கூலி இல்லாமல் செய்யும் வேலை (2)

ஒரு பிழை நேர்ந்து விட்டது.  விகடன் அனுப்பிய 2000 ரூபாய் காந்தி கணக்கில் சேர்ந்து விட்டது.  அதாவது, என்னுடைய பழைய சின்மயா நகர் வங்கிக் கணக்கு.  அது அவந்திகாவின் பெயரில் இருப்பது.  தவறுக்கு உண்மையிலேயே வருந்துகிறேன்.  யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.   இலக்கியப் பத்திரிகை என்றால் பணம் கொடுக்க மாட்டார்களோ என்ற என் அச்சமும், பணம் வரவில்லையே என்ற கவலையோடு சேர்ந்து கொண்டு  விட்டது.  இதை நீங்கள் குழந்தைப் பிராயத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட … Read more

கூலி இல்லாமல் செய்யும் வேலை

இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்களை நான் பத்திரிகைகளில் எழுத முடியாது.  எனவே இங்கே எழுதுகிறேன். நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்கலாம்.  இந்த இணைய தளத்தில் சமீப காலமாக என்னுடைய அக்கவுண்ட் நம்பரை நான் கொடுப்பதில்லை.  யாரிடமும் பணமும் கேட்பதில்லை.  காரணங்கள் இரண்டு.  ஒன்று, அனாவசியமாக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற அவப்பெயர் ஏற்படுகிறது; இரண்டாவது, யாரும் பணமும் அனுப்புவதில்லை.  இந்த இரண்டாவது காரணம்தான் பிரதானமான காரணம்.  யாராவது ஒருவர் ஐநூறு ரூபாயோ நூறு ரூபாயோ அனுப்புவார்.  எனக்கு … Read more

ஓர் அற்புதத் தருணம்

பிரபு காளிதாஸ் என்னை எடுத்த புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இது. சிற்பி வித்யாஷங்கர் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. சிப்பிப்பாறை இன நாய். பெயர் மறந்து விட்டேன். பொதுவாக நாயைக் கட்டிப் போடக் கூடாது. ஆனால் ஸ்தபதி 80 வயது முதியவர் என்பதால் அதைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருக்கிறார்.   அவருடைய செல்லக் குட்டி எனக்கு முத்தமிட்ட அந்தத் தருணம் வாழ்வில் மறக்க முடியாதது.  பிரபுவுக்கு நன்றி.

ப்யூர் சினிமா

பியூர் சினிமா – ஆன்லைனில் புத்தகங்கள் வாங்க… பியூர் சினிமா புத்தகக் கடையில் உள்ள புத்தகங்ளை இனி நண்பர்கள் ஆன்லைன் மூலம் வாங்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் உள்ள புத்தகங்களின் பட்டியல் துறை வாரியாக, எழுத்தாளர் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா புத்தகங்களை மட்டுமே விற்கும் உலகின் முதல் இணையத்தளம் பியூர் சினிமா புத்தக அங்காடியில் இணையத்தளம். இனி நண்பர்கள் இருந்த இடத்தில் இருந்தே உங்களுக்குத் தேவையான புத்தகங்ளை பெற்றுக்கொள்ளலாம். படச்சுருள் சந்தாவையும் … Read more