பிக் பாஸ் – 3

இங்கே இருந்த பதினாறு பேரையும் பதினாறு லைப்ரரியாகப் பார்த்தேன். (ஆனா என்னை மட்டும் அப்டிப் பார்க்கலே!)

வந்த போது இருந்த முகன் வேற. இப்போ இருக்கிற முகன் வேற. இந்த மாற்றத்துக்கு பிக் பாஸ்தான் காரணம். (ஆனா நான் மட்டும் மாறவே இல்ல பிக் பாஸ். நீங்க என் கிட்ட தோத்துட்டிங்க.)

இந்தப் பதினாறு பேருக்கும் என்னென்ன (அட்வைஸ்) தேவையோ அது எல்லாத்தையும் குடுத்தேன். அதுனாலதான் எல்லாரோடையும் சேர்ந்து நானும் சண்டை போடல. – பகவான் கிருஷ்ணன் alias சேரன்

இந்த ஷோவோட சிறப்பு என்னான்னா, இதுல இருந்த எல்லோருமே இயல்பா இருந்தாங்க. யாரும் fakeஆ இல்ல. fakeஆ சண்டை போடல. (நம்ம புழல் ஜெயில்ல இருக்கிறவங்களும் கூட இயல்பாதான் கொல பண்ணாங்க, இயல்பாதான் கற்பழிச்சாங்க, இயல்பாதான் எல்லா க்ரைம்ஸும் பண்ணாங்க. யாரும் fakeஆ எதுவுமே பண்ணல!)

சேரனும் என் மைண்ட் வாய்ஸும்…