12. Aura…

வாசகர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்கு க்ஷமிக்க வேண்டும்.  காலை நாலு மணிக்கு எழுந்து முன்பெல்லாம் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.  இப்போது அந்த தியானத்தை விட மேன்மையான ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  நான் இப்படிச் சொல்வதன் பொருள் உங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் என் நாவலை வாசிக்கும்போது தெரியும்.  It’s not a transgressive novel as has always been.  இது வேறு வகையானது.  மும்முரமாக அதில் ஈடுபட்டிருப்பதால் இந்தப் பக்கம் எட்டிப் … Read more

13. இசை பற்றிய சில குறிப்புகள்

ஜி.என்.பாலசுப்ரமணியம் கர்னாடக சங்கீதத்தின் சாதனைகளில் ஒருவர். 1959-இல் அகில இந்திய வானொலியில் நேரலையில் ஒலிபரப்பப்பட்ட இந்தக் கிருதியைக் கேட்டுப் பாருங்கள். தீக்ஷிதரின் புகழ்பெற்ற நவாவர்ண கிருதிகளில் ஒன்றான கமலாம்பாம் பஜரே கிருதி. வியோலா வாசித்திருப்பவர் பாலமுரளி கிருஷ்ணா. இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட அடுத்த வாரமே இதே கிருதியை இதே அகில இந்திய வானொலியில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அப்போது பாலமுரளி 29 வயது இளைஞர். அந்த ஒலிப்பதிவு எனக்குக் கிடைக்கவில்லை. பின்வருவது ஜி.என்.பி. 1959-இல் பாடியது. அதற்கு … Read more

12. இசை பற்றிய குறிப்புகள்

இந்தச் சம்பவம் நடந்தது 1926.  ஒரு பத்து வயதுச் சிறுமி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருகிறாள்.  அவளை அவளுடைய அம்மா திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து ஒரு லாலி பாடச் சொல்கிறாள்.  அம்மாவே பக்கத்தில் அமர்ந்து வீணையை மீட்டுகிறாள்.  சிறுமி பாடுவதை ஓரியண்டல் ரெகார்ட்ஸ் நிறுவனம் ஒலிப்பதிவு செய்து கொள்கிறது.  அதுதான் கீழே வருவது.  அதில் சில அபூர்வமான புகைப்படங்களும் உள்ளன.  சிறுமியின் அம்மாவின் பெயர் மதுரை சண்முகவடிவு.  சிறுமியின் பெயர் சுப்புலட்சுமி. பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்ற அச்சிறுமியின் … Read more

11. கூழாங்கல் தொடர்கிறது…

(இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் எண் 9-இல் உள்ள “மீண்டும் ஒருவர்” என்ற பதிவையும், 5ஆம் 3-ஆம் எண்களில் உள்ள கூழாங்கல் கட்டுரைகளையும் படித்து விட்டு இதைத் தொடரவும்.  அவற்றின் தொடர்ச்சிதான் இது.)  அன்புள்ள சாரு அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்கு நாவலை அனுப்பி வைத்த ஒரு இளம் எழுத்தாளர் பற்றி நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குமான என் கேள்விகளும் சந்தேகங்களும் இவை. இதை எழுத முதலில் தயங்கினாலும் உங்கள் எழுத்தை இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் … Read more

11. இசை பற்றிய சில குறிப்புகள் – பொன்னையா பிள்ளை

இரண்டு தினங்களாக இடைவிடாமல் அமர்ந்து கே. பொன்னையா பிள்ளை இயற்றி 1940-ஆம் ஆண்டு வெளிவந்த “தஞ்சை பெருவுடையான் பேரிசை : தான வர்ணங்களும் கீர்த்தனங்களும், ஸ்வர ஸாஹித்தியங்களுடன்” என்ற அரிய நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  நான் இதைப் படித்து எந்தப் பயனும் இல்லை.  இது சங்கீதக் கலைஞர்கள் பயில வேண்டிய நூல்.  ஒவ்வொரு கீர்த்தனத்துக்கும் notations இருக்கின்றன.  ஓதுவா மூர்த்திகள் மரபில் வந்தவர்களும் முத்துஸ்வாமி தீட்சிதரின் மாணவர்களும், தஞ்சை-திருவனந்தபுரம்-மைசூர் முதலிய சமஸ்தான வித்வான்களும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் … Read more

திருக்கல்யாணம் (தொடர்ச்சி)

ஒரு பிழை இருந்தது. என் குருநாதரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடவில்லை. ஹெச்சரிககா என்பதில் ரி-யை முழுங்கி விட்டேன். தட்டச்சுப் பிழை. ஆனால் இன்னொரு பிழை முக்கியமானது. குருநாதரோடு கூட வினித்தும் குறிப்பிட்டார். கே.வி.என். என் குருநாதர் கே.வி.என்.னின் சிஷ்யர் வேறு. கே.வி.என்.னை எப்படி மறந்தேன் எனத் தெரியவில்லை. அரியக்குடி, கே.வி.என். இருவருமே ஹெச்சரிககாவில் முழுமை.