ஜனவரி 4-ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் அராத்து எழுதிய தற்கொலைக் குறுங்கதைகள் என்ற நாவல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி. கலந்து கொள்வோர், மதன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் வசந்த், நீயா நானா ஆண்டனி. த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறோம். இன்னும் முடிவு தெரியவில்லை. எல்லோரும் பெரும் திரளாகக் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்... அன்றைய தினம் நான் தற்காலத் தமிழ் இலக்கியப் போக்குகளையும், அதில் தற்கொலைக் குறுங்கதைகளின் இடத்தைப் பற்றியும் விரிவாகப் பேச இருக்கிறேன். இந்தத் தற்கொலைக் குறுங்கதைகளை என்னுடைய புத்தகத்தின் வெளியீடாகவே கொள்ளவும். இந்தப் புத்தகத் திருவிழாவில் இதுதான் என்னுடைய பங்களிப்பு என்று கருதுகிறேன். ஏனென்றால், என்னால் முடியாததை, நான் செய்யாததை அராத்து செய்திருக்கிறார். ஓஷோவின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அது என்னுடையது என்று நினைப்பேன். சொந்தம் கொண்டாடுவேன். அதேபோல் தான் அராத்துவின் எழுத்தையும் சொந்தம் கொண்டாடுகிறேன். மறக்காமல் கலந்து கொள்ளுங்கள். ஜனவரி 4, மாலை ஆறு மணி, ஸர் பிட்டி தியாகராயா ஹால், தி.நகர். சனிக்கிழமை…
Comments are closed.