அன்பும் சமாதானமும் பெருக…

நான் ஒருவரைப் புண்படுத்தி விட்டேன் என்று தெரிந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுவேன்.  உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்?  உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.  பலரிடம் அந்த குணம் இல்லாததை கவனித்திருக்கிறேன்.  நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வருத்தம் தெரிவிக்காத பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வருத்தம் தெரிவித்தால் அந்தத் தவறின் பலு நம்மை விட்டு அகன்று விடும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.  இன்னொரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தவறை செய்யாத கவனத்தையும் அந்த மன்னிப்பு நம்மிடம் உண்டாக்கி விடுகிறது.  ஆனால் இப்படி வருத்தம் தெரிவிக்காத மனோபாவத்திற்குக் காரணம் நம்முடைய ஈகோ.

இந்தப் புத்தாண்டில் அந்த ஈகோவை நம்மிடமிருந்து விரட்டுவோம்.  என் எழுத்தை வாசிக்கும் உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது அதுதான்.  கண்ணன் என்ற நண்பரின் மேல் மிகவும் வருத்தம் கொண்டு நான் ஒரு நீண்ட பதிவு எழுதியிருந்ததை நீங்கள் படித்திருப்பீர்கள்.  (இன்னொரு முக்கிய விஷயம்.  நான் யாரைப் பற்றி விமர்சித்து எழுதினாலும் என் மனதில் துளியும் வன்மம் இருக்காது).  சரி, அந்தக் கண்ணனின்  இடத்தில் உங்களை ஒரு நிமிடம் வைத்துப் பாருங்கள்.  நீங்கள்தான் கண்ணன்.  உங்களைத் தான் நான் திட்டி எழுதி விட்டேன். அதுவும் பெயர் குறிப்பிட்டு.  என்ன செய்வீர்கள்?  என் மீது ஜென்மப்பகைதானே பாராட்டுவீர்கள்?  ஆனால் நான் கண்ணனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ அதையே கண்ணன் செய்திருக்கிறார்.  இதோ கீழே படியுங்கள்:

Dear Charu

trust you are doing well.

wanted to talk to you with respect to translation.  I have been trying to do it in the christmas holidays but i am not able to get into the zone. your writings especially require one to get into the zone for translating. When i translated your other story, for three days i was in a different world and a different person all together.

When i think off what is in front of me along with my new work load from office, i honestly dont want you to keep waiting for me to finish up. if that other story required that dedication from me then Rasa Leela would require more from me and with my current work load i dont see myself doing justice to translation. even if i do it’ll be bad.  From what i am seeing, it would take more than a year for me to finish even if i spend time regularly. I probably would go with your earlier suggestion that you give it to someone else. But where i can help is in proof reading and editing. either it may be articles or any novel translation, i can definitely help.

Let me know

Regards

Kannan

எத்தகைய உயர்ந்த உள்ளம் பாருங்கள். இப்படி ஒரு கடிதத்தை உங்களால் எழுத முடியுமா?  என்னால் முடியும்.  எழுதியும் இருக்கிறேன்.  இந்தக் கடிதத்தையே, இந்தக் கடிதம் எழுதிய மனநிலையையே உங்களுக்கு நான் இந்தப் புத்தாண்டுப் பரிசாக அளிக்கிறேன்.

 

நம் வாழ்வில் அன்பும் சமாதானமும் நிலவ இத்தகைய மனோபாவமே தேவை.  மகா அவ்தார் பாபாவும் Mahanta வும் உங்களுக்கு அதை அளிப்பார்கள்…

 

 

Comments are closed.