மாபெரும் நாடகம்

Peter Paul Rubens நானொரு மாபெரும் நாடகத்தை நடத்தத் திட்டமிட்டேன் நடிகர்களை உருவாக்கினேன் கலை இயக்குனரை அழைத்து செட் பற்றி விளக்கினேன் எல்லாம் நிஜத்தைப் போலவே இருக்க வேண்டும் என்றேன் மரம் செடி கொடி நிலா நட்சத்திரம் கோட்டை கொத்தளம் குளம் கடல் மீன் பறவை யானை குதிரை கழுதை புழு பூச்சி ஏரி காடு எரிமலை பாலை பாறை மண் கல் வயல் நதி நீர்வீழ்ச்சி காற்று புயல் மழை அக்கினி போலீஸ் ஸ்டேஷன் பாராளுமன்றம் … Read more

ராஸ லீலா – ஒரு வாசகனாக…

தான் எழுதிய பழி நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகள் கழித்து இப்போது அது பற்றிப் பரபரப்பாக விவாதங்கள் வந்து கொண்டிருப்பதன் அபத்தம் மற்றும் அவலம் பற்றி எழுதியிருந்தார் அய்யனார் விஸ்வநாத்.  தமிழ் எழுத்துச் சூழலின் எத்தனையோ அபத்தங்களில் ஒன்று அது.  தற்சமயம் ராஸ லீலா மறுபதிப்புக்காக பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  அந்த வேலை ராணுவக் கொட்டடி சித்ரவதை மாதிரி என்றும் எழுதியிருந்தேன்.   அப்போது ராஸ லீலா பற்றிய ஞாபகச் சிதறல்களிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை.  என் எழுத்தோடு … Read more

புத்தகமே நிதியாக

தமிழ் ஸ்டுடியோ போன்ற ஒரு பேரியக்கத்தை தொடர்ந்து நடத்துவதும், அதில் புதிய களப்பணிகளை மேற்கொள்வதும், புதிய புதிய முன்னெடுப்புகளை முன்னெடுப்பதும் பெரும் சவால் நிறைந்த வேலை. சவால் செய்யும் பணியில் இல்லை, மாறாக பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலாக இருக்கிறது. நானும் எத்தனையோ வழிமுறைகளை புதிது புதிதாக கண்டுபிடித்து நிதி திரட்டி, வருமானம் ஈட்டி நடத்தி வருகிறேன். ஆனாலும் பெரும் ராட்சசன் போல பணியாற்று பெரும் சமூக இயக்கம் என்பதால் நிதி மேலும் மேலும் தேவைப்படுகிறது. IFFC … Read more

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…

இலக்கியப் பரிச்சயம் இல்லாத சராசரி வாசகர்கள் எடுத்த எடுப்பில் என்னுடைய நாவல்களைப் படித்தால் அரண்டு போவார்கள். அப்படிப்பட்டவர்கள் அணுக வேண்டிய என் புத்தகம் கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங். இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். படிக்க வேண்டும். பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் படிக்க வேண்டும். இதை எல்லோரும் எல்லோருக்கும் பரிசாகவும் அளிக்கலாம். அதிலிருந்து ஒரு பகுதி கீழே: வ.ரா. பாரதியின் நெருங்கிய நண்பர். அவர் எழுதிய பாரதியின் வரலாற்றில் ஒரு இடம். வ.ரா.வின் வார்த்தைகளிலேயே: ”ரௌலட் … Read more

சிறுகதை வாசிப்பு

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என்னுடைய முக்கியமான சிறுகதையை வாசித்திருக்கிறேன்.  கேட்கவும்.  ஆனால் சிறார்கள் கேட்க வேண்டாம். This creation contains adult content.  ஒளிப்பதிவு செய்தவர் கார்த்திக் நாகேந்திரன்.