அ-காலம் தொடர் பற்றி…

ஒரு விஷயம் கவனித்தேன்.  என் தளத்தில் நான் தினந்தோறும் எழுதினால் மாதம் ஐம்பது பேர் சந்தா/நன்கொடை அனுப்புகிறார்கள்.  வாரம் ஒரு தடவை எழுதினால் அஞ்சு பேர்தான் அனுப்புகிறார்கள்.  அந்த அஞ்சு பேரும் என் நெருங்கிய நண்பர்கள்.  நான் எதுவும் எழுதாமலே போனாலும் அனுப்புவார்கள்.  ஒரு தகவலுக்காகச் சொன்னேன். இப்படி என் தளத்தில் வாரம் ஒருமுறை எழுதினாலும் bynge.in என்ற செயலியில் வாரம் இரண்டு முறை என் கட்டுரைகள் அ-காலம் என்ற தலைப்பில் வந்து கொண்டிருக்கின்றன.  நான் அ-புதினங்களாக … Read more

தேவதையும் பிசாசும்…

ஒரு பிரபல எழுத்தாளரோடு அடிக்கடி பேசுகிறேன்.  கொரோனா காலம் என்பதால் நேரில் பார்ப்பதில்லை.  இல்லையென்றால் நிச்சயம் நேரிலும் சந்தித்திருப்பேன்.  பெயரைக் கூட குறிப்பிடலாம்.  மறுபடியும் புகார் வரும்.  புகார் என்னவென்றால், ரொம்ப நெருங்காதீர்கள் என்பதுதான்.  ஏன், அவ்வளவு கெட்டவரா அவர்?  சே, சே, நீங்கள் மகாத்மா மகாத்மா என்று பலரையும் சொல்வீர்களே, அப்படி ஒரு மகாத்மாதான் அவர்.  ஆனால் அதே சமயம் நீங்கள்தானே வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகினால் கத்தியால் குத்தி விடுவார் என்பீர்கள், அதனால் அந்த … Read more

the ghost bug

“நான் பெரிதாக மெனக்கெடவில்லை, விடுமுறை காலத்தில் இரண்டு நாட்கள் ஜாலியாக ஷூட் செய்தபோது இருந்ததோடு சரி. ஸ்கிரிப்ட் பேப்பர் கூட எழுதவில்லை. அவ்வப்போது திடீரென்று, சுரா வாங்க, மலர் வாங்க, இப்டி பண்ணுங்க, இப்டி எடுங்க என சீன் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கழிச்சி அடுத்த ஷாட் பாத்துக்கலாம் என வேப் தூக்கிக்கொண்டு பால்கனிக்கு சென்று விடுவேன். தன்னடக்கம், பணிவு எல்லாம் இல்லை. இப்படித்தான் நடந்தது.” The Ghost Bug படம் பற்றி அராத்து தன் … Read more

ரோஹிணி மணியின் ஓவியங்கள்

முன்பெல்லாம் புத்தக அட்டைகளுக்கு எழுத்தாளர்கள் ரொம்பவே மெனக்கெடுவார்கள். இப்போதும் அப்படித்தான் மெனக்கெடுகிறார்கள். ஆனால் இப்போது ஓவியர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது. கிட்டத்தட்ட இரண்டு இனமும் ஒன்றை ஒன்று அறியாத வேற்றுக் கிரகவாசிகளாகவே ஆகி விட்டனர். முன்பு கிருஷ்ணமூர்த்தி தான் எல்லா புத்தகங்களுக்கும் அட்டை போடுவார். அவருடைய ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலை போகும். ஆதிமூலம் இன்னும் மேலே. இன்னமுமே அவர் ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலைக்குத்தான் விற்கின்றன. சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர். தன்னை … Read more

சினிமா விமர்சனம்

வணக்கம். உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கும். இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல். கர்ணன் திரைப்படம் பற்றிய உங்கள் கருத்தை உங்கள் ப்ளாகில் சில தினங்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. சரத் டியர் சரத், என் நண்பரும் நானும் மொழிபெயர்த்த முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் பற்றிய கருத்தை நண்பர் மாரி செல்வராஜிடம் கேட்டீர்களா? சாரு