பூச்சி – 37

கறுப்பன் எழுந்து கொள்ள முயற்சித்தான்.  ம்ஹும்.  முடியவில்லை.  அச்சமும் நடுக்கமும் அவமானமும் அவனைத் தரையிலேயே ஆணி அடித்தாற்போல் வைத்து அழுத்தியது.  பிறகு அந்தத் தேன்குரலைக் கேட்டான்.

“த்ரிஸ்த்தான்…”

இந்தக் கோவிலுக்கு வெளியே வேறோர் காலத்தில் இதேபோல் அவன் அழைக்கப்பட்டிருக்கிறான்.  அப்படியானால் இது கனவு அல்ல; நனவுதான்.  சீமாட்டிதான் வந்திருக்கிறாள்.  தன் அருகே தெரியும் அவள் கால்கள் உண்மைதான்.  அவன் பதில் சொல்லியாக வேண்டும்; அல்லது சாக வேண்டும்.  அவன் பேசியே ஆக வேண்டும்.  அவனிடம் வந்து சேர்ந்த மலருக்கு அவன்  பதில் கொடுத்தாக வேண்டும்.  எச்சிலை முழுங்கினான்.  முழுங்குவதற்குக் கூட ஒன்றும் இல்லை.  ஆனால் அது கொஞ்சம் உதவியது. 

“ரோஜா மலரே…”

“சொல் த்ரிஸ்த்தான்… உன்னால் நகர முடியுமா?”

“இல்லை… என்னால் முடியவில்லை.  ஏனென்றும் தெரியவில்லை.  மனதில் தோன்றுகிறது.  ஆனால் உடல் கேட்க மாட்டேன் என்கிறது.  எல்லாமே மனதிலேயே நின்று விடுகிறது.  உடலுக்குப் போக மறுக்கிறது… ஆனால் இதை என்னால் நம்ப முடியவில்லை.  என் வைரமே, என் வைடூரியமே, உண்மையிலேயே நீ தானா இது?”

“உண்மைதான் த்ரிஸ்தான்.  என்னை நம்பு.”

அடுத்து நம்பவே முடியாத விதத்தில் கன்னி அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.  ஆனால் எப்போதுமே இதற்கு நேர் எதிராக அல்லவா நடந்திருக்கிறது.  இப்போது எப்படி கன்னி ஒரு கறுப்பின மனிதனுக்கு எதிரே மண்டியிடுவது? 

”தயவுசெய்து அப்படிச் செய்யாதே கடவுளின் புனித அன்னையே! தயவுசெய்து வேண்டாம்.”

“செய்யத்தான் போகிறேன் த்ரிஸ்த்தான்.  மண்டியிட்டால் முழங்கால் வலிக்கிறதுதான்.  ஆனாலும் இன்று இரவு நான் இதுவரை செய்யவே துணியாத காரியங்களையும் செய்து விடலாம் என்று இருக்கிறேன்.  அதற்கு எனக்கு உன்னுடைய உதவி தேவை.” 

”நானா, உனக்கா?  என்ன சொல்கிறாய் என் அல்லி மலரே?  என்னால் உனக்கு என்ன செய்ய இயலும்?”

“எங்கே இன்று கொலை செய்த அந்தக் கையை என்னிடம் கொடு, த்ரிஸ்த்தான்…”

“நான் கொலை செய்தது உனக்கு எப்படித் தெரியும் தாயே?”

”நாத்திகனைப் போல் பேசாதே த்ரிஸ்த்தான், உன் கையைக் கொடு.”

“என்னால் கையைத் தூக்க முடியவில்லையே?”

“அப்படியானால் நான் உன் கையருகே வருகிறேன்.”

அவள் குரல் தெளிவாகவும் உயிர்ப்புடனும் இருந்தது. 

இப்போதுதான் அந்த அசாத்தியமான விஷயம் நடந்தது.  கன்னி அந்தக் கருப்பு மனிதனின் கையை எடுத்து முத்தமிட்டாள். 

“கடவுளின் புனித அன்னையே, என்னால் உங்களைத் தடுக்க முடியவில்லை.”

“பரவாயில்லை த்ரிஸ்த்தான்.  கொலை செய்த உன் கரங்களைத்தான் முத்தமிட்டேன்.  ஏனென்றும் உனக்குச் சொல்கிறேன்.  உனக்குள் கேட்ட வார்த்தைகளைச் சொன்னது நான் தான்.   ”அவனைக் கொன்று விடு, நிறுத்தாதே,                    கொன்று முடி அவனை” என்று நான்தான் உனக்குச் சொன்னேன்.

“நீங்களா, தேவமைந்தனின் அன்னையே?”

”ஆமாம் த்ரிஸ்த்தான்.  அவர்கள் என் குழந்தையைக் கொன்றார்கள்.  அவன் திரும்ப வந்தால் திரும்பவும் அவனைக் கொல்வார்கள்.  இப்படியே போய்க் கொண்டிருப்பதை என்னால் இனிமேலும் அனுமதிக்க முடியாது.  எனக்குப் பிரார்த்தனைப் பாடல்களோ, ஊதுபத்திகளோ மெழுவர்த்திகளோ தேவையில்லை.  செய்த காரியத்துக்கான பலனை அனுபவிக்க வேண்டும்.  அதற்கு நீ எனக்கு உதவினாய்.  மிக அமைதியாகக் காத்திருந்தேன்.  இப்போது எனக்குப் புரிந்து விட்டது, நான் என் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.  என் குழந்தை, என் அருமையான குழந்தை, அனாவசியமாக பலியானான்.  எப்படி அழுதேன் தெரியுமா?  அந்தத் துயரமான கதையை நான் உனக்கு எப்படிச் சொல்லுவேன்?”

“சொல்லுங்கள் அன்னையே.”

”அவனை இழந்த பிறகு என்னால் ஒருநாளும் அழ முடியவில்லை.  பளிங்கினாலும், மெழுகினாலும், மரத்தினாலும், தங்கத்தினாலும், தந்தத்தினாலும் என்னைச் செய்து வைத்து விட்டார்கள் என்பதால் என்னால் கண்ணீரே விட முடியவில்லை.  இப்படியே வாழ்ந்து விட்டேன், முகத்தில் ஒரு முட்டாள்தனமான புன்னகையோடு.  த்ரிஸ்த்தான், அவர்கள் வடித்து வைத்த மாதிரி அல்ல நான்.  நான் வேறு மாதிரி இருந்தேன்.  இத்தனை அழகானவளும் அல்ல.  உன்னிடம் சில விஷயங்களைச் சொல்லவே வந்தேன்.”

“இந்த நீக்ரோவிடம் சொல்லுங்கள் அம்மையே…”

“த்ரிஸ்த்தான், நான் இப்போது செய்யப் போவதைப் பார்த்து நீ மிரளப் போகிறாய்.”

“ஏற்கனவே மிரண்டு போய்த்தான் கிடக்கிறேன்.  ஆனால் உயிரோடு இருக்கிறேனே?”

“த்ரிஸ்த்தான்.  நான் உன் பக்கத்தில் படுத்துக் கொள்ளப் போகிறேன்.”

“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  நாக்கே எழவில்லை தாயே!”

”த்ரிஸ்த்தான், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று உனக்குத் தெரிகிறதா?  உன்னைப் போல் யாருமே என்னை இப்படிப் பிரார்த்தனை செய்ததில்லை.”

“நான் உங்களுக்காக ஒரு அருமையான பாடலைப் பாடுகிறேன்.  ஆனால் தயவுசெய்து என் பக்கத்தில் மட்டும் படுத்து விடாதீர்கள்.  நான் ஒரு பாவி.  கெட்டவன்.”

“இப்போது நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்” என்று சொல்லி விட்டு அவன் பக்கத்தில் படுத்த அவள் கேசத்திலிருந்து காலாதீதமும் கன்னித்தன்மையும் மணமாகக் கமழ்ந்து வந்தது.

“இப்போதுதான் முக்கியமான கட்டம் வரப் போகிறது த்ரிஸ்த்தான். என்னுடைய ஆடைகளை நீ கழற்ற வேண்டும்.  ஷூக்களிலிருந்து துவங்கு.  அவைதான் பெரிய சித்ரவதை.  ஏதோ இரும்பால் செய்யப்பட்டது போல் கால்களை வேதனைப்படுத்தி விட்டது.  பல நூற்றாண்டுகளாக அவற்றைப் போட்டுக் கொண்டிருந்து என் கால்களே ரணமாகி விட்டன.  அவைகளை தயவுசெய்து கழற்றி விடு த்ரிஸ்த்தான்.  இனிமேலும் அந்த வேதனையைத் தாங்க முடியாது.”

“இதோ செய்கிறேன்.  இந்தப் பாவியின் கரங்களால் உங்கள் பாதங்களை விடுவிக்கிறேன்.”

”ஓ த்ரிஸ்த்தான்…  எவ்வளவு பெரிய ஆறுதல்.  ஆனால் வேலை இன்னும் முடியவில்லை த்ரிஸ்த்தான்.  என் பாதங்களைப் பார்.  எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது.  மெழுகினால் செய்யப்பட்ட பாதங்கள்… தொட்டுப் பார்.”

“ஆமாம் தாயே, மெழுகுவர்த்திதான்.”

“இப்போது நீ இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறாய் த்ரிஸ்த்தான்.  என் மெழுகுக் காலுக்கு உள்ளே ரத்தமும் சதையுமான நிஜமான கால் இருக்கிறது.”

”புனித அன்னையே, நீங்கள் என்னைக் கொன்று கொண்டிருக்கிறீர்கள்.”

”இல்லை த்ரிஸ்த்தான்.  நான் சொல்வதை கவனமாகக் கேள்.  இந்த மெழுகுக்கு உள்ளே நான் ரத்தமும் சதையுமாக இருக்கிறேன்.”

“இல்லை என் அன்னையே, உங்கள் மேடைக்கே நீங்கள் சென்று விடுங்கள்.  இந்த நீக்ரோவுக்கு அருகில் இருட்டில் நீங்கள் படுத்திருப்பதை அவன் விரும்பவில்லை.  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உங்கள் மேடைக்கே போய் விடுங்கள்.”

”இல்லை த்ரிஸ்த்தான்.  நான் திரும்பிச் செல்லப் போவதில்லை.  ஒரு கன்னி அவளுடைய இடத்தை விட்டுக் கிளம்பி விட்டாள் எனில் அதற்குப் பிறகு திரும்பச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.  என்னுடைய மெழுகை நீதான் கரைக்க வேண்டும்.  இனிமேலும் நான் மாசற்றவளாக இருக்க முடியாது.  அவர்கள் கொன்று போட்ட குழந்தையின் உண்மையான தாய் நான்.   எனக்கு நடக்க வேண்டும்.  அழ வேண்டும்.  வெறுக்க வேண்டும்.  நான் ரத்தமும் சதையுமாக வாழ விரும்புகிறேன்; ஜீவனில்லாத உறைந்து போன மெழுகுச் சிலையாக அல்ல.”

”எப்படி இந்த மெழுகை உருக்குவேன், என்னருமை சீமாட்டி?”

”என்னைத் தொடு த்ரிஸ்த்தான்.  தழுவிக் கொள்.  கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன் கைகள் செயலற்று இருந்தன.  நான் முத்தமிட்ட பிறகு அவை இயங்க ஆரம்பித்து விட்டன.  உன்னுடைய ஸ்பர்ஸம் என்னை என்ன செய்கிறது என்று பார்.  ஆரம்பி.  கால்களைத் தொடு.  மெழுகு உருக ஆரம்பிப்பது தெரியும்…”

”ஆமாம் என் வைரமே, உன் கால்களைத் தொட்டதும் மெழுகு கரைகிறது.”

“இப்போது என் நிஜ கால்களைத் தொடு த்ரிஸ்த்தான்…”

”ஆம்.  இந்தப் பாதங்கள் மலர்களால் செய்யப்பட்டது போல் இருக்கின்றன.”

”ஆனால் அது போதாது.  மற்றவற்றையும் விடுவி.”

“இல்லை, என்னால் முடியாது.  இந்த நீக்ரோ ரொம்பவும் பயந்து விட்டான்.”

“த்ரிஸ்த்தான்.  ஆரம்பித்ததை முடி.”

“முழங்கால் வரை வந்து விட்டேன் சீமாட்டி.  இந்த நீக்ரோவின் காட்டுமிராண்டித்தனமான காரியத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். என் கைகளையும் வெட்டி விடுங்கள்.  ஒரு புனித மலரின் தண்டைத் தொட்டு விட்ட என் கைகள் என் உடம்போடு ஒட்டியிருக்கக் கூடாது.”

ஒரு பேரிடி இடித்தது.  ஜன்னல் கதவுகள் மிகவும் சப்தமாக அடித்துக் கொண்டன.  அந்த இல்லமே பேரலைகளில் மாட்டிக் கொண்ட கப்பலைப் போல் ஆடியது. 

“இந்த இரவைப் பற்றிக் கேள்விப்பட்டாயா?  இந்த இரவு எப்படி இருக்கிறது என்று பார்த்தாயா?  விடிவதற்குள் என்னை நீ விடுவித்தாக வேண்டும்.  என் தொடைகளின் மெழுகை உருக்கு.  சீக்கிரம்.  என் கால்கள் பூராவும் எனக்குத் திரும்பவும் வேண்டும்.”

”கன்னி ஸ்த்ரீயே… இதோ உன் தொடைகளையும் உயிர்ப்பித்து விட்டேன்.  போதும், என்னை விட்டு விடு.  என் கண்ணீரைப் பார்.  இந்த நீக்ரோவின் ரத்தம்தான் கண்ணீராய் வழிகிறது.”

“த்ரிஸ்த்தான், இந்த வீடு மீண்டும் ஆடுவதை உணர்கிறாயா? என் தொடைகளைப் பற்றிக் கவலைப்படாதே.  என்னை முழுமையாக உருக்கு…”

“இப்போது நாம் மொக்கின் அருகே நின்று கொண்டிருக்கிறோம்.  பூட்டப்பட்ட தோட்டம்.  என்னால் முடியாது.  நான் அதைச் செய்யக் கூடாது.”

“தொடு த்ரிஸ்த்தான்.  தொடு.  குறிப்பாக அதைத்தான் தொட வேண்டும்.  அங்கே உள்ள மெழுகு உருகி விட்டதானால் அதற்கு மேல் நீ எதுவும் செய்ய வேண்டாம்.  அதற்குப் பிறகு என் மார்பகங்களும் முதுகும் வயிறும் தானாக உருகி விடும்.  தொடு த்ரிஸ்த்தான்.  நீ அதைத் தொட வேண்டும்.”

“இல்லை என் சீமாட்டி. அந்தத் தங்க மொக்கை நான் தொட மாட்டேன்.”

“நீ தொட்டாலும் தொடாவிட்டாலும் அது அதுவாகவேதான் இருக்கும்.  நீ தொட்டு விட்டதால் அது மாறிப் போய் விடுமா?”

”அது மட்டும் வெறும் தொடுதலோடு விடாது என் பெண்ணே… அது என்னை, இந்தப் பைத்தியக்கார நீக்ரோவின் ரத்தத்தையே ஒட்டு மொத்தமாக உறிஞ்சிக் கொண்டு விடும்.  கண்ணீருடன் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்… வேண்டாம்.”

“செய்.  என் கண்களைப் பார்த்துக் கொண்டே செய்.”

பிறகு அந்தக் கறுப்பன் வர்ஜினை நோக்கித் தன் கண்களை உயர்த்தினான்.  அங்கே அவன் கண்டது:

(இந்த இடத்தில் உங்களிடம் நான் – சாரு – இடைச் செருகலாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  இந்தக் கதையை இங்கே நான் மொழிபெயர்க்கவில்லை.  மொழிபெயர்க்க வேண்டுமானால் அதற்கே ஒரு நாலைந்து நாட்கள் வேண்டும்.  முழுமையாக.  அது இப்போதைக்குத் தேவையும் இல்லை.  இந்தக் கதையை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பியதன் காரணம், கிறித்தவத்தின் எதிர்மறை விஷயங்களைப் பற்றிப் பேசுகிற போது அதில் உள்ள முக்கியமான – மற்ற மதங்களில் பார்க்கக் கிடைக்காத கருத்துச் சுதந்திரம் என்ற விஷயத்தையும் சிலாகிக்க வேண்டும்.  இது வேறு எந்த மதத்திலும் இல்லை.  இந்து மதத்தில் ஓரளவு இருந்தது.  கடவுளே இல்லை என்று சொல்பவர்களையும் சித்தர் வரிசையில் வைத்தது இந்து மதம்.  ஆனால் அந்த சகிப்புத்தன்மையை இந்து மதம் இப்போது இழந்து விட்டது.  கிறித்தவம் அதை இன்னும் இழக்கவில்லை.  இந்தக் கதையை நான் 35 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு லத்தீன் அமெரிக்க சிறுகதைத் தொகுப்பில் படித்தேன்.  ஒரு சினிமாவைப் போல் இதன் காட்சிகள் என் மனதில் பதிந்து விட்டன.  கிறித்தவம் இப்படி ஒரு கதையை அனுமதிக்கிறது.  கலைஞர்களுக்கு அதில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது.  மற்ற மதங்களில் எழுதியிருந்தால் எழுதியவரின் உயிர் இருக்காது.  கிறித்தவம் இதை சகித்துக் கொண்டது.  எழுத்தாளனுக்கான சுதந்திரத்தை நல்கியது.  கிறித்தவத்தின் மதமாற்றம் என்ற விஷயத்தை விமர்சித்து எழுதிக் கொண்டிருந்தேன்.  அது கூட எதற்கு என்றால், பல கிறித்தவர்கள் இந்து மதத்தின் சாதிப் பிரிவினை பற்றி பிரதானப்படுத்துவதால்.  எல்லா மதங்களிலும் மனித விரோதப் போக்குகள் இருந்தன, இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக இதை ஆரம்பித்தேன்.  மற்றபடி நானும் ஒரு கிறிஸ்துவின் ஊழியன்தான்.  கிறிஸ்து என்ற நபரே இல்லை என்று சென்ற வாரம் ஒரு கட்டுரை என் பார்வைக்கு வந்த போது ஒரு நாள் முழுதும் செலவிட்டு கிறிஸ்து இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஆய்வுகளை முகநூலில் பதிவு செய்தேன்.  ஆனால் என் பிராது என்னவென்றால், இந்தியாவைக் கொள்ளை அடிக்க வந்த வெள்ளைக்கார நாய்கள் இந்தியனைப் பார்த்து நீ காட்டுமிராண்டி என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்பதுதான்.  அடுத்த வீட்டில் போய் நீங்கள் திருடுவீர்களா?  அப்படியானால் ஒரு நாட்டையே பிடித்து கொள்ளையடிப்பதென்றால், அவனை எப்படி அழைக்க வேண்டும்?  திருடன் என்றுதானே?  ஐரோப்பியர்கள் ஒரு ஐம்பது ஆண்டு வரை கூட வெளிநாடுகளில் போய் ஆட்சியைப் பிடித்துக் கொண்டு திருடினார்கள்.  ஸ்பெய்ன், போர்த்துகல், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் அந்தத் திருட்டுக் கூட்டம்.  அந்தத் திருட்டின் விளைவைத்தான் அவர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.  லண்டனின் ஒரு தெருவில் தாடி வைத்த ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம் (பாகிஸ்தானியர்) எங்கள் மாவட்டத்தில் மதுபானம் விற்கக் கூடாது என்று மதுபானக் கடைகளையெல்லாம் அடித்து நொறுக்கும் காணொளி ஒன்றைப் பார்த்து முதலில் ஆச்சரியமும் கோபமும் அடைந்தேன்.  யார் நாட்டில் போய் யார் அதிகாரம் பண்ணுவது என்று.   ஆனால் உடனேயே “அனுபவிடா அனுபவி” என்றே குரூரமாகத் தோன்றியது.  வெள்ளைக்கார நாய்கள் இங்கே வந்து மூன்று                     நூற்றாண்டுகள் ஆட்டம் போட்டார்கள் அல்லவா?  இப்போது அனுபவிக்கட்டும்.  இதேதான் ஃப்ரான்ஸில் நடக்கிறது.  பாரிஸின் பல பகுதிகள் அல்ஜீரியர்களாலும், மொரோக்குகளாலும் நிரம்பி வழிகிறது.  பாரிஸின் பல பகுதிகள் ஆஃப்ரிக்க நகரைப் போல் தோற்றம் தருகின்றன.  பாரிஸின் கன்னிப் பெண்கள் டிஸம்பர் 31 புத்தாண்டு தினத்தன்று சாம்ப்ஸ் லீஸேயில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கிறார்கள் என்று பாரிஸ் நகரப் பெரியவர்கள் கவலைப்படுகிறார்கள்.    அந்நிய மண்ணில் சுரண்டச் சென்றதால் வந்த வினை. 

எனவே நான் எந்த மதத்தின் ஆதரவாளனும் இல்லை; எதிர்ப்பாளனும் இல்லை.  இந்தக் கதையை யாரேனும் நல்லபடியாக மொழிபெயர்த்தால் நலம்.  ஒரு பெண் மொழிபெயர்த்தால் மேலும் சிறப்பு.  இங்கே நான் கொடுத்திருப்பது மொழிபெயர்ப்பு அல்ல.  அந்தக் கதையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.  அந்தக் கதையைச் சொல்கிறேன், அவ்வளவுதான்.)

இனி கதையைத் தொடர்வோம்:

பிறகு அந்தக் கறுப்பன் வர்ஜினை நோக்கித் தன் கண்களை உயர்த்தினான்.  அங்கே அவன் கண்டது: Two forget-me-nots sparkling with celestial fire, like a breath of a chimera.  அதன் பிறகு அவனால் பணியாமல் இருக்க முடியவில்லை.  அவள் அவனை விழுங்கப் போகிறாள் என்பதை அவன் உணர்ந்தான்.

“எனக்குத் தெரியும்.  எனக்குத் தெரியும். ஏன் இதைச் செய்தேன்?  ஏன் அதைத் தொட்டேன்?  இப்போது நான் அதன் உள்ளே நுழைய விரும்புகிறேன்.  அந்தத் தோட்டத்தின் ஈரத்தில் நான் மூழ்கி விட விரும்புகிறேன்.  இந்த ஏழை நீக்ரோவுக்கு வேறு வழியில்லை.  இப்போது இந்த நீக்ரோவைப் பார் சீமாட்டி, அவன் உடல் எப்படி நடுங்குகிறது என்று, எப்படி அவன் ரத்த அழுத்தம் அவன் குரல்வளையை நசுக்கப் போகிறது என்று.  நான் அதைத் தொடக் கூடாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.  அந்தத் தடை செய்யப்பட்ட வளையத்துக்குள் நுழைந்த நீக்ரோ அவன் பெருமை அழிந்து அந்த வளையத்திலிருந்து வெளியே வர முடியாமல் சாகப் போகிறான்.”

“இல்லை த்ரிஸ்த்தான் இல்லை.  நீ ஒரு மகத்தான காரியத்தைச் சாதித்திருக்கிறாய்.  அது என்ன என்று உனக்குத் தெரியுமா?”

“தெரியும், நன்றாகத் தெரியும்.”

”இல்லை, உனக்குத் தெரியாது.  நீ ஒரு வர்ஜினை உருக்கி விட்டாய்.  இப்போது உனக்கு என்ன தேவை என்பது முக்கியம் அல்ல.  ஒரு ஆண் மகனுக்கு ஒரு வர்ஜினை எப்படி உருக்குவது என்று தெரிந்திருந்தால் போதும்.  அதுதான் ஒரு ஆணுக்குப் பெருமை.”

“இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அறிவு இந்த நீக்ரோவுக்கு இல்லை.  அதெல்லாம் சொர்க்கத்திலிருந்து வந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.”

“த்ரிஸ்த்தான்.  உனக்குத் தெரியாத இன்னொரு விஷயம்.  நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.”

அந்தக் கறுப்பன் அந்தப் பெண்ணின் மார்பகங்களில் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தான். 

“ஆ, புரிந்து விட்டது.  என்னை அவர்கள் கொல்லப் போகிறார்கள்.  அவர்களின் படைப்பில் நான் கை வைத்து விட்டேன்.  நான் இங்கிருந்து தப்பி விடுகிறேன்.  என்னை விடு.  இங்கிருந்து ஓடி விடுகிறேன்.”

“கத்தாதே த்ரிஸ்த்தான்.   தூங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் எழுந்து விடப் போகிறார்கள். அமைதியாக இரு.  இனிமேல் உன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.   காற்றின் ஓசை உனக்குக் கேட்கிறதா?  இந்த இல்லம் ஏன் விழவில்லை என்றால் இங்கே நான் இருக்கிறேன்.  ஆனால் நான் இங்கே இருந்தாலும் அதை விட மோசமான ஒன்று நடக்கலாம்.”

“என்ன அது?”

”அவர்கள் நாள் பூராவும் தேடினார்கள்.  இந்த இடம்தான் மிச்சம்.  இன்னும் ஓரிரு நிமிடங்கள் அவர்கள் இங்கே இருப்பார்கள்.  நிச்சயம் வருவார்கள்.  ஏனென்றால், நீ அந்த மனித மிருகத்தைக் கொன்று விட்டாய்.  நீ அம்மணமாக இந்தப் படுகுழியில் சாவதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை.  நிச்சயம் அவர்கள் உன்னை இழுத்துக் கொண்டு போவார்கள்.”

”அன்னையே, நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.”

”கவலைப்படாதே, அப்படி நடக்க விட மாட்டேன்.  எப்படி விடுவேன்.  என் மெழுகு உருவத்திலிருந்து வெளியே வர நீதானே உதவி செய்தாய்?  உன்னை எப்படிக் கை விடுவேன்?”

“அவர்கள் என்னைப் பிடிப்பதை எப்படி நீ தடுப்பாய்?”

“அந்த சாளரத்தின் வழியே நான் வெளியே போக வேண்டும்.  இப்போது எனக்குக் கால்கள் இருக்கின்றன.  நீதான் எனக்குக் கால்களைக் கொடுத்து விட்டாயே?”  அவள் கிசுகிசுக்கும் குரலில் சொன்னாள்: “அவர்கள் கதவைத் தட்டுவார்கள்.  எத்தனை முறை தட்ட வேண்டும் என்று உனக்குத் தெரியும்.  நான்காவது முறை தட்டும் போது அந்த வெள்ளை மனிதன் எழுந்து போவான்.  அவர்கள் உன்னைப் பிடிக்க வருவார்கள்.  நான் அப்போது இருக்க மாட்டேன்.  நீ சாகாமல் இருந்தால் உன்னையும் அழைத்துக் கொண்டு போவேன்.  ஜன்னல் வழியாக இரண்டு பேரும் குதித்து விடுவோம்.  ஆனால் இந்த விஷயங்களில் நம் பிதா என்னை விடத் திறமையானவர்.  எனவே உன் மரணத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது.  அதனால் அவர்கள் உன்னை உயிரோடு பிடிக்காமல் இருக்க வழி பண்ணுவேன்.”

”அப்புறம் அன்னையே?”

“இந்த இல்லத்தில் நான் இல்லாவிட்டால் என்ன ஆகும்?”

”கேள்.  அவர்கள் கதவைத் தட்டுகிறார்கள்.  முதல் தட்டு.”

“சரி, அடுத்த தட்டில் நாம் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.”

அடுத்த தட்டுக்கு முகத்தில் வெட்டுக்காயம் கொண்ட மனிதன் லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு எழுந்தான்.  கறுப்பன் வர்ஜினை இறுகப் பற்றிக் கொண்டான்.  அவளுடைய நிஜமான கூந்தலை முகர்ந்தான்.  தன் முகத்தை அவளுடைய கன்னத்தில் வைத்து அழுத்தினான்.

மூன்றாவது தட்டு.  லாந்தர் விளக்கு மனிதன் கதவின் அருகே சென்று விட்டான்.  இது வழக்கமான தட்டு அல்ல.  யாரோ துப்பாக்கியால் கதவை இடிக்கிறார்கள். 

அந்தத் தருணத்தில் அந்தப் பெண் பக்கவாட்டு ஜன்னலைத் திறந்து கொண்டு தேய்பிறை காற்றில் நழுவிச் செல்வது போல் வெளியே சென்று இருளில் மறைந்தாள். 

”அன்னையே, அன்னையே, என்னை விட்டு விடாதீர்கள்.  இது நாலாவது தட்டு.  அவர்கள் கொடுக்கும் மரணம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.  அதை விட வேறு எந்த மரணமும் பரவாயில்லை.”

”வாயை மூடு, முட்டாள் நீக்ரோ.  உன்னால்தான் அவர்கள் வந்திருக்க வேண்டும்.  சந்தேகமே இல்லை.”

அப்போதுதான் அது நடந்தது. அவர்கள் புயலைப் போல் உள்ளே                    நுழைந்தார்கள்.  லாந்தர் விளக்குகளை மேலே தூக்கிப் பிடித்தபடி தரையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை உதைத்துக் கொண்டு வந்தார்கள்.  அப்போது அந்த நரகத்தின் காற்று அடித்தது.  கட்டிடம் அந்த இரவில் முன்பு ஆடியது போலவே ஆடியது.  ஆனால் அந்த இல்லத்தில் வர்ஜின் இனி இல்லை.  அவ்வளவுதான்.  உலகமே இடிந்து விழுவதைப் போல் விழுந்தது.

திடீரென்றுதான் அது நடந்தது.  யாரும் மிஞ்சவில்லை.  தேடப்பட்டவன், தேடியவன், கூட இருந்தவன் ஒருவரும் பிழைக்கவில்லை. 

மழை நின்று போயிருந்தது.  காற்றுதான் இன்னும் பலமாக வீசியது.  பேரழிவின் தூசிகளையும் அடித்துக் கொண்டு போனது. 

***

இப்படி ஒரு கதையை அனுமதித்ததற்காக கிறித்தவத்துக்கு என் வந்தனம். 

இந்தக் கதையின் ஆரம்பத்தை நேற்று பதிவேற்றம் செய்திருந்தேன்.  இப்போது கதையின் மீதி.  நேற்றைய பதிவைப் படித்து விட்டு வாசக நண்பர் அர்ஜுன் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  இவருடைய வேறோர் கடிதம் ஒன்றை முன்பு வெளியிட்டிருந்தேன்.

Dear Charu,Sir  

பூச்சி – 36 is a treasure trove , being so vivid and descriptive  your one blog post equals 6 months of a college lecture , because after one reads your post you provide them enough literary references to keep them occupied for the next one year that too in just one blog post. 

After reading பூச்சி – 36 I’ve come to know about the significance of Radwa Ashour’s Granada trilogy . I’ve loved her works like The woman from tantoura and blue lorries and I’d also kindly suggest you to have a look at 

Elena Garro’s Recollection of things to come and Radwa Ashour’s  book Arab woman writers (541 pages) it’s her version of பழுப்பு நிறப் பக்கங்கள் where she writes about important Arabic woman writer from 1873 to 1999 . That’s how I got to know about several important Arabic writers , please do check it out if you find time.

Can’t wait for the book stores to open so that I can rush and buy Granada trilogy and ship of fools.

Also got to learn about Armonia Somers , Silvina Ocampo, Luisa Valenzuela , Cristina Peri Rossi.

Thanks a ton.

Beloved reader ,

Arjun.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai