பூச்சி 88

நேற்றைய பதிவில் வெங்கடாசலபதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி எழுதியிருந்தேன்.  ஆனால் அது மட்டுமே வெங்கடாசலபதியின் அடையாளம் அல்ல.  அவர் ஒரு மதிப்புக்குரிய ஆய்வாளர்.  ஏ.கே. செட்டியார் மகாத்மா காந்தி பற்றி எடுத்த ஆவணப் படச் சுருள்களைத் தேடித் தொகுத்தவர்.  இப்படி ஆய்வுத் துறையில் அவரது பங்களிப்புகள் அநேகம்.  அவர் செய்திருக்கக் கூடாதது என்னவென்றால், மொழிபெயர்ப்பு. 

அதையும் மீறி அவர் மொழிபெயர்ப்பே செய்து விட்டார் என்றாலும் அதன் பிறகு என்ன செய்திருக்கலாம்?  என்ன செய்திருக்க வேண்டும்?  அவருக்கு இல்லாத தொடர்புகளா?  பல்கலைக்கழகப் பேராசிரியர்.  பாரிஸில் ஒரு கல்வி நிறுவனத்தின் விஸிட்டிங் ப்ரொஃபஸர்.  இப்படி ஒரு பக்கத்துக்கு எழுதிக் கொண்டு போகலாம்.  அவரோடு என்னை ஒப்பிட்டால் ரஜினிகாந்துக்கும் ஒரு லைட் பாய்க்கும் உள்ள தூரம்.  நான் என்ன செய்தேன்?  அதற்கு காயத்ரியும் ராம்ஜியும் உதவி செய்தனர்.  மொழிபெயர்த்த பிரதி கையில் கிடைத்ததும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட, இலக்கியம் நன்கு அறிந்த ஒரு பெண்ணிடம் அப்பிரதியைக் கொடுத்தோம்.  எடிட் செய்தோம்.  அதை வெங்கடாசலபதி செய்திருக்க வேண்டும்.  அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இதற்காகப் பல எடிட்டர்கள் இருக்கிறார்கள்.  நாலு லட்சம் ரூபாய் செலவு ஆகும்.  எனக்கு மொத்தமாக ஐந்து லட்சம் ரூபாய் செலவாயிற்று.  வாசகர்களிடம் பணம் வாங்கி அதைச் செய்தேன்.  சலபதி அப்படித்தான் செய்திருக்க வேண்டும். 

ஒருமுறை ஸீரோ டிகிரி நாவலை ஒரு ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பாளரிடம் கொடுத்தேன்.  பாரிஸில் வசிக்கும் தமிழ்ப் பெண்.  ஃப்ரெஞ்ச் தாய்மொழி மாதிரி.  ஒரு ஆண்டு மொழிபெயர்த்தார்.  ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன்.  பதிப்பாளரிடம் கொடுத்தேன்.  குப்பையில் போடுங்கள் என்றார்.  மொழிபெயர்ப்பு மோசம் இல்லை.  குப்பை.  அப்ளிகேஷனும் பயோடேட்டாவும் ப்ராஜக்ட் ரிப்போர்ட்டும் மொழிபெயர்க்கும் அசடுகள் நாவலை மொழிபெயர்க்க வந்து விட்டன.  இப்படியே கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மொழிபெயர்ப்புக்காக செலவு செய்திருக்கிறேன்.  நீங்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எடிட்டரைப் பிடிக்காவிட்டால் உங்கள் மொழிபெயர்ப்பு தேறாது.  இதைத் தமிழ் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.  அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல எடிட்டர்கள் உள்ளனர்.  அவர்கள் எடிட் செய்தாலே அந்தப் புத்தகங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்படும்.  ஆனால் ஐந்து லட்சம் அளவுக்கு செலவாகும்.  ஒரு வார்த்தைக்கு இத்தனை என்று வாங்குகிறார்கள்.  வெறும் கையால் முழம் போட முடியாது.

***

காலையில் ஏழு மணிக்கு ஃப்ரெஞ்ச் வகுப்பு. அதை எங்கே கேட்பது?  என் வீட்டில் என்ன செய்தாலும் அது ஒரு வெடிகுண்டு செய்வது போல.  என் அறையிலிருந்து கேட்க முடியாது.  ஏனென்றால், அவந்திகா எழுந்து வந்து பார்க்க நேர்ந்தால் வாக்கிங் போகவில்லையா என்ற ஆச்சரியமான அதிர்ச்சியான கேள்வி எழும்.   ஏனென்றால், கடும் மழையிலும் கூட மழை விட்டிருக்கும் பத்து நிமிட நேரத்தில் வாக்கிங் கிளம்பி விடுவேன்.  சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையே வெள்ளத்தில் மிதந்த போது கூட ஒருநாள் விடாமல் வாக்கிங் சென்றேன்.  வாக்கிங் செல்பவர்கள் பெரும்பாலான பேர் இப்படித்தான் fanaticஆக இருப்பதை கவனித்து வருகிறேன்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கடந்த பனிரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒருநாள் விடாமல் வாக்கிங் வருகிறார்.  பனிரண்டு ஆண்டுகளாக அவர் அதேமாதிரிதான் இருக்கிறார் என்பதால் பார்க்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் – 20 வயது முதல் 90 வயது வரை – உண்டு என்பதையும் அவதானித்திருக்கிறேன்.  அந்தத் தொண்ணூறு வயது அய்யங்கார் மாமா அளவு வேக நடை நடக்க பார்க்கிலேயே யாரும் இல்லை.  அவரே ஒருநாள் ”உடம்பை எப்படி வைத்திருக்க வேண்டும்” என்று சொல்லும்போது அந்த அம்மையாரைத்தான் உதாரணம் காட்டினார்.  அதை விடுங்கள்.  நம் வெடிகுண்டு ஃபாக்டரிக்கு வருவோம்.  இப்படி மழை, புயல், வெள்ளம் எது ஒன்றுக்கும் வாக்கிங்கை விடாத நீ இதற்கு எப்படி விலக்கு அளித்தாய் என்றெல்லாம் கேட்க மாட்டாள்.  என்ன நடக்கும் என்றால், ஒரு வாரம் கழித்து ஏழரை மணிக்கு விஜய் மீன் கொண்டு வந்து கொடுப்பார், நீ வாக்கிங் போகாமல் அந்த மீனை வாங்கி வை என்று ஒரு பேச்சு வரும்.  (பூனைகளுக்கான மீன்).  அதெல்லாம் முடியாது என்று சொல்ல முடியாது.  சொன்னால், அன்னிக்கு மட்டும் வாக்கிங்குக்கு ஜூட் விட்டியே, இது நம் செல்லங்களுக்கான உயிர்ப் பிரச்சினை அல்லவா என்று பிடிப்பாள். 

அப்போது நீங்கள் சமத்காரமாக வாக்கிங்கும் என் உயிர்ப் பிரச்சினைதான் என்று சொல்ல முடியாது.  ஏனென்றால், அவந்திகாவைப் பொறுத்தவரை நான் மரணமற்றவன்.  அல்லது, நான் என்ன பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் நூறு ஆண்டு வாழ்வேன்.  இடையில் வந்த இந்த ஹார்ட் அட்டாக், பைபாஸ் சர்ஜரி எல்லாம் சும்மா.  இந்த வாக்கிங் என்னுடைய பொழுதுபோக்கு.  மற்றபடி என் ஆயுள் எழுதப்பட்டு விட்டது.  அதற்கு இன்னும் முப்பது வருஷம் இருக்கு.  இதுதான் அவந்திகாவின் நம்பிக்கை. 

சென்ற வாரம் ஒருநாள் அவளிடம் “அம்மு, என் காலத்துக்குப் பிறகு இந்தப் புத்தகங்களையெல்லாம்… “ என்று ஆரம்பித்தேன்.  அப்படியே மாபெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் முகமெல்லாம் கோண பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.  அவள் வயது 60.  ஆயிரம் மன்னிப்புக் கேட்டு அவளைத் தேற்ற நாலு மணி நேரம் ஆயிற்று.  சீ, இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று கூட ஆகி விட்டது.  சரி, அவந்திகாவைப் பொறுத்தவரை நான் மரணமற்றவன் இல்லையா?  எப்படி?  நான் மேலே போய் விட்டால்?  அப்போதும் நான் மரணமற்றவன் தான்.  எப்படி, கண்ணதாசன் சொன்னது போல கலைஞனுக்கு மரணமே இல்லை என்பது மாதிரியா?  இல்லவே இல்லை.  இந்தக் கலை கொலை சமாச்சாரத்துக்குள்ளெல்லாம் அவந்திகா போகவே மாட்டாள்.  நான் போனதும் அந்தச் செய்தியைக் கேட்க ஆள் இருக்க வேண்டுமே?  ம்ஹும்.  அதற்குள் அவள் ஆவி பறந்திருக்கும். 

இதெல்லாம் பெருமைக்குரிய விஷயமே அல்ல.  இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் என் எழுத்தின் செய்தியே.  ஆனால் அவந்திகா என் வாசகி அல்லவே?  ஏம்மா, உன் ஆன்மீகம் என்ன ஆச்சு, உன் ஆன்மீகப் பணியையெல்லாம் யார் செய்வது?  இன்னும் கூடுதலான நேரத்தையும் சிரத்தையையும் ஆன்மீகப் பணிக்கு ஒதுக்கலாமே என்று ஒருநாள் மெதுவாகக் கேட்டேன்.  அவளிடம் என்ன கேட்டாலும் பதில் பாக்கெட்டில் இருக்கும்.  டக்கென்று பதில் சொன்னாள்.  ஒரு நொடியில் சொன்னாள்.  நீதான் எனக்கு அச்சாணி,  நீ இருந்தால்தான் வண்டி ஓடும்,  அதில் ஏறிக் கொண்டுதான் ஆன்மீகம் எல்லாம் என்றாளே பார்க்கலாம், மிரண்டு போனேன். 

அதனால் வீட்டுக்குள் இருந்து ஸூமில் ஃப்ரெஞ்ச் கேட்பது சாத்தியம் இல்லை.  மாடிக்குப் போய் விட வேண்டியதுதான்.  அதற்கான நோட்டுப் புத்தகம், பேனா, பவர் போய் விட்டால் என்ன செய்வது என்று பவர் பேங்க் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, விடியோ வகுப்பு என்பதால் எடுப்பான சட்டை அணிந்து கொண்டு, பெர்ஃப்யூம் அடிக்கலாமா, சே, ஸூம் மீட்டிங்தானே, தேவையில்லை – போனேன். 

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  மேலே மாடியில் என்னதான் மொபைல் டேட்டாவை ஆன் பண்ணி விட்டாலும் நெட் கிடைக்காது.  போய் போய் வரும்.  விட்டு விட்டுக் கிடைக்கும்.  அது என்ன பிரச்சினை என்றே புரியவில்லை.  பாட்டு கேட்க வேண்டும் என்று நினைப்பேன்.  வைஃபை சரியாக இருக்காது.  இதை விசாரிக்க வேண்டும்.  இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு எப்படி ஒரு மணி நேரம் வகுப்பை கவனிப்பது? நல்லவேளையாக நெட் வேலை செய்தது.  முதலில் தரையில் உட்கார்ந்து பாடம் கேட்டேன்.  அங்கே அடிக்கடி நெட் தொடர்பு விட்டு விட்டு வந்ததால் நின்று கொண்டே பாடம் கேட்டேன்.  அப்போது கொஞ்சம் பரவாயில்லை.  ஆனாலும் அவ்வப்போது விட்டுவிட்டுத்தான் வந்தது.  என்றாலும் பாடத்தை கவனிக்க இடைஞ்சலாக இல்லை.  ஓ, சொல்ல மறந்து விட்டேன்.  ஆரம்பத்திலேயே ஒரு விஷயம் நடந்தது.  உங்கள் விடியோவை ஆஃப் செய்து விடுங்கள் சாரு, உங்களைப் பார்த்தபடி என்னால் வகுப்பு எடுக்க முடியாது என்று சொல்லி விட்டாள் காயத்ரி.  ஓ மை காட். இந்த வயதிலுமா நான் எல்லோரையும் கதி கலங்க அடிக்கும் அழகனாக இருக்கிறேன்?  உடனடியாக எனக்கு ’நான் கனிந்து விட்டேன்’ என்பது ஞாபகம் வர, சீச்சீ, இல்லையில்லை, நான் அவளுடைய ஆசிரியன், ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைக் கற்றவன், கற்பித்தவன், என்னைப் பார்த்தபடி வகுப்பு எடுத்தால் பதற்றமாக இருக்காதா என்று நினைத்து விடியோவை உடனடியாக அணைத்து விட்டேன்.  அலங்காரமாக சட்டை போட்டது வீணாயிற்று. 

சரியாக முப்பத்து ஏழாவது நிமிடத்தில் நேரம் முடிந்தது என்று சொல்லி என்னை வெளியே தள்ளி விட்டது ஸூம்.  அப்படி நடக்கும், கவலை வேண்டாம், உங்களை மீண்டும் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தாள் காயத்ரி.  பலமுறை முயற்சித்தேன்.  ஒரு போன் பண்ணித் தெரிவித்திருக்கலாம்.  வகுப்பைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து வெளியே வந்து விட்டேன்.  மீதிப் பாடத்தை நாளை கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வகுப்பு எப்படி இருந்தது?  வாழ்நாளில் இதுவரை நான் பார்த்ததிலேயே பெஸ்ட் டீச்சர் காயத்ரிதான்.  இப்படி யாராவது ஃப்ரெஞ்ச் கற்றுக் கொடுத்திருந்தால் இந்நேரம் எங்கேயோ போயிருப்பேன். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai