தமிழ் ஸ்டுடியோ போன்ற ஒரு பேரியக்கத்தை தொடர்ந்து நடத்துவதும், அதில் புதிய களப்பணிகளை மேற்கொள்வதும், புதிய புதிய முன்னெடுப்புகளை முன்னெடுப்பதும் பெரும் சவால் நிறைந்த வேலை. சவால் செய்யும் பணியில் இல்லை, மாறாக பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலாக இருக்கிறது. நானும் எத்தனையோ வழிமுறைகளை புதிது புதிதாக கண்டுபிடித்து நிதி திரட்டி, வருமானம் ஈட்டி நடத்தி வருகிறேன். ஆனாலும் பெரும் ராட்சசன் போல பணியாற்று பெரும் சமூக இயக்கம் என்பதால் நிதி மேலும் மேலும் தேவைப்படுகிறது. IFFC க்கு பிறகான தமிழ் ஸ்டுடியோ பெரும் நிதி சிக்கலில் இருக்கிறது. இப்போது புதிய ஒரு வேண்டுகோளை நண்பர்களிடம் வைக்கிறேன். உங்களிடம் இருக்கும் பழைய புத்தகங்களை அது என்ன புத்தகமாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தைகளின் பாடப்புத்தகமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு தேவை இல்லை, வீட்டை அடைத்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் எல்லா புத்தகங்களையும் தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்துவிடுங்கள். இந்த புத்தகங்களை மாதம் ஒரு முறை புத்தக சந்தை உருவாக்கி அதில் குறைந்த விலைக்கு விற்று கிடைக்கும் பணத்தை தமிழ் ஸ்டுடியோ இயக்கம் அதன் நிதியாதாரமாக உருவாக்கிக்கொள்ளும். உங்களிடம் இருக்கும் தேவைய்ற்ற அல்லது பழைய புத்தகங்கள் ஒரு சமூக இயக்கத்திற்கு நிதி திரட்ட பயன்படுகிறது என்றால் கொடுத்து உதவலாமே. பியூர் சினிமா அலுவலகத்திற்கு அழைத்து உங்கள் முகவரியை சொன்னால் போதும், நாங்களே வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்கிறொம். எந்த பகுதியாக இருந்தாலும். வெளிமாவட்ட நண்பர்கள் டூ பே போட்டு ஏதாவது ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டால் நாங்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்கிறோம்.
இதில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் பதிப்பக நண்பர்களும் தமிழ் ஸ்டுடியோவிற்கு நிதி திரட்டும் இந்த முயற்சியில் உதவலாம். உங்கள் பதிப்பகம் பதிப்பித்த புத்தகங்களின் பழைய விற்பனையாகாத புத்தகங்கள், உங்களுக்கு தேவைய்ற்ற புத்தகங்கள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தால் அதே புத்தக சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து தமிழ் ஸ்டுடியோ இயக்கம் தனக்கு தேவையான நிதியை திரட்டிக்கொள்ளும். பழைய புத்தகங்களோ அல்லது தேவைய்ற்ற புத்தகங்களோ இல்லை என்றால், உங்கள் பதிப்பகத்தின் புத்த்கங்களில் சில பல ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்தால் அதனை விற்று தமிழ் ஸ்டுடியோ தனக்கு தேவையான நிதி திரட்ட முயற்சிக்கும். புத்தகங்கள் பதிப்பிப்பது போல ஒரு சமூக இயக்கத்திற்கு தேவையான உதவியை செய்ய வேண்டியதும் உங்கள் சமூக பொறுப்பு என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த எண்ணிற்கு அழைத்தால் நாங்களே வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்கிறோம். அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு நீங்களே புத்தகங்களை அனுப்பி வைக்கலாம். பணமாக எங்களால் நிதி தர இயலாது என்று நினைக்கும் புத்தகங்களை நிதியாக தரலாமே.
அழைப்பேசி: 9840644916, 044 48655405
முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026,
வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.