நான் சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் மற்றும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறேன். கேட்டால் அராத்து ஃபேஸ்புக்கிலேயே இருந்து புத்தகம் எழுதி விட வில்லையா என்று கேட்கிறார்கள். எப்போதுமே நிபுணர்களை உதாரணமாகக் கொள்ளாதீர்கள். சர்க்கஸில் கயிற்றில் நடக்கிறார்கள் என்றால் நீங்களும் கயிற்றில் நடப்பீர்களா? மது அடிமை, கஞ்சா அடிமை போல் அல்லது அதைவிடவும் தன்னை உபயோகிப்பவர்களை அடிமைப் படுத்தும் குணம் உடையது ஃபேஸ்புக். நீங்கள் ஃபேஸ்புக்கிலேயே இருந்தால் எதையுமே படிக்க முடியாது. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள், சென்ற ஆண்டு எத்தனை நூல்களைப் படித்தீர்கள்? ஒரு புத்தகம் கூட இல்லை. இல்லையா? ஏன்? ஓழாதவன் வீடு பாழ் என்பார்கள் கிராமத்தில். சரியானபடி சரீர சம்பந்தம் செய்யாவிட்டால் மனைவி ஓடிப் போய் விடுவாள் என்று பொருள். அதேபோல் நீங்கள் இப்படி படிக்காமலேயே காலத்தை ஓட்டினால் உங்கள் மனம் பாழாகி விடும். மனம் சிதைந்தால் உடலும் சிதையும். இதைப் படித்து விட்டு சிறிது நேரம் யோசியுங்கள். சென்ற ஆண்டு நீங்கள் படித்த புத்தகம் என்ன? ஃபேஸ்புக்கில் படித்ததைச் சொல்லவில்லை. அதெல்லாம் படித்த கணக்கில் வராது. 20 புத்தகங்கள் படித்திராதவர்கள் கொஞ்ச நேரம் மனதார உங்களிடமே மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இது பற்றிக் கவலைப்படுங்கள். அழக் கூட செய்யலாம். இன்றிலிருந்தே படிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பியுங்கள். படிக்க புத்தகம் இல்லாவிட்டால் நெட்டிலேயே சங்க இலக்கியம் உள்ளது. சென்னைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்த அற்புதமான வேலையைச் செய்துள்ளது. சங்க இலக்கியத்துக்கு அருமையான உரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. உ.வே.சா. எழுதிய உரை மிகவும் கனமானது. எளிய வாசகருக்குப் புரியாது. ஆனால் வேறு பல எளிய உரைகள் நெட்டில் உள்ளன. தேடிப் படியுங்கள். ஓரான் பாமுக் தமிழிலேயே கிடைக்கிறார்.
ஃபேஸ்புக்கை விட்டு விட்டு ஒரு வாரம் இருக்க முடியுமா என்று பரிசோதித்துப் பாருங்கள். ஃபேஸ்புக்கில் உங்கள் நேரம் முழுவதும் வீணாகாமல் இருக்க ஒரு வழி சொல்கிறேன். ஸ்டேடஸ் மட்டும் போட்டு விட்டு ஓடி விடுங்கள். யாருடைய பின்னூட்டத்தையும் படிக்காதீர்கள். நீங்களும் யாருக்கும் பின்னூட்டம் போடாதீர்கள். இன்னொரு ஆலோசனை. யாருடைய ஸ்டேடஸையும் படிக்காதீர்கள். ஃபேஸ்புக்கில் எழுதுபவர்கள் என்ன தாஸ்தாவ்ஸ்கியா? விட்டுத் தள்ளுங்கள்.
இதையெல்லாம் செய்து வந்தால் ஃபேஸ்புக் என்ற வியாதியிலிருந்து தப்பலாம்.
பணம் கேட்டு நாட்கள் ஆகின்றன. முடிந்தவர்கள் பணம் அனுப்பலாம். நான் வாசகர்களிடம் பணம் கேட்பது பற்றி என் பெயரைக் குறிப்பிடாமல் நண்பர் பிரபஞ்சன் விகடனில் நக்கல் அடித்துள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள். அதற்கு நாளை பதில் எழுதுகிறேன்.
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
Comments are closed.