சந்த்தியாகோவில் அடியேன் (8)

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்வப்போது வாசகர்களிடம் பணம் கேட்பதுதான் சங்கடமாக இருக்கிறது” என்றார் நண்பர் ஒருவர். இன்னொரு மிக நெருங்கிய நண்பர் இதே காரணத்தினால் என் இணைய தளத்தையே படிப்பதில்லை. என் மீது கொண்ட அதீத அன்பினால் நான் அப்படிப் பணம் கேட்பது அவருக்கு சங்கடமாக இருக்கிறது. நண்பர்களே விவேகானந்தரும் இன்னும் பல ஆன்மீக குருநாதர்களும் தங்கள் நிறுவனங்களுக்காக அன்பர்களிடம் பணம் கேட்கவில்லையா? தாகூர் ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் தன் கல்வி நிறுவனத்துக்காக லட்சம் லட்சமாக பணம் வசூலித்தாரே? இங்கே பாரதி சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த போது அதே காலகட்டத்தில் தமிழ்நாடு வந்த தாகூர் இங்கே உள்ள முக்கியமான கல்லூரிகளில் பிரசங்கம் செய்து ஆயிரம் ஆயிரமாக வசூலித்தார். கட்டண உரை. அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் பாளையங்கோட்டை கல்லூரிகளில் பேச பார்வையாளர்களுக்குக் கட்டணம். இங்கே நான் 30 ஆண்டுகளாக இலவசமாகப் பேசி வருகிறேன். கூட்டத்தில் பேச 10000 ரூ கொடுங்கள் என்றால் அவ்வளவுக்கு எங்கே போவது என்கிறார்கள். அவர்களாக விரும்பி அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கே இந்த கதி. இதுவரை ஒருத்தர் கூடக் கொடுத்ததில்லை. எழுதுவதும் இலவசமே. இப்போதுதான் சில மாதங்களாக சந்தா. இந்த நிலையில் நான் என் எழுத்துக்கு சன்மானம் கேட்பதில் என் நண்பர்களுக்கு என்ன அவமானம், என்ன வெட்கம்? குருவுக்கு தட்சணை கொடுப்பதில்லையா? நான் என்ன வீடு கட்டவா கேட்கிறேன்? பயணத்துக்காக மட்டுமே எனக்குப் பணம் தேவைப்படுகிறது. இதோ இப்போது இந்தப் பயணத்துக்கு 9 லட்சம் ஆகி விட்டது. இன்னும் ரெண்டு லட்சம் தேவை. நான் என் குழுவிலிருந்து பிரிந்து சந்த்தியாகோ வந்து விட்டேன். தனியாகத்தான் டாக்ஸிகளில் பயணம் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்கு தேடியும் தண்ணீர் பாட்டில் தேடிக் கிடைக்காமல் ஓட்டலுக்கே வந்து கேட்டால் ரெண்டு பாட்டில் 3000 பெசோ. 300 ரூ. நா வறளும் தாகத்தில் கோக் குடித்தால் வாந்தி வருகிறது. மெத்ரோவில் போகலாம். ஆனால் நான் நம்மூர் வூபர் வோலா டிரைவர்கள் மற்றும் ஸ்விக்கி பாய்ஸ் மாதிரி. ஒரு மண்ணும் புரியாது. காட்டில் வாழ்நதவனை நகரத்தில் விட்ட மாதிரி. என் காடு புத்தகங்கள். இன்று மூன்று டிகிரி செல்ஷியஸில் ஒரு மணி நேரம் வாக்கிங் போய் விட்டு ஓட்டலைத் தேடியே ஒரு மணி நேரம் நடந்தேன்.

இன்னும் ஒரு வாரம் சந்த்தியாகோ. பணம் தேவை. பணம் இருந்தால் திட்டமிட்டபடி பல இடங்களைச் சுற்றலாம். இல்லையேல் இந்த ஏரியாவையே சுற்றலாம். 2000 பக்கம் வரும் பயண நூல். உலக மொழிகளிலேயே இத்தனை பெரிய பயண நூல் எழுதப்பட்டிருக்காது.

ஒரே குறிப்பைச் சொல்கிறேன். இன்று ரிக்கார்தோ என்ற டிரைவருடன் ரெண்டு மணி நேரம் பயணித்தேன். கொலோம்பியன். ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. ஆனால் எனக்கு எஸ்பஞோல் புரியும். பேசத் தெரியாது. பெரும் ஸால்ஸா ரசிகர். அமர்க்களமாகப் பாடிக் கொண்டே உட்கார்ந்தபடியே ஆடிக் கொண்டே வண்டி ஓட்டினார். ஒரு பாட்டைக் கேட்டு ஆஹா சேலியா க்ரூஸ் என்று உற்சாகமாகக் கத்தினேன். இந்தப் பாடகி என் உயிர் என்றேன். வண்டியை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டார். கூபானோ என்றேன். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எஸ்பஞோல் கிராமரில் எனக்கு gender பெரிய பிரச்சினை. பெண்பாலுக்கு கூபானா என்றார். கூபாவைச் சேர்ந்த பாடகி. உங்களுக்கு இளைய ராஜா மாதிரி எனக்கு Celia Cruz. அவர் சொன்ன சேதிகளே நூறு பக்கம் வரும். நேற்று விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த கார்லோஸ் சொன்ன கதைகளும் நூறு பக்கம் வரும். கார்லோஸ் எனக்கு ரொம்பப் பிடித்த பெயர் என்றேன். சீலேயில் சாலையில் கிடக்கும் கல்லை எடுத்துப் பார்த்தால் கூட அதில் ரெண்டு மூணு கார்லோஸ் என்ற பெயர் எழுதியிருக்கும் என்றார் சிரித்தபடி.

முடிந்தால் பணம் அனுப்புங்கள்.

பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரம் கீழே. Google pay மூலமும் அனுப்பலாம். கூகிள் பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் தேவை. நீங்கள் எனக்கு எழுதினால் அனுப்புகிறேன்.
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai