frenzy, just frenzy…
கோக் ஸ்டுடியோவில் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இதைப் பாடிய பெண் ஃபரிஹா பர்வேஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஃபரிஹாவின் மிகத் தீவிர ரசிகன் நான். ஜோகி என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்.
கோக் ஸ்டுடியோவில் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இதைப் பாடிய பெண் ஃபரிஹா பர்வேஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஃபரிஹாவின் மிகத் தீவிர ரசிகன் நான். ஜோகி என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்.
நான் மாதம் நான்கு தினங்கள் வெளியூர் சென்று விடுகிறேன். அப்போது சில நண்பர்களை என்னோடு வருவதற்காக அழைக்கிறேன். நான்கு நாட்கள் என்னோடு தங்கிப் பேசலாம். யாரை அழைத்தாலும் வேலை இருக்கிறது என்கிறார்கள். என் வயது எழுபத்து மூன்று. இன்னும் ஏழு ஆண்டுகள் இருப்பேன் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு தாராளமான காலம். இந்த ஏழில் வருடத்துக்கு ஒரு முறை நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள் என்றாலே எழு சந்திப்புதான் வருகிறது. இதன் காரணமாகவே, நான் அசோகமித்திரனை அவரது … Read more
தியகராஜர் பிராமண வித்வான்களின் வழிபாட்டுக்குரியவர். அவரை ஏடாகூடமாக, ஸ்ருங்கார பாவனை கலந்து எதாவது எழதப் போய் அதை இந்த மயிலை மாமாக்கள் ஏடாகூடமாக அர்த்தம் பண்ணிண்டு எதிர்க்க, உங்களுக்கு ஆதரவாக டி. எம் க்ருஷ்ணா, இந்து ராம் இத்யாதிகள் வந்தால் ஒரே அதகளம் ஆகலாம். பார்த்துக் கொள்ளுங்கள். பாலசுப்ரமணியன். டியர் பாலா சார், என் தியாகராஜாவில் எந்த ஸ்ருங்கார ரஸமும் இராது. தியாகராஜர் ஆதி சங்கரர் போன்று கவித்துவத்தின் உச்சம் கண்டவர் இல்லை. தியாகராஜரிடம் செயல்படுவது முழுக்க … Read more
அன்புத் தோழிக்கு, இவர் ஏன் இப்படி வரிந்து வரிந்து இந்தப் பிரச்சினை பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார் என்று நினைக்காதே. நான் வாங்கும் கெட்ட பெயர் பற்றித் தொடர்ந்து யோசிக்கும்போது என் வாழ்க்கை வரலாறே என் ஞாபகத்தில் நிழலாடுகிறது. இரண்டே சம்பவங்களைக் குறிப்பிட்டு இந்த soliloquyயை முடித்துக் கொள்கிறேன். 1.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலையில் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ணினேன். அப்போது கிருஷ்ணா பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை. ஆனால் அவரைப் பிடிக்கும். ஒரு … Read more
சென்ற கட்டுரையில் என்னை உடல் கேலி செய்பவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருக்கிறார்கள், என் மனைவி உட்பட என்று எழுதியிருந்தேன். பிராமண நண்பர்கள் வருத்தப்படக் கூடாது. அபிராமணர் ஒருத்தர் கூட எனக்கு புத்திமதி சொல்லவோ, என்னை உடல்கேலி செய்யவோ முயற்சி செய்ததில்லை. எனக்கு புத்திமதி சொல்பவர் அனைவரும் பிராமணர். உடல்கேலியில் ஈடுபடுவோர் அனைவரும் பிராமணர். ஏன் என்றுதான் கேட்கிறேன்? இப்போது நான் தியாகராஜா நாவல் எழுதுவதைக் கிண்டல் செய்தவர் கூட பிராமணர்தான். மட்டுமல்லாமல் ஊரே கொண்டாடும் நல்லவர். என்னிடம் … Read more
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே திருமூலரின் மூன்றாம் தந்திரம், 13-ஆம் பிரிவில் (காயசித்தி உபாயம்) உள்ள பாடல் எண் 724 உடம்பை வளர்ப்பது சாதாரண காரியம்தான். அதே சமயம் சாதாரண காரியமும் அல்ல. இடைவிடாமல் உடம்பைப் பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஒரு வாகனத்தைப் பராமரிப்பது போன்றதுதான் இது. நம் உடலும் ஒரு வாகனம்தான். இதற்கு நான் இரண்டு பேரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். … Read more