ஒரு ஆலோசனை

சுமார் ஒரு லட்சம் வார்த்தைகள். எடிட்டிங் பணி. உயிர் நண்பன். முந்தாநாள் முடித்தேன். இப்போது கடைசியாகத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முடித்து விடுவேன். தினமும் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியதாயிற்று. மராமத்துதானே என்று நினைத்தேன். அப்படி இல்லை. மொழிபெயர்ப்பு என்பதால் மொழியில் அதிகவனம் செலுத்த வேண்டியதாயிற்று.

பூச்சிக்கு எழுத படை மாதிரி இருக்கின்றன விஷயங்கள். நாளை எல்லாம் வரும். ஆச்சரியம் என்னவென்றால், நான் மௌனமானதும் வாசகர்களும் மௌனம். ஒரு மின்னஞ்சல் இல்லை. ஒரு சந்தா இல்லை. பூரண மௌனம். என் மாதாந்திரப் பேச்சைக் கேட்டு கடிதம் வரும். ஒரு பேச்சைக் கேட்டு ஐம்பது பேர் எழுதுவார்கள். முப்பதிலிருந்து நாற்பதாயிரம் வரும். ஒரு பேச்சுக்கு இவ்வளவு பணம் என்பது நம்ப முடியாத விஷயம். பேசி வைத்தது போல் 300 ரூ. அனுப்புவார்கள். ஒரு சிலர் ஆயிரங்களில் அனுப்புவர். எப்படி இருந்தாலும் நாற்பதாயிரம் என்பதெல்லாம் உலக சாதனைதான். ஆனால் கடந்த பத்து நாட்களாக ஒருவரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று விட்டு விட்டார்கள் போல. க.நா.சு. பற்றிய உரை தேவையெனில் எழுதுங்கள். கட்டணமும் அனுப்புங்கள்.

இதற்கிடையில் இனி வரும் உரைகளை காலை ஆறு மணியிலிருந்து முன்னிரவு எட்டு மணிக்கு மாற்றலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு காரணங்கள். ஒன்று, அமெரிக்க வாசகர்களால் சனி இரவு பேச்சு கேட்க இயலவில்லை. சனிக்கிழமை மாலை நேரங்கள் அவர்களுக்குக் குடும்ப சந்திப்புகளுக்கான நேரம். இன்னொன்று, இந்திய வாசகர்களை அதிகாலை ஆறு மணிக்கே எழுப்பி உட்கார வைப்பதைத் தவிர்க்கலாம் என்று பார்க்கிறேன். சனிக்கிழமை முன்னிரவு என்றால் எல்லோருக்கும் வசதி. அமெரிக்காவிலும் அது சனிக்கிழமை காலை நேரமாக இருக்கும்.

ஆக, அடுத்த சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முன்னிரவு எட்டு மணிக்கு இருக்கும். எட்டரை இல்லை. எட்டு மணி. தலைப்பு கோபி கிருஷ்ணன். கேள்விகளை அனுப்பலாம்.

மேலும், Cisco webex வேண்டாம் என்று சில நண்பர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். எல்லோரும் Zoomக்கே பழகி விட்டார்கள். வெப் எக்ஸ் எல்லாம் டவுன் லோடு செய்து… அதெல்லாம் நடக்கிற காரியம் அல்ல என்கிறார்கள். உங்கள் அபிப்பிராயம் வேண்டும். ஸூமிலேயே தொடரலாமா? வெப் எக்ஸ் என்றால் ஆயிரம் பேர் கலந்து கொள்ளலாம். அதற்கு நான் 1300 ரூ. மாதாமாதம் கட்ட வேண்டும். பணம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் ஸூமில் இருந்த exclusive தன்மை போய் விடும். ஒரு ப்ரைவேட் மீட்டிங் என்பது பொதுக்கூட்டம் மாதிரி ஆகும். ஆயிரம் பேர் கலந்து கொள்ளலாம் என்றாலும் 300 பேர் வருவார்கள். நூறு பேர் என்றால், அதற்கு மேல் வருபவர்கள் என் பேச்சை என்னிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் கருத்தை எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com