உங்களுக்கு யார் மீது பொறாமை? (சிறுகதை)

ஒருமுறை கல்கி நேர்காணலில் அமிர்தம் சூர்யா ஒரு கேள்வி கேட்டார்.  அது ஒரு ஜாலி பேட்டி என்பதால் ஜாலி கேள்விதான்.  உங்களுக்கு யார் மீது பொறாமை?  சூர்யா எதிர்பார்த்த பதில் ஜெயமோகன் என்று புரிந்தது.  ஆனால் எனக்கு எப்போதுமே ஜெ. மீது பொறாமை இருந்ததில்லை.  ஏனென்றால், அவரிடம் after all ஒரு ஜாக்வார் கார் கூட இல்லை.  நிதானமாக உட்கார்ந்து எழுத கரீபியன் கடலில் ஒரு தீவு இல்லை.  மேலும், என்னை எத்தனை பேர் திட்டுகிறார்களோ அதைவிடக் … Read more

சிறுகதை எழுதுவது எப்படி?

நேற்று ஒரு சம்பவம் நடந்தது.  அந்தக் காலத்தில் வெற்றிலை போடுபவர்கள் எச்சிலைத் துப்ப ஒரு குடுவை மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா?  அதன் பெயர் மறந்து விட்டது.  ஐந்து நிமிடத்துக்குள் தேவை.  குமுதத்துக்கு இந்த வாரம் கட்டுரைக்கு பதிலாக ஒரு கதை அனுப்பினேன்.  அந்தக் கதைக்குத் தேவை.  பெயர்கள் மறந்து போவது பற்றிய கதை.  அதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொருளின் பெயர் மறந்து விட்டது.  தொண்டையில் நிற்கிறது.  வரவில்லை.  ராம்ஜிக்கு போன் போட்டேன்.  … Read more

ஜானின் மகளுக்குக் கல்யாணம்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மூன்று வாட்ச்மேன்களில் ஒருவர் ஜான்.  ஜானின் மகளுக்குக் கல்யாணம்.  என்னிடம் நாலாயிரம் பணம் கேட்டாள் அவந்திகா.  உயிரையும் எழுத்தையும் தவிர அவள் எது கேட்டாலும் கொடுப்பேன் என்பதால் கொடுத்தேன்.  நாலாயிரம் ஜானுக்குக் கை மாறியது.  மற்ற குடித்தனக்காரர்கள் அதிர்ச்சியும் வெளியே காட்டிக் கொள்ள முடியாத கோபமும் அடைந்தார்கள்.  ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார்.  ”ஏன் மேடம், இது ரொம்ப ஜாஸ்தி இல்லையா?”  “என்னிடம் பணம் இல்லை.  இருந்திருந்தால் நானே கல்யாணம் செய்து வைத்திருப்பேன்” … Read more

எழுத்தாளனோடு பழகுதல்

அராத்து எழுதிய ஒரு பதிவு பின்வருவது.  அதைத் தொடர்ந்து என் கருத்து வரும். மந்தஹாஸினி எழுதும்போது சில நேரங்களில் சாருவை தொடர்பு கொண்டு, இந்த வார்த்தைக்கு தமிழில் என்ன போடலாம் சாரு எனக் கேட்டேன். அவரும் பல வார்த்தைகளுக்கு தமிழில் சொன்னார், சில வார்த்தைகளுக்கு , நான் இதை ஆங்கிலத்திலேயே போட்டு விடுவேன் என்று சொன்னார். வரலாற்று நாவல் என்பதால் ஆங்கிலத்தில் போட முடியாதே என்று சொல்லி விவாதித்து வார்த்தைகளை முடிவு செய்தேன். ஆனாலும் வரலாற்று நாவலில் … Read more

சில விடுபடல்கள்

தரிசனம் என்ற சிறிய குறிப்பில் நான் நினைத்த மாதிரியே சில முக்கியமான பெயர்கள் விடுபட்டு விட்டன. அவர்கள் என் குடும்ப உறுப்பினர்களைப் போல. ஆனந்தி, சிவா மெடிக்கல்ஸ் சிவா, அருணாசலம், செல்வகுமார், ஆடிட்டர் ஸ்ரீதர். இதையும் கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதுதான் என் கொடுப்பினை.