கொடுக்கலாமே?

social inclusiveness in culture அப்புடீன்னு யோசிச்சிப் பார்த்தா, எம். ஆர். ராதா நினைவு வருது. கலைவாணர் நினைவு வருது. இவங்கல்லாம் தானே அதுக்கு சிறந்த உதாரணம்?

ஒண்ணுமே புரியல. முக்கி முக்கி யோசிச்சாலும் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஏன் மக்சேசேன்னு என் சிறுமூளைக்கு எட்டல. நண்பர்கள் யாராவது புரியவைங்களேன்.. நன்றி. வணக்கம்.

(யாராவது எனக்குப் பொறாமை அது இதுன்னு வெகுண்டெழுந்து கமெண்ட் போட்டா, அவங்களைப் பார்த்து விழுந்து பொரண்டு சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய?)