Marginal Man

மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்பு போல் என் வாழ்வில் வேலை வாங்கிய ஒரு விஷயம் எதுவும் இல்லை.  அதில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த நண்பர்களுக்கே பதற்றம் தொற்றி விட்டது.  அப்படி ஒரு வேலை.  மயன் மாளிகையைப் போல் உருவாக்கியிருக்கிறேன்.  மொழிபெயர்ப்பில் பின்வரும் ஒரு பத்தி.

Did you wonder about what happened to Whitey after I left for the Himalayas?  I had given a lot of thought to it, in fact.  People who are into spirituality are a bit dense so I decided to target Raja’s Achilles heel.  One day I told him that I was going to the Himalayas to meditate and at once he fell at my feet.  I pulled him up and said piously that Baba had appeared to me in a dream and asked me to give him a message.  Eyes brimming over with tears, he asked me what it was.  ‘Baba said, ‘Your neighbour Raja will take care of Whitey’,’ I lied.

Astonished, he asked me why Baba had not appeared in his dream.  ‘For that, you need to evolve further.  If you want further proof, Baba also said, ‘Ask him to read page number 333 of my sacred autobiography.’ It’s the same page that describes the incident about Baba’s visit to a devotee’s house in the form of a beggar and a street dog.  Need I say more?  By this time, I expect Whitey must have shed his proletarian identity and become a bourgeois.

இது ஒரு அத்தியாயமாக வருகிறது.  இதில் ஒரு பிரச்சினை இருப்பதாக எனக்குத் தோன்றியது.  நாவலின் டைப்செட்டிங் கூட முடிந்து விட்ட நிலையில் இரண்டு பத்திகள் மட்டுமே உள்ள இந்தச் சிறிய அத்தியாயத்தில் ஒரு பிரச்சினை.  700 பக்க நாவலையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நூறாவது முறையாக என்று வைத்துக் கொள்ளுங்கள்.  டைப் செட்டிங்கும் முடிந்து விட்ட நிலையில் ஒரு மாதிரி காப்பியும் கையில் இருக்கும் நிலையில் கடைசி கடைசியாக ஏதாவது ஜங்க் மாதிரி பிழை வந்து விட்டதா என்று பார்க்கச் சொன்னார்கள்.  அந்த நிலையில் இந்த அத்தியாயத்தில் எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது.  I lied என்றால் அது மிக மிக வெளிப்படையான, தட்டையான வார்த்தை.  அப்படி நான் எழுத வாய்ப்பில்லை.  ஆனால் தமிழ்ப் பிரதியைப் போய்ப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்து இருந்தேன்.  ஏனென்றால் சில மணி நேரங்களில் நாவல் பிரஸ்ஸுக்குப் போக வேண்டும்.  I lied என்பதை I said என்று சொன்னால் வாசகருக்கு உதயா ராஜாவிடம் கதை விடுகிறான் என்பது புரியுமா என்பதில் எனக்கு சந்தேகம்.  இரண்டு நண்பர்களைக் கேட்டேன்.  குழம்பினார்கள்.  சரி, தமிழைப் பார்ப்போம் என்று பார்த்தேன்.  சொன்னேன் என்று இருந்தது. அதற்கு மேல் தயக்கமே இல்லாமல் I said என்று மாற்றி விட்டேன்.

இப்படியாக 1,65,000 வார்த்தைகளைச் செதுக்கியிருக்கிறேன்.

தினந்தோறும் பேசிக் கொள்ளாவிட்டாலும், அடிக்கடி சந்திக்காவிட்டாலும் என்ன நடந்தது என்பதை அராத்து அறிந்திருக்கிறார்.  அவர் முகநூலில் இட்ட பதிவு இது:

சாரு – எக்ஸைல் – மார்ஜினல் மேன்

சாருவுடன் பழகியவர்களுக்குத் தெரியும், சாருவின் வாழ்நாள் கனவு இது. அவரின் அதிகபட்ச ஆசையே தன்னுடைய நாவல் ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிகளிலும் (வேறென்ன ஃபிரெஞ்சுதான் ) வர வேண்டும். அதைப்படித்து உலகெங்கிலும் உள்ள இலக்கிய சுரணை உள்ள அழகான பெண்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்பதுதான். மற்றபடி இந்த விருது கிருது எல்லாம் அவர் ஆசை அல்ல. ஏநென்றால் மற்ற மொழிகளில் வந்தாலே விருது கிடைத்துவிடும் என்பது சாருவுக்கு உறுதியாகத் தெரியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் , இதுவரை செய்யப்பட்ட புளித்த மாவு மொழிபெயர்ப்புகளை சாரு சாடி வந்திருக்கிறார். இப்போது செய்யப்பட்ட சாருவின் புத்தக மொழிபெயர்ப்பில் பலருடைய உழைப்பு இருக்கிறது. ஒரு குட்டி ராணுவ தீவிரவாதிகள் குழு போல செயல்பட்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

எக்ஸைல் நாவலை சாரு தமிழில் எழுத எடுத்துக்கொண்ட சிரத்தையை விட பன்மடங்கு சிரத்தையையும் உழைப்பையும் எடுத்து கொண்டது இந்த மொழிபெயர்ப்பு வேலை.

உடலாலும் மனதாலும் சாரு கசக்கிப்போட்ட பஞ்சு போல இருப்பார் இப்போது. ஐயா தற்போது தண்ணி வேறு அடிப்பதில்லையா ? உடனடியாக இந்த ஃபீலை விட்டு வெளியே வர வாய்ப்பில்லை.

சாருவின் வாச்கர்கள் இந்த மார்ஜினல் மேனை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதில் இருக்கிறது , சாருவின் மீதான உங்களின் அன்பு.

தமிழிலக்கியத்தில் செம்மையாக , இண்டர்நேஷனல் ஸ்டேண்டேர்டுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் புத்தகமாக இது இருக்கப்போகிறது.

உங்களின் விடாப்பிடியான , வெறித்தனமான , ஆர்வத்திற்கு கிடைத்த வெற்றி இது சாரு . கொண்டாடுவோம் !

***

கசக்கிப் போட்ட பஞ்சு என்று என்னை வர்ணிக்கிறார் அராத்து.  மீண்டும் சொல்கிறேன்.  ஒரு adult film-இல் நடிப்பதைத் தவிர இதை disprove பண்ண வேறு வழியில்லை.  ஆனாலும் கனவான்கள் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கக் கூடாது என்பதால் வாளாவிருக்கிறேன்.

எக்ஸைல் ஒரே மாதத்தில் 1000 பிரதிகள் விற்றன.  அதேபோல் மார்ஜினல் மேனையும் – குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் 1000 பிரதிகள் விற்கச் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

சாரு