பூச்சி 68

ராம்ஜிக்கும் காயத்ரிக்கும்.  பூச்சி தொடரை புத்தகமாக வெளியிடும்போது 68-இல் எதுவும் எழுதாமல் கொடுத்திருந்த புகைப்படத்தை அட்டையில் போடலாம் என்பது என் ஆலோசனை.  ஒரு பெண்ணின் தலைச்சுமையோடு நாயும் சேர்ந்து செல்லும் புகைப்படம்.

நேற்று விகடனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.  160 சொச்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதால் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய குறிப்பு அது.  விகடனைப் புறக்கணிக்க வேண்டும்; விகடனில் இனி நான் எழுத மாட்டேன் என்பது போன்ற வீரப்பிரகடனங்களைக் கொண்ட குறிப்பு.  பின்னர் அராத்து மற்றும் ராஜேஷின் பதிவுகளைப் பார்த்து வேறு விதமாக யோசித்தேன்.   இது குறித்து அராத்து அவரது அழகு தமிழில் எழுதிய பதிவு கீழே:

நிறைய நிறுவனங்களில் வேலையை விட்டு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விகடன் ஒரு பத்திரிகை , அறம் பேசி அநீதி எதிர்த்து எழுதி வந்ததால் இது மிகவும் பேசப்படுகிறது. அறம் பேசுவதும், அநீதியை எதிர்ப்பதுமே ஒரு பிஸினஸ் ஆகி பல வருடங்கள் ஆகின்றன.

வேலை பறிபோனவர்கள் எல்லோரும் ரிப்போர்ட்டர்ஸ் என்ற புரிதல் பலருக்கும் இருக்கும். அதனால்தான், இவ்வளவு பெரிய எதிர்ப்பு. வேலை பறி போனவர்களில், சேல்ஸ், மார்கெட்டிங், அட்மின், அக்கவுண்ட்ஸ்  என பலதரப்பட்ட ஆட்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதுவே முருகப்பா குழமத்தில் இருந்தோ, கோல்ட் வின்னர் கம்பனியில் இருந்தோ, 200 சேல்ஸ், மார்கெட்டிங்க், அட்மின், அக்கவுண்ட் ஆட்களைத் தூக்கி இருந்தால் யாரும் பேசி இருக்க மாட்டார்கள்.

தமிழகம் முழுக்க , இதைப்போல நிறைய பேருக்கு வேலை போய் இருக்கிறது, போகும். மாதச் சம்பளம் அல்லாமல், சொந்த வேலை செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என பலருக்கும் வேலை இல்லை.

இந்த போஸ்டின் தொனி மறைமுகமாக விகடனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல சிலர் எண்ணலாம். என் நோக்கம் அதுவல்ல. ஏன் என்றால் விகடனும் ப்யூர் பிஸினஸ் கம்பனியாக மாறி பல நாட்கள் ஆகின்றன. அதை மற்றும் ஒரு வியாபார நிறுவனமாக மட்டுமே நான் பார்க்கிறேன்.

எஸ்.பாலசுப்பிரமணியன் இருந்த போது இருந்த, வியபாரத்தைத் தாண்டிய எந்த வேல்யூவும் இப்போது இல்லை.

ஒரு வியாபார நிறுவனம் இப்படித்தான் இயங்கும். விகடனையும் நாம் மற்ற வியாபார நிறுவனங்களில் ஒன்றாக வைத்துதான் மதிப்பிட வேண்டும்.

ஆனால் விகடன் பக்கம் இருந்து பார்த்தால் இந்த விமர்சனங்களும், போராட்டங்களும் அவர்களுக்குத் தேவைதான். அறம், நீதி, சமூக ஆர்வம், மக்கள் நலன் என இதையெல்லாம் வைத்து வியாபாரம் செய்தால் இப்படித்தான் திருப்பித் தாக்கும்.

ஜெட் ஏர்வேய்ஸ் சில பணியாளர்களை வேலையை விட்டுத் தூக்கியது. உடனே அவர்கள் ராஜ் தாக்கரேயைப் போய்ப் பார்த்தார்கள். அவர் கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டல் விடுத்தார். இவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள வில்லை என்றால், மும்பை மீது எந்த ஜெட் ஏர்வேஸ் விமானமும் பறக்க முடியாது என்றார். ஜெட் அவர்களை மீண்டும் சேர்த்துக்கொண்டது.

சில மாதங்களில், ஜெட் ஏர்வேய்ஸ் மொத்தமாக ஊத்தி மூடி விட்டுப் போனது. ராஜ் தாக்கரேயைப் போய் இப்போது பார்க்க முடியுமா? போராட முடியுமா?

உண்மை சில நேரங்களில் கசக்கும்.

வேலை போனவர்களுக்காக மனமார கவலைப் படுகிறேன். போராட்டம், விமர்சனம் எல்லாம் வேலைக்காகாது. ப்ராக்டிக்கலாக, வேறு நல்ல வேலை தேடுவதுதான் தீர்வு!

***

மேற்கண்ட அராத்துவின் பதிவில் ப்ராக்டிகலாக, வேல்யூ போன்ற செந்தமிழ்ச் சொற்கள் தென்றலைப் போல் செவிதனைத் தீண்டினாலும் அதில் உள்ள ஒரு கருத்து என்னை மிக மிக ஈர்த்தது.

அது, அறம்/சமூகநீதி போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்தால் அது நம்மையேதான் திருப்பித் தாக்கும்.  உண்மையில் அச்சு ஊடகங்களுக்கு இப்போது வேல்யூ – சீ – மதிப்பு இல்லை.  அவற்றின் காலம் முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது.  இருபது ஆண்டுகளுக்கு முன் விகடனில் ஒரு தொடர் எழுத அழைத்திருந்தால் அதற்காக நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்திருப்பேன்.  அச்சு ஊடகத்தின் ரீச் – சீ – வீச்சு அப்போது அப்படி இருந்தது.  இப்போது அழைத்தால் யோசிப்பேன்.  நேரம் இல்லையே என்று சொல்லித் தட்டிக் கழிப்பேன்.  இப்போதைய காலம் இணையம்தான்.  இதே விகடனை இணைய இதழாக பலரும் வாசிக்கிறார்கள். 

இதே விஷயத்தைப் பற்றி ராஜேஷும் ஒரு பதிவு எழுதியிருந்தார்.  அது கீழே:

நான் சாஃப்ட்வேர் துறையில் இருந்து வந்தவன். அதில் 12 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு, அதன்பின் திரைப்படங்களில் பணிபுரியவேண்டும் என்ற விருப்பத்தால் ஐந்து வருடங்களுக்கு முன் வேலையை விட்டுவிட்டு வந்தவன். உண்மை இதுதான். என் கண்முன்னர் நான் பார்த்த ஆட்குறைப்புகள் ஏராளம். குறிப்பாக ரிசெஷன் ரிசெஷன் என்று ஒரு வார்த்தை அவ்வப்போது அடிபடுமே? அப்போதெல்லாம் சர்வசாதாரணமாக சீட்டுகள் கிழிபடும். நோட்டீஸ் பீரியட் என்பது பல சமயங்களில் ஒரு வாரத்தில் இருந்து துவங்கும். வேலையில் இருந்து எடுக்கப்பட்டவர்களில் மிகத் திறமைசாலிகளும் உண்டு. அதேசமயம் பெஞ்ச்சைத் தேய்த்தவர்களும் உண்டு. அந்தப் பன்னிரண்டு வருடங்களில் நூற்றுக்கணக்கான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி வேலை இழந்த நண்பர்களைத் தேற்றியிருக்கிறேன். அவர்களுடனேயே நேரம் செலவழித்திருக்கிறேன். ஒருமுறை என் தலைக்கே இந்தக் கத்தி வந்தும் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அப்போதுதான் என் கையில் இன்னொரு ஆஃபர் இருந்ததால் பெரிதாக அதன் பாதிப்பு தெரியவில்லை.

அப்போதெல்லாம் எனக்குப் புரிந்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு ஒன்றில், மக்களின் உயிருக்குக் கூடப் பாதுகாப்பு இல்லாததே நிதர்சனம். வேலை என்ற ஒன்றில் சேரும்போதே, அடுத்தநாளே நமக்கு வேலை இருக்காது என்று நினைத்துக்கொண்டு பணிபுரிவதே நம் மனதில் இருக்கும் பிரஷரைக் குறைக்கும். இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நீங்கள் எதிரே பார்க்க முடியாது. கசக் என்று வெட்டு விழும். இத்தனைக்கும் அப்ரைசலில் நல்ல ஸ்கோர் கிடைத்திருக்கவும் கூடும் (இந்த அப்ரைசல் என்பது ஒரு மிகப்பெரிய டுபாக்கூர். அதைப் பற்றித் தனியாக எழுதவேண்டும்)

இது வேலை குறைப்புக்கான நேரம் என்று ஜெகா ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன். காரணம் இப்போதைய காலகட்டத்தில், அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரம் என்பது கொடூரமானது. லாபத்தைக் குறிவைத்து இயங்குவது என்பதுதான் நிறுவனங்களின் நோக்கம். அதில் அடி விழும்போது வேலைகுறைப்புகள் நடந்தே தீரும். அப்படி வேலையில் இருந்து தூக்கப்படுபவர்களின் ஆதங்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது. விகடன் பலரையும் வேலையில் இருந்து எடுத்தது பற்றிய செய்திகளை சற்றுமுன்னர்தான் படித்தேன்.

ஆனால் இப்படிப்பட்ட அனுபவம் இங்கு பலருக்கும் இல்லாமல் இருக்கலாம். அதாவது, சாஃப்ட்வேரில் நான் எப்படி தினமுமே வேலையில் இருந்து தூக்கப்படுவது, அப்படிப்பட்ட அறிவிப்புகள் என்று பார்த்தே 12 வருடங்கள் காலம் தள்ளியதைச் சொல்கிறேன். கார்ப்பரேட்கள் என்றுமே கார்ப்பரேட்கள்தான். வேலையில் இருந்து தூக்குவது அவர்களது தாரக மந்திரங்களில் ஒன்று. இதற்கு சாஃப்ட்வேர் உட்பட எந்தத் துறையும் விதிவிலக்கில்லை. மிக விரைவில் இன்னும் அதிகமான ஆள்குறைப்புகள் நடக்கும் என்பதுதான் உண்மை. இதற்கு எந்தத் துறையும் விதிவிலக்கு இல்லை.

என்னளவில் ஒன்றே ஒன்றைச் சொல்லமுடியும். எப்போதுமே, நம் ஒவ்வொருவருக்கும் ப்ளஸ் பாயிண்ட் ஒன்று இருக்கும். இருந்தே தீரும். அதைத் திறம்படச் செய்வதில் பணம் வரும் வழியை நாம் உருவாக்கிக்கொண்டால் அதுவே போதும். தண்டமான என்னாலேயே அதைச் செய்ய முடிந்ததால், அனைவராலும் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். I could totally empathize on everyone who have been laid off in these difficlult times.

***

மேற்கண்ட இரண்டு பதிவுகளையும் படித்த பிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.  சரவண பவன் ஓட்டலில் – அல்லது, விப்ரோ நிறுவனத்திலிருந்து 500 பேரை வேலையை விட்டுத் தூக்கினால் அது பற்றி நான் கட்டுரை எழுதப் போகிறேனா என்ன?  விகடன் எல்லாம் நமது நாஸ்டால்ஜியா.  ஒரு நல்ல கதை வந்தால் அந்த எழுத்தாளரின் வீட்டுக்கே போய் ஒரு பணக்கட்டைக் கொடுத்து விட்டு வந்த பாலசுப்ரமணியன் என்ற கலாரசிகரின் ஞாபகம் இன்னும் மனதில் நின்று கொண்டிருப்பதால் ஏற்பட்ட கோபம்.  என் சரித்திரம் என்ற ஒரு சுயசரிதைக் காவியம் தொடராக வந்த பத்திரிகை ஆயிற்றே என்ற ஆதங்கம்.  அவ்வளவுதான்.  விகடனும் ஒரு கார்ப்பொரேட் நிறுவனம் ஆகி இருபது ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை நேற்று மறந்து போனேன்.

நேற்று எழுதியதை இன்று திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.  உடனே விகடனுக்கு ஜால்ராவா என்று கேட்காதீர்கள்.  விகடனில் நான் 20 ஆண்டுகளாக ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டவன்.  அதனால் “இனிமேல் இந்தியாவை நம்மால் சமாளிக்க முடியாது” என்று சுதந்திரத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டுப் போன பிரிட்டிஷ்காரர்களின் நிலையில் இருக்கும் விகடனில் எழுதி இனிமேல் எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.  அதை விட சாருஆன்லைனுக்கு ரீச் – சீ, அராத்து இன்று என்னை ரொம்பவே பாதித்து விட்டார் – வீச்சு அதிகம்.  ஆனால், வாரம் ஐயாயிரம் கொடுத்தால் எழுதலாம்.  மாசம் இருபதாயிரம் என்பது என்னைப் போன்ற ஒரு ஏழை எழுத்தாளனுக்குக் கணிசமான தொகைதான். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai