பூச்சி 86

நாளை காலை (இந்திய நேரம்) ஏழிலிருந்து எட்டு வரை காயத்ரியின் ஃப்ரெஞ்ச் வகுப்பு உள்ளது.  ஒரு மணி நேர வகுப்பு.  வாரத்தில் இரண்டு நாட்கள்.  ஆன்லைன் வகுப்பு என்பதால் நான் என்னுடைய தளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.  ஒவ்வொரு மாணவருக்கும் விசேஷ கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாள் காயத்ரி. மாலையிலும் ஏழிலிருந்து எட்டு வரை இன்னொரு வகுப்பு உள்ளது.  மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என அறிகிறேன்.  விபரங்கள் தேவையெனில் எழுதிக் கேட்கலாம்.  gayathriram53@gmail.com

1980-ஆம் ஆண்டு தில்லியின் சவுத் எக்ஸ்டென்ஷனில் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் ஃப்ரெஞ்ச் வகுப்பில் சேர்ந்து வெளியேறியது எனக்கு ஞாபகம் வருகிறது.  தில்லிக்குப் போய் இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன.  தில்லிக்குப் போகலாம் என்று முடிவு செய்ததற்குக் காரணமே தமிழ்நாட்டில் பொங்கி எழுந்து கொண்டிருந்த திராவிட அலைதான்.  காலகட்டத்தை கவனியுங்கள்.  நான் தில்லி சென்றது 1978.  தமிழ்நாட்டில் நிலவிய திராவிட கலாச்சாரம் எனக்கு உவப்பாக இல்லை.  எல்லோரும் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் ரவி ஷங்கரின் சிதார் கேட்டதெல்லாம் வெறும் இசை ரசனையின்பாற்பட்டதன்று.  அதெல்லாம் ஒரு எதிர்ப்புக் குரலின் அம்சம்தான்.  இதையெல்லாம் தூண்டி விட ஜெயகாந்தன் என்ற ஒரு திராவிட எதிர்ப்பு ஆளுமையும் இருந்தார்.  இந்தி, சம்ஸ்கிருதம் படித்ததும் இந்த திராவிட எதிர்ப்பு அரசியலின் ஒரு வெளிப்பாடுதான்.  நைனா எல்லா தெலுங்குக்காரர்களையும் போல தீவிர திமுக.  தீவிர பகுத்தறிவு.  அதனால் இயல்பாகவே நான் பகுத்தறிவுக்கும் எதிர்ப்பாகவே இருந்தேன்.  (என் பெயரை கவனியுங்கள்.  நைனா வைத்த பெயர் அறிவழகன்.  நான் சூட்டிக் கொண்ட பெயர் நிவேதிதா). 

ஆக, அந்த திராவிட அரசியல் சூழலில் என்னால் தமிழ்நாட்டில் தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.  தமிழ்நாட்டு சூழல் பிடிக்கவில்லை என்றால் அது ஏன் தில்லிக்குப் போக வேண்டும்?  தில்லியில்தான் எனக்குப் பிடித்த எல்லா எழுத்தாளர்களும் இருந்தார்கள்.  வெங்கட் சாமிநாதன், ஆதவன், க.நா.சு., தி. ஜானகிராமன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், சுஜாதா மற்றும் பலர்.  இவர்கள் அத்தனை பேரும் பிராமணர்கள் என்பதையும் கவனியுங்கள்.  ஏன் ஜாதியைக் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ்நாட்டில் திராவிட எழுச்சியின் போது பிராமணர்களால் இங்கே வாழ முடியாமல் போனது.  அதற்கான சூழலே இங்கு இல்லை.  எனக்குத் தெரிந்த ஒரு பிராமணர் விற்பனை வரி இலாகாவில் அதிகாரியாகச் சேர்ந்து விட்டு பட்ட பாட்டை கதைகதையாய் விவரிப்பார்.  அப்போதெல்லாம் பிராமணர்கள் பம்பாய்க்கும் தில்லிக்கும் புலம்பெயர்ந்து சென்று கொண்டேயிருந்தார்கள்.  தில்லியில் கரோல் பாக், பம்பாயில் மாதுங்கா பகுதியெல்லாம் தமிழர் குடியிருப்பாக மாறியதெல்லாம் அப்படித்தான்.  தமிழர் குடியிருப்பு அல்ல; பிராமணர் குடியிருப்பு என்று சொல்வதே தகும். மும்பைக்குச் சென்ற பிராமணர்கள் தனியார் துறையையும் தில்லிக்குச் சென்றவர்கள் செக்ரடேரியட்டையும் ரொப்பினார்கள்.  செக்ரடேரியட் முழுக்கவும் தமிழ் பிராமண குமாஸ்தாக்கள்தான்.   விரைவிலேயே துறை ரீதியான பரீட்சைகளை எழுதி அண்டர் செக்ட்ரி டெப்டி செக்ட்ரி  வரை சென்றார்கள்.  அங்கேயெல்லாம் செக்ரடரியை செக்ட்ரி என்றுதான் சொல்வார்கள்.  எல்லா விபரங்களையும் நீங்கள் ஆதவனின் கதைகளில் காணலாம்.  பிரித்து மேய்ந்திருப்பார்.  அவர் கதைகள் எல்லாமே சௌத் ப்ளாக்கை சுற்றித்தான் நடக்கும்.  இப்படி தில்லிக்குச் சென்ற நான் – நான் தான் யாரோடும் சேர மாட்டேனே?  தமிழ்நாட்டில் திராவிடரோடு சேரவில்லை.  சிறைத்துறையில் குமாஸ்தாவாக இருந்து விட்டு அங்கிருந்து தப்பி தில்லிக்குச் சென்றவன் அங்கேயும் பிராமணர் வாழும் சௌத் ப்ளாக் செல்லாமல் பக்கா வட இந்தியர்களும் பஞ்சாபிகளும் வேலை செய்யும் தில்லி நிர்வாகத்தில் பணியில் சேர்ந்தேன்.  தில்லி நிர்வாகம் என்பது எண்பதுகளில் தில்லி அட்மினிஸ்ட்ரேஷன்.  அப்போது தில்லி மாநிலமாக இல்லை.  யூனியன் பிரதேசமாக இருந்தது.  லெஃப்டினண்ட் கவர்னர்தான் நிர்வாக அதிகாரி.  அதிலும் எனக்குக் கிடைத்த போஸ்டிங் ராஷனிங் டிபார்ட்மெண்ட்.  ஸ்டெனோ. 

அப்போதைய தில்லி உள்ளூர் நிர்வாகத்தில் பணியில் இருந்த ஒரே தமிழன் நானாகத்தான் இருப்பேன்.  அது எல்லாமே பஞ்சாபிகளின் கோட்டை.  ஆங்கிலமே கிடையாது.  இந்தியும் பஞ்சாபியும்தான்.  நான் தில்லியில் வாழ வேண்டும் என்பதற்காகவே இந்தியெல்லாம் கற்றுக் கொண்டேன்.  தமிழ் வாழ்க குடும்பத்தில் இந்தி.  ஒன்றிரண்டு மலையாளிகள் மதறாஸி என்ற பெயரில் இருந்தார்களே தவிர ஒரு தமிழன் கூட இல்லை.  சிவில் சப்ளைஸ் ஆசாமிகளுக்கு என்னைப் பார்த்து ஒன்றுமே புரியவில்லை.  மதறாஸி என்றால் தயிர் சாதம் அல்லவா சாப்பிடுவான், நீ எப்படி சிக்கன் மட்டன் என்று வெளுத்து வாங்குகிறாய் என்பார்கள்.  மதறாஸியெல்லாம் இழுத்து இழுத்து இந்தியை அடித்தொண்டையில் அல்லவா பேசுவான், நீ எப்படி எங்களைப் போல் மூக்கால் பேசுகிறாய், அதுசரி, பெஹன்சூத் மாதிரி gali வார்த்தைகளை எங்கே கற்றுக் கொண்டாய்?  இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.

ஆனால் ஒன்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.  இனவாதம்.  அமெரிக்கா அளவுக்கு வெளிப்படையாகத் தெரியாது என்றாலும் உள்ளுக்குள் இருக்கும்.  உயரம் கம்மி, சுருள் முடி, மீசை, பழுப்பு நிறம் – இது எல்லாமே அவர்களுக்கு ஆதிவாசிகளின் அடையாளம் என்பதால் சற்று கீழாகத்தான் பார்ப்பார்கள்.  ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் பொறாமையும் படுவார்கள்.  மதறாசிகள் புத்திசாலிகள் என்பதால். 

இப்படிப்பட்ட சூழலில் வடக்கு தில்லியில் உள்ள அலுவலகத்தில் இருந்து தில்லியின் மேட்டுக்குடியான சவுத் எக்ஸில் உள்ள – அங்கேயும் படு eliteஆன அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் சேர்ந்தால் நான் என்ன ஆவேன்?  முதலில் மாணவ மணிகள் பேசிய மேட்டுக்குடி ஆங்கிலமே எனக்குப் புரியவில்லை.  அதிலும் வகுப்பு வேறு – அதுவரையிலும் நான் பார்த்தே இராத, கற்பனையிலும் கண்டிராத மாதிரி நாலு நாலு பேராய்ச் சேர்ந்து அமர்ந்து விவாதித்துச் செய்ய வேண்டும்.  என்னங்கடா இது?  கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டா மாதிரி இருந்தது.  அந்த ஃப்ரெஞ்ச் பெண்மணி வேறு ஃப்ரெஞ்சிலேயே ஃப்ரெஞ்ச் மொழியை சொல்லிக் கொடுத்தார்.  சுத்தம்.  நாலே க்ளாஸில் ஓடி வந்து விட்டேன். 

அந்த அழகான இளம் ஃப்ரெஞ்ச் பெண் எப்படி ஃப்ரெஞ்ச் கற்றுக் கொடுத்தார் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது.  கைக்குட்டையை எடுத்து அதன் ஒரு முனையை இரண்டு விரல்களால் பற்றியபடி மூஷ்வா மூஷ்வா என்பார்.  நாம் உடனே மூஷ்வா என்றால் கைக்குட்டை என்று புரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான் அதன் ஸ்பெல்லிங் mouchoir என்று தெரிய வரும்.   ஒருவகையில் அது நல்ல மாதிரி பயிற்றுவித்தல்தான்.  1980-இல் கேட்டது இன்னமும் மறக்கவில்லையே? 

பிறகு சென்னையில் குடியேறிய பிறகு ஒருமுறை கல்லூரி சாலையில் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் ஃப்ரெஞ்ச் வகுப்பில் சேர்ந்தேன்.  அங்கேயும் தில்லி கதைதான்.  ஆனால் வடக்கு தில்லியிலிருந்து தெற்கு தில்லிக்கு பஸ்ஸில் போகும் அளவு கொடுமை இங்கே இல்லை.  அங்கே அதற்கு இரண்டு பஸ் மாறிப் போக வேண்டும்.  மொத்தம் 25 கி.மீ.  வகுப்புக்குப் போய் சேர்வதற்குள்ளேயே தாவு தீர்ந்து விடும்.  இத்தனை பிரச்சினை சென்னையில் இல்லை என்றாலும் அங்கேயிருந்த சூழல் – பயிற்றுவிக்கும் முறை என்னை மீண்டும் பயமுறுத்தி விரட்டி விட்டு விட்டது.  இப்படியே தில்லியில் ஒருமுறை ஸ்பானிஷ்.  சென்னையில் ஒருமுறை ஸ்பானிஷ். 

சென்னையில் அப்போது சின்மயா நகரில் இருந்தேன்.  சின்மயா நகரிலிருந்து மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள நிம்மி தெருவில் இருந்த இன்ஸ்தித்தியூத்தோ  இஸ்பானியாவில் சேர்ந்து படித்தேன்.  இந்த முறை தீவிரமாகவே பயின்றேன்.  நன்றாகப் புரிந்தது.  ஏகப்பட்ட மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்தேன்.  அப்போது பைபாஸ் சர்ஜரி செய்திருந்தது.  ஆட்டோவில் இடது மார்பை வலது கையால் பிடித்தபடியே வருவேன், போவேன்.  ஆனாலும் பரீட்சை எழுத முடியாமல் போனது.  என்னுடைய மற்றும் இன்னொரு பெண்ணுடைய இசை ஆர்வத்தினால்.  இருவரும் சேர்ந்து பல ஸ்பானிஷ் பாடல்களுக்கு அர்த்தம் எழுதி, பாடி, இப்படியாக இசையில் மூழ்கியதால் பாடம் விட்டுப் போயிற்று.  அரபி, சம்ஸ்கிருதம் எல்லாம் தனித் தனிக் கதைகள். 

***

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். வருகின்ற 28-ஆம் தேதி (ஞாயிறு) இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு ஸூம் மூலம் நகுலன் பற்றிப் பேச இருக்கிறேன். ஆறிலிருந்து எட்டு வரை பேசுவேன். பிறகு கேள்வி நேரம். உங்கள் கேள்விகளை இப்போதே கூட எனக்கு அனுப்பலாம். charu.nivedita.india@gmail.com

ஏற்கனவே பேசிய சி.சு. செல்லப்பா பற்றிய உரை தேவையெனில் எனக்கு எழுதுங்கள். லிங்க் அனுப்பி வைக்கிறேன். அதற்கான கட்டணத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai