தியாகராஜா

தியாகராஜா நாவலை எழுதத் தொடங்கியது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு. சுமார் இருநூற்று ஐம்பது பக்கங்கள் எழுதியிருந்தேன். பிறகு அதை என்னால் தொடர முடியவில்லை. ஏன் தொடர முடியவில்லை என்பதற்கான காரணம் இப்போதுகூட எனக்கு சரியாகத் தெரியவில்லை. இன்னும் என்னிடம் ஏதோ குறைகிறது, இன்னும் ஏதோ ஒன்றை நான் அடைய வேண்டியிருக்கிறது என்ற உணர்வு மட்டும் இருந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில் நான் எங்கே சென்றாலும் என் நண்பர்களும் வாசகர்களும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எப்போது தியாகராஜா வரும்? … Read more