அருள் கொண்டு எழுதினது

மூன்று வாரம் இருக்கும். நாவலை முடித்து சில நண்பர்களுக்கு அனுப்பினேன். ஓரிரு தினங்கள் கடந்திருக்கும். என்ன சொன்னார்கள் என்று கேட்டாள் அவந்திகா. ஒரு சத்தம் இல்லை என்றேன். ஏன் என்றாள். ”எல்லாம் மெண்டலாகியிருப்பார்கள்” என்றேன். அவர்கள் ஆகிறார்களோ இல்லையோ, மூன்று மாதமாக நீ இருந்த கதியைப் பார்த்து நான் மெண்டலாகி விட்டேன் என்று ஒரு போடு போட்டாள் அவந்திகா.

அதற்குப் பிறகு நாவல் பற்றி ராஜேஷும், சீனியும், இன்னும் ஓரிரு நண்பர்களும் நல்ல கருத்து சொல்லி என்னைத் தேற்றினார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அவந்திகா ஏன் அப்படிச் சொன்னாள் என்பது பற்றித்தான் இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும்.

சாமி வந்த ஆசாமிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அருள் வந்து விட்டது என்பார்கள். அருள் வந்தவர்கள் வெறிக்கூச்சல் போட்டு அங்குமிங்குமாக அலைந்து ஆடுவார்கள். வேறு சிலர், அங்கே இங்கே நகராமல் குந்தினது குந்தியபடி இருப்பார்கள். உடம்பு மட்டும் முன்னும் பின்னும் இடதும் வலதுமாக ஆடிக்கொண்டிருக்கும். ஏதேதோ முனகுவார்கள். உள்ளுக்குள் ஒரு கர்ஜனை கேட்கும். கண்களைத் திறந்தால் நெருப்புத் துண்டங்களைப் போல் இருக்கும்.

மூன்று மாதங்களாக நான் அந்த நிலையில்தான் இருந்தேன். யாரிடமும் பேசவில்லை. அதாவது, அவந்திகாவுடன்கூடப் பேசவில்லை. சுற்றுப்புறம், லௌகீகம் எதுவும் என்னை பாதிக்கவும் இல்லை.

இந்த மூன்று மாதங்களில்தான் என் வாழ்நாளில் நான் அனுபவித்திராத சிரமங்களையெல்லாம் அனுபவித்தேன். தியாகராஜர் தன் கீர்த்தனை ஒன்றில் சொல்கிறார், கடினமான சரீர உழைப்பில் ஈடுபடுபவர்கள் செய்யும் வேலைகளையெல்லாம் செய்தேன் என்று. நாவலை ஆரம்பித்த தினம் பணிப்பெண் நின்று விட்டார். வேறு பணிப்பெண்கள் யாரும் கிடைக்கவில்லை. மூன்று மாதமாக. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வந்திகாவுக்கு உடல் சுகமில்லாமல் போனது. இப்போது நான் நாவலை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். நேற்றே முடித்திருக்க வேண்டும். பொதுவாக மதியம் மூன்றிலிருந்து நள்ளிரவு வரை எழுதுவேன். ஆனால் நேற்று நான் வேலையைத் தொடங்கவே மாலை ஆறு மணியாகி விட்டது. ஒரு மணி வரை செப்பனிடும் வேலையில் இருந்தேன். இருந்தும் இன்னும் ஒரு ஐம்பது பக்கம் இருக்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடித்து விடுவேன்.

இந்த செப்பனிடும் பணி மிக முக்கியமானது. ஏனென்றால், ஏற்கனவே சொன்னது போல நான் மூன்று மாதமாக அருள் வந்த நிலையில்தான் இருந்தேன். உறக்கமும் விழிப்புமற்ற நிலை. அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி (Alejandro Jodorovsky) தன் படங்களில் நடிக்கும் நடிகர்களை ஒரு வார காலம் தூங்க விடாமல் செய்து அதற்குப் பிறகுதான் நடிக்க வைப்பாராம். அப்படித்தான் இருந்தேன் நான். உறக்கத்திலேயே கதை ஓடும். எழுந்து வந்து தட்டச்சு செய்வேன். அதனால் பல தட்டச்சுப் பிழைகள். வயலின்கள் என்பது வில்லியன்கள் என்று வந்திருந்தது. Timpani என்பது திம்கானி என்று தமிழில் வந்திருந்தது.

என் வாழ்வில் சந்தித்திராத துன்பங்கள் வந்தன என்றேன் அல்லவா? சரீர உழைப்பு தவிர மன உளைச்சலுக்கும் குறைவில்லை. தொடர்ந்து மரணச் செய்திகளாகவே வந்துகொண்டிருந்தன. எல்லாம் நாற்பது வயதுக்குட்ப்பட்டவர்கள். எல்லாம் எனக்கு மிக நெருக்கமானவர்கள். கடைசியில் சென்ற வாரம், நாவலை முடிக்க இருந்த தருணத்தில் என் வலதுகரமாக விளங்கிய ஒரு இளம் நண்பனின் மரணம். குரூரமான சாலை விபத்து.

தயவுசெய்து மன்னியுங்கள். நான் பௌதிக ரீதியாக இந்த உலகில் இருந்தாலும் இந்த உலகில் இல்லாதவனாகவே இருந்தேன். அ-பௌதிக உலகம். Astral என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த உலகில் இருந்தாலும் இந்த உலகில் இல்லை. அவ்வளவுதான்.

நாவல் நவம்பர் பதினைந்து வாக்கில் உங்களுக்குக் கிடைக்கும். இன்று மாலைக்குள் லே அவ்ட் ஆர்ட்டிஸ்டிடம் கொடுத்து விடுவேன்.

அட்டைப் படம் மாறி விட்டது. இதுவும் கனவில் வந்த செய்திதான். இதுவரை கொடுக்கப்பட்ட அட்டைப்படம் செவ்வியல் தன்மை மிகுந்ததாக இருந்தாலும் அது ஒற்றை அர்த்தத்தையே தருகிறது. ஆனால் தியாகராஜரின் வாழ்வும் கீர்த்தனைகளும் ஒற்றை அர்த்தம் கொண்டவை அல்ல. அதனால், அழகிலும் வசீகரத்திலும் முந்தைய படத்தை விட இது சற்றே கம்மியாக இருப்பதாகத் தோன்றினாலும் இதையே தேர்ந்தெடுத்தேன். இதை வரைந்து கொடுத்தவர் ஜஸ்பீர் கௌர் என்ற மாணவி. அவருக்கு என் நன்றி. எழுத்துருவைக் கொடுத்தவர் என் அருமை நண்பர் சதீஷ்குமார். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். எழுத்துருவில் இன்னும் சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருக்கிறேன்.

இறுதியாக ஓர் அறிவிப்பு. தங்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட சிறப்புப் பிரதிக்குப் பணம் அனுப்பியவர்கள், நாவலில் என்ன பெயர் வர வேண்டும் என்பதையும், தங்கள் முகவரியையும் தொலைபேசி எண்ணோடு அனுப்பித் தர வேண்டுகிறேன்.

charu.nivedita.india@gmail.com

மேலும், இந்த சிறப்புப் பிரதி தேவைப்படுபவர்கள் நன்கொடையாக 10000 ரூ. செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள் கீழே கொடுத்திருக்கிறேன். முதல் தேதியோடு இந்தத் திட்டம் முடிவுக்கு வருகிறது.

பணம் அனுப்புவதற்கான விவரம்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai