இன்று முகமூடியிலிருந்து மூன்று பகுதிகளை வாசிக்கிறேன்…

இதை வாசிக்கும் நண்பர்கள் தயவுசெய்து இந்தச் செய்தியை நண்பர்களிடையே பகிர்ந்தால் நலம்.

இன்று மாலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக் லைவ்-இல் என்னை நீங்கள் சந்திக்கலாம். ஒரு மணி நேரம் பேசுவேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். கேள்வி ஒன்றுதான் வந்துள்ளது. காமெண்ட்டில் கேள்வி கேட்கலாம் என்று நினைத்திருப்பீர்கள். நான் பேசும்போதுதானே கேள்விகள் தோன்றும்? அதுவும் சரிதான். ஆனால், நான் பேசிக் கொண்டே காமெண்ட் பாக்ஸைப் பார்ப்பது எனக்குக் கஷ்டம். உதவிக்கு முத்துக்குமார்தான் வழக்கமாக வருவார். அவர் கேள்விகளை எழுதி எழுதிக் கொடுத்து விட்டால், பதில் சொல்லலாம். ஆனால் அவர் வெளியூர் போயிருக்கிறார். அடுத்து ஸ்ரீராம். அவரும் வெளியூர் போயிருக்கிறார். எனவே எனக்கு உங்கள் கேள்விகளை மின்னஞ்சல் செய்யலாம். அல்லது, இப்போதே காமெண்ட்டில் போடலாம். பேசும் போதே காமெண்ட்டில் பார்க்க முயற்சிக்கிறேன்.

எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம். உங்களுக்கெல்லாம் வணக்கம் சொல்லி விட்டு நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டால் ஏன் யாருமே காமெண்ட்டில் வந்து கேட்கிறது என்று சொல்வதில்லை? பிறகு நான் கார்த்திக்குக்கு போன் போட்டு கேட்கிறதா என்று கேட்டு அவர் கேட்கிறது என்று சொல்லி, அப்…. பா… பயங்கரம்.

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நேற்று பத்து மணிக்கு ராம்ஜிக்கு போன் செய்தேன். 102 முன்பதிவு வந்ததாகச் சொன்னார். இந்நேரம் ஒரு 20 சேர்ந்திருக்கும். எல்லோருக்கும் நன்றி. அப்படியே 1000க்குக் கொண்டு சேர்த்தால் ஆகாயத்தில் பறப்பேன். மாலை ஆறு மணிக்கு சந்திப்போம். ஏழு மணி வரை பேசுவேன்.

ஆ, ஒரு முக்கிய விஷயம். நாவலிலிருந்து மூன்று இடங்களை வாசித்துக் காண்பிப்பேன். மூன்று இடங்கள். கதி கலங்க அடிக்கும் மூன்று இடங்கள். ஆனால் சஸ்பென்ஸை உடைக்காத இடங்கள்.

இன்னொரு மிக மிக முக்கியமான விஷயம். இந்த நாவலில் முதல் வாக்கியத்திலேயே ஒரு சஸ்பென்ஸ் ஆரம்பிக்கிறது. அது உங்களை ஒரு மெக்ஸிகன் வெப் சீரீஸ் மாதிரி இழுத்துக் கொண்டே போகும். புத்தகத்தைக் கீழே வைக்கவே முடியாது. சரி, கடைசிப் பக்கத்தைப் படித்து விட்டுத் தொடரலாம் என்றும் நினைக்க முடியாது. ஒவ்வொரு அத்தியாயமாகத் தொடர்ந்தால்தான் சஸ்பென்ஸைப் புரிந்து கொள்ள முடியும். இது ஒருவித கதை சொல்லல் பாணி. என்னுடைய கதை சொல்லல் முறைக்கு நேர் எதிரானது. என்னுடைய நாவலை நீங்கள் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இதை அப்படிச் செய்ய முடியாது. வீடு கட்டுவது போல் படிக்க வேண்டும். ஒன்றின் மேல் ஒன்று. அதோடு போயிற்று என்றால் இல்லை. கடைசியில் சஸ்பென்ஸ் உடைந்ததா, உடனே மீண்டும் ஒருமுறை படித்தால்தான் முதலில் சொல்லப்பட்டதையெல்லாம் வேறொரு கோணத்தில் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் இப்படி ஒரு நாவலை நான் படித்ததே இல்லை என்கிறேன்.

மாலை ஆறு மணி. நாவலிலிருந்து மூன்று இடங்களைப் படிக்கிறேன். நாவலை முன்பதிவு செய்ய: