ஒரு கடிதம்

வணக்கம்,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களது விவேகம் விமர்சனம் அன்றே பார்த்துவிட்டேன். வாழ்த்துக்கு பதிலாக வசைகள் வந்து கொண்டிருக்கும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.
ரசிகர்களுக்கு பதிலாக கண்மூடித்தனமாக பக்தர்கள் இவ்வளவு பேரா என்று வெகு அதிர்ச்சியாக இருந்தது.
அதை விட அதிர்ச்சி அவர்கள் உங்கள் விமர்சனம் தவறு என்று கூறுவதற்கான காரணங்கள்.
 வயது, நான் வெகுவாக பிரமித்த விடயம் நீங்கள் எப்படி அந்த காலத்தில் ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் போன்ற புத்தகங்களை எழுதினீர்கள் என்பதுதான் இப்போது கூட யாரும் சொல்ல முன்வராத விடயங்களை அப்போதே எழுதி முடித்துவிட்டீர்கள். உங்களை போய் இந்த கால படங்களை புரிந்து கொள்ள முடியாதவர் என்று சொல்வது அபத்தம்.
பிறர் ஆறுதல் கூறும் அளவுக்கு நீங்கள் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க மாட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு அதேபோல நீங்கள் வேண்டும் எங்களுக்கு எனவே கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்கள் அடுத்த விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். take care .
அன்புடன்,
நித்யா