இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுத் தேர்வு மிகவும் முட்டாள்தனமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாப் டைலன் ஒரு மாபெரும் கலைஞர்; ஆனால் அவர் இலக்கியவாதி இல்லையே? Arts என்று ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு அதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இனிமேல் அமெரிக்க ஜனாதிபதியின் உரையைத் தயாரிப்பவருக்குக் கூட இலக்கியத்துக்கான நோபல் கொடுப்பார்கள் போலிருக்கிறது. அதேபோல், டரண்டினோ படத்துக்கு வசனம் எழுதுபவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் கொடுக்க ஆரம்பிக்கலாம். சென்னையில் கலைமாமணி விருது கமிட்டியைச் சேர்ந்த யாரோ ஒரு ஆள் நோபல் கமிட்டிக்குள் நுழைந்து விட்டாற்போல் தெரிகிறது. நியூயார்க் டைம்ஸும் இப்படித்தான் நினைக்கிறது.
http://www.nytimes.com/2016/10/13/opinion/why-bob-dylan-shouldnt-have-gotten-a-nobel.html?_r=0