ஜோக்கா? சீரியஸா? : சிறுகதை

நகைச்சுவை உணர்வு என்றால் அது தஞ்சாவூர்தான்.  அந்த மண்ணுக்கு உரிய விசேஷங்களில் அது ஒன்று. Body shame கூட எங்கள் ஊரில் பகடியாகத்தான் கருதப்படும்.  முடிந்தால் நீங்கள் பதிலுக்குப் பண்ணலாம்.  இல்லாவிட்டால் அதை ரசித்து விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.  இந்த பாடி ஷேம் பண்ணுவதில் பெண்கள் ஜித்தர்கள்.  ஜெயிக்கவே முடியாது.  அதிலும் குறிப்பாக பாலியல் சம்பந்தமான பகடிகள்தான் ஏராளம்.  அதுவும் பெண்கள்தான் பண்ணுவார்கள்.

இருபத்தைந்து வயதில் தஞ்சாவூரிலிருந்து தில்லிக்குப் போனால் அது தஞ்சாவூரை விட பயங்கரமாக இருந்தது.  தில்லி என்றால் மூணு தில்லி இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். கரோல்பாக், சௌத் ப்ளாக், ஆர்.கே. புரம், சரோஜினி நகர் போன்ற அக்ரஹார தில்லி.  இங்கே பகடி என்ற பேச்சே இருக்காது.  கப்சிப் தர்பார்தான் எப்போதும்.  ஜெர்மனிக்குப் போய் விட்டது போல் இருக்கும்.  இப்பவும் ஐரோப்பாவில் பகடியோ நகைச்சுவை உணர்வோ ஒரு சிறிதும் இல்லாத கூட்டம் ஜெர்மானியர்தான்.  இதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.  அந்த மாதிரி ஒரு தில்லி மேலே சொன்ன அக்ரஹார தில்லி.  தி.க. திமுக வளர்ச்சியால் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த யூத பிராமணர் யாவரும் கட்டமைத்த அந்த தில்லி ஒரு புறம்.  அவர்கள்தான் தில்லி ஆட்சியின் அதிகாரத் தூண்கள், திண்ணைகள், படிக்கட்டுகள், எல்லாம். 

இன்னொரு தில்லி, உஸ்பெகிஸ்தானிலிருந்து கிளம்பி வந்து தில்லியில் தங்கி பிறகு தில்லி மண்ணோடு ஐக்கியமாகி விட்ட கூட்டம்.  இதில் சுல்தான்களால் மதம் மாற்றப்பட்ட லோக்கல் கூட்டமும் அடக்கம்.  இவர்கள் சாந்த்னி சௌக் போன்ற பல பகுதிகளில் விரவி இருக்கிறார்கள்.  இன்னொரு கூட்டம், 1947-இல் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியிலிருந்து உயிருக்குப் பயந்து தப்பி வந்த கூட்டம்.  பஞ்சாபிகள்.  இந்தப் பஞ்சாபிகளோடுதான் 1978-இலிருந்து 1990 வரை வடக்கு தில்லியில் வாழ்ந்தேன்.  இவர்களில் யாரும் ஒரு பிச்சைக்காரரைக் கூடப் பார்க்க முடியாது.  கடும் உழைப்பாளிகள்.  கடுமையாகக் குடிப்பார்கள்.  பெண் பிரியர்கள்.  சாப்பாட்டுப் பிரியர்கள்.  எல்லாவற்றையும் விட நகைச்சுவை உணர்வில் எல்லா இந்தியர்களையும் தாண்டி விடுவார்கள்.  தில்லி அட்மினிஸ்ட்ரேஷன் சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் என்னுடைய பிரிவில் மூன்று பேர்.  இரண்டு பஞ்சாபிகள்.  ஆனந்த்.  பஸ்ரிச்சா. ஒரு மத்றாஸி, நான்.  இருவருமே இந்து பஞ்சாபிகள்.  சீக்கியர் என்றால் அவர்கள் இந்துக்களிலிருந்து கொஞ்சம் வேறுபடுவார்கள்.  என்ன வேறுபாடு என்றால், மேலே குறிப்பிட்ட தன்மைகள் கொஞ்சம் அதீதமாக இருக்கும். இந்து ஆறு லார்ஜ் என்றால் சர்தார் எட்டு ரவுண்ட். 

எங்கள் அதிகாரி பெயர் ஜி.கே. மார்வா.  அவரும் பஞ்சாபி.  இந்து.  நான் மட்டும்தான் மத்றாஸி.  நான் ஸ்டெனோ.  ஆனந்தும் பஸ்ரிச்சாவும் குமாஸ்தாக்கள்.  ஆனந்த் எல்டிசி.  பஸ்ரிச்சா யு.டி.சி.  (லோவர் டிவிஷன், அப்பர் டிவிஷன்) இந்த லோவர் அப்பர் விபரம் கதைக்கு ரொம்ப முக்கியம். பஞ்சாபிகள் ரொம்ப எக்ஸ்ரோவெர்ட் என்றாலும் வேலை என்று வருகிற போது பஞ்சாபிகளே கூட இருந்தால் நலம் என்று நினைப்பார்கள்.  பிஹாரி என்றால் வேலை செய்ய மாட்டான்.  உத்தர் பிரதேஷ் என்றால் வேலைக்கே வர மாட்டான்.  ஹர்யான்வி என்றால் நான் பெரியவனா நீ பெரியவனா என்று விவாதம் செய்வதிலேயே நேரம் போய் விடும்.  பெங்காலிகள் வெளிநாடு.  அவர்களை விட்டு விடலாம்.  மத்றாஸிகள் கொஞ்சம் பரவாயில்லை. அதிலும் இந்த கேரள் மாதர்சோத், பயங்கரமான ஆட்கள்.  தகறாரு செய்வதற்கு என்றே கேரள் தேசத்திலிருந்து தில்லி வரை வந்திருக்கிறான்கள்.  மத்றாஸி கூட்டத்தில் தமில் பரவாயில்லை.  என்ன சொன்னாலும் செய்வார்கள்.  ஆனால் தஹி சாவல் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வதும் இனப் பெருக்கம் செய்வதும்தான் பெரிய ஆச்சரியம். ஆனால் தில்லி லோக்கல் அட்மினிஸ்ட்ரேஷனில் தமில் ஒத்தர் கூட இல்லை.  காரணம், அவர்களுக்கு இந்தி தெரியாது. பெஹ்ன்சூத், இன்னமும் அவர்கள் அங்க்ரேஸியையே தாய் மொழியாகக் கருதுகிறார்கள்.  அவர்கள் என்ன இந்தியர்களா அல்லது எல்லாருமே பிரபாகரன் கட்சியைச் சேர்ந்தவர்களா, பெஹன் தி லண்ட். தில்லி அட்மினிஸ்ட்ரேஷனில் ஒரு பஞ்சாபி ஸ்டெனோ கூட இல்லாததால்தான் மத்றாஸியாகிய நான் இந்தப் பஞ்சாபிக் கூட்டத்தில் கலக்க வேண்டியதாயிற்று. 

ஒருநாள் பஸ்ரிச்சா என்னைப் பார்த்துக் கேட்டான், ”யோவ் ரவி, எனக்கு ஒரு டவுட்.  கேட்கலாமா?” 

“கேள் பஸ்ரிச்சா.  நாம் எல்லோரும் அண்ணன் தம்பி மாதிரி இல்லையா?  என்ன இது, புதுசா பர்மிஷம் எல்லாம் கேட்கிறாய்?”

”கோவிக்காதே.  தஹி சாவல் மட்டுமே சாப்பிட்டு எப்படி…?” அதற்கு மேல் வார்த்தையாகச் சொல்லாமல் சைகையால் காண்பித்தான் பஸ்ரிச்சா.  அவன் காட்டிய சைகை, கை விரல்களை மடக்கி சற்று வளைத்தபடி இடதும் வலதுமாக அசைத்தான்.

ஓ, இவ்வளவுதானே?  பஞ்சாப் சிங்கங்களான நீங்களே ———————-(நானும் அதே சைகையைச் செய்தேன்) செய்யும்போது நாங்கள் செய்ய முடியாதா, மா தி லண்ட்?”

என்னதான் தயிர் சாத மக்களும் திராவிட இனமும் தமிழ்நாட்டுக்குள் வெட்டி மாய்த்துக் கொண்டாலும் ஒரு பஞ்சாபியிடம் போய் என்னால் தயிர் சாதத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை.  மேலும், எனக்குமே தயிர் சாதம் என்றால் உயிர்.

பஸ்ரிச்சாவுக்கு செம காண்டாகி விட்டது. ”ஏன், ஏன், பஞ்சாப் ஷேர்களான எங்களுக்கு என்ன?” என்று கேட்டு வலது புஜத்தை இடது கையால் அடித்துக் காண்பித்தான்.

“ஹே பஸ்ரிச்சா, புஜத்தாலா நீ வேலை செய்வாய்?  உன்னுடைய சாமானை நீ அஞ்சு வயசுக்கு மேல் பார்த்திருக்கிறாயா? கண்ணாடி முன்னால் போய் நின்றால் கூட உன்னால் அதைப் பார்க்க முடியாதே?  தொப்பைதான் முழங்கால் வரை தொங்குதேய்யா, பெஹன் தி லண்ட், மா தி லண்ட், மாயி அவா…”

ஆனந்த் ஓ என்று கட்டிடமே இடிந்து விழுகிறாற்போல் சிரிக்க, பஸ்ரிச்சா ”யேய் மத்றாஸி பெஹன்சூத், உன்னை இன்று கொல்லாமல் விட மாட்டேன்” என்று கத்திக் கொண்டே என்னை (போலியாக) அடிக்க ஓடி வர, நான் பயந்தது போல் வெளியே ஓட கூச்சல் கேட்டு உள்ளே சேம்பரிலிருந்து டெபுடி கமிஷனர் மார்வா வெளியே வந்து “என்ன ரவி, உங்களை (அவர் என்னை மட்டும் வாங்க போங்க என்று பேசுவார்) நான் ரெஸ்பான்ஸிபிள் ஆள் என்று நினைத்தேன்.  இந்தப் பஞ்சாபி மூடர்களோடு சேர்ந்து கொண்டு நீங்களும் கூத்தடிக்கிறீர்கள்?  இது என்ன ஆபீஸா, சந்தை மடமா?” என்று பயங்கரமான குரலில் கத்தினார். 

நான் பயந்தது போல் பம்மியபடி ஸாரி சார் என்று உள்ளே போனேன்.  மார்வா ஒரு எக்ஸ் மிலிட்ரி என்பதால் இன்னமும் மிலிட்ரி பந்தாவை விடவில்லை.  சிரிக்கவே மாட்டார்.  ஆனால் உள்ளுக்குள் ஆள் படு ரகளையான ஆள் என்பதை அவர் எனக்கு டிக்டேஷன் கொடுக்கும் தருணங்களில் வரும் போன் கால்களை வைத்துத் தெரிந்து கொண்டேன்.  எனக்கு பஞ்சாபி நூற்றுக்கு நூறு புரியும் என்பது அவருக்குத் தெரியாது.

எல்லாம் முடிந்து அன்றைய தினம் மாலை, ரகசியமான குரலில் காலையில் என்ன நடந்தது சொல்லுங்கள் என்று கேட்டார்.  இந்தியிலேயே நடந்தது நடந்தது போல் கெட்ட வார்த்தைகளோடு சொன்னதைக் கேட்டு, சிரித்துப் புரையேறி சேம்பரை விட்டு வெளியே வந்து விட்டார்.  கையோடு ஆனந்தையும் பஸ்ரிச்சாவையும் அழைத்து ”இன்று உங்கள் மூவருக்கும் என் செலவில் டின்னர் வித் பியர்” என்று சொல்லி பியரோடு சிக்கன் விருந்து கொடுத்தார்.  ஆனால் மறுநாள் முழுவதும் வழக்கத்துக்கு மாறாகக் கடுகடுவென்று இருந்தார்.  முந்தின நாள் விருந்து கொடுத்ததை வைத்து நாங்கள் அவரிடம் உரிமை எதுவும் எடுத்து விடக் கூடாது என்பதனால் அப்படிக் கடுகடுவென்று இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. 

ஆனால் சென்னை ஒரு விடியாமூஞ்சி ஊர்.  ஜோக் அடித்தால் இது ஜோக்கா சீரியஸா என்று கேட்கிறார்கள்.  ஒரு கணவன் மனைவி.  காதலன் காதலி என்றும் வைத்துக் கொள்ளலாம். உங்கள் வசதி.  உங்கள் மனைவியிடம் கேலியாக போடி லூசு நாய் என்று சொல்கிறீர்கள்.  உடனே அவள் வெகுண்டு எழுந்து உங்கள் மீது டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போட்டு டிவோர்ஸும் வாங்கிக் கொண்டு போய் விட்டாள் என்றால் என்ன செய்வீர்கள்?  அதற்குப் பிறகு யாரிடமாவது ஜாலியாகப் பேசுவீர்களா?  சரி, இன்னொரு கல்யாணம் பண்ணி அந்தப் பெண்ணிடம் ஜாக்கிரதையாகத்தான் இருந்தீர்கள்.  என்றாலும் இவள் அவள் மாதிரி இல்லை, இவள் தங்கம் என்று நினைத்து ஒருநாள் ஏய் புஜ்ஜி என்று கூப்பிட இவளும் மெண்ட்டல் டார்ச்சர் என்று சொல்லி டிவோர்ஸ் வாங்கி விட்டாள்.  புஜ்ஜி என்பது நாயைக் கூப்பிடும் சொல்லாம். 

நல்லவேளை, இன்றைய தினம் அந்த அளவு போகவில்லை.  ஆனால் வேறு மாதிரி ரகளை.  நேற்று இரவு ஒரு நண்பர் ”மதுரை இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.  ஊரா அது, சே” என்று மெஸேஜ் அனுப்பினார்.  நானும் சே ஊரா அது என்று பதில் மெஸேஜ் அனுப்பினேன்.  ஒரே வெயில், ஒரே வியர்வை.  நானும் ஆமாம் ஆமாம் என்று மெஸேஜ்.  மதுரை மேல் எனக்கு என்ன கோபம் என்றால் முதல் காரணம், பாலா படம்.  அடுத்தது, எப்போதும் வெய்யில்.  எப்போதும் சூடு.  மனிதர்களும் அதே மாதிரி   ஆனாலும் திரும்பத் திரும்ப நான் மதுரைக்குப் போவதற்குக் காரணம், அந்த ஊர் சாப்பாடு மாதிரி எங்கேயும் கிடைக்காது.  இத்தனைக்கும் ஓட்டல் சாப்பாடே அப்படி இருக்கும். 

நண்பரிடமிருந்து அடுத்த மெஸேஜ் இன்று காலை.  இட்லியா அது.  அடித்தால் அவன் மண்டையே உடைந்து விடும் போலிருக்கிறது.

உடனே நான் அலெர்ட் ஆகி விட்டேன்.  என்னது, இட்லிக்குப் பிரச்சினையா?  மதுரை இட்லி பற்றியே நூறு பக்கம் எழுதியிருப்பேனே?  பெரிய பெரிய இட்லி பானைகளில் ஆவி பறக்க இட்லியை இறக்கி இரவு ஒரு மணிக்கு ரெண்டு மூணு சட்னியோடு தெருமுனைகளில் கொடுப்பார்களே?  அந்த மணமே சொர்க்கமாயிருக்குமே?  ஒரு தட்டில் இருபது இட்லி வரும்.  அதை அப்படியே கவிழ்த்துப் போட்டு தட்டை எடுத்து விட்டு இட்லியின் மேல் இருக்கும் துணியை எடுத்தால் வரும் இட்லியின் ஆவிக்கு நிகர் என்ன இருக்கிறது உலகத்தில்?  அதற்கா வந்தது கேடு?

இப்படி நினைத்துக் கொண்டு, ”நேரம் இருக்கும்போது என்னை அழையுங்கள்” என்று மெஸேஜ் போட்டேன்.  பிறகு நானே வெறுமனே அழையுங்கள் என்றால் புரியாதே என நினைத்து “இட்லிக்கு ஒரு பிரச்சினைன்னா பொங்கிருவேன்” என்றும் உபமெஸேஜ் தட்டினேன்.  இதற்கு ஒத்தர் என்ன செய்யலாம்?  நேரம் இருக்கும்போது அழைக்கலாம்.  அல்லது, என் மெஸேஜை வேலை மும்முரத்தில் மறந்தும் விடலாம்.  பொதுவாக நண்பர்கள் செய்வது இரண்டாவது.  இந்த நண்பர் என்ன செய்தார் தெரியுமா? 

உங்கள் மெஸேஜ் ஜோக்கா சீரியஸா? 

***

சந்தா/நன்கொடையை ஞாபகப்படுத்துகிறேன்.

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai