கார்ல் மார்க்ஸின் சிந்தனை, அரசியல், தத்துவம் குறித்த ஒரு புகழ் பெற்ற கேலிச்சித்திரம் உண்டு. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், இம்மானுவல் காண்ட், நீட்ஷே, விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவவாதிகள் எல்லாம் ஒரு வட்ட மேஜையில் அமர்ந்து தத்துவம் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள். அந்த மேஜைக்குக் கீழே தாடி வைத்த ஒரு ஆள் வெடிகுண்டைப் பற்ற வைத்துக்கொண்டிருப்பார். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.
அம்மாதிரி புருஷன் நாவலில் ஒரு அத்தியாயம் வருகிறது. பதினேழாவது அத்தியாயம். ழழிழு என்ற கதாபாத்திரம் மானிடர்களிடம் பேசும் அத்தியாயம். அது இதுவரையிலான மானுட குல சிந்தனை, அறிவு, தத்துவம், மொழியியல், விஞ்ஞானம், ஆன்மீகம், மதம் அனைத்தையும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கிறது.
மிகச் சிறிய அத்தியாயம்தான். வெடிகுண்டு என்ன சின்னதாகத்தானே இருக்கும்?
பிரமித்தேன்.