ஜோக்கர்ஸ் – தமிழ் ஸ்டுடியோஸ் அருண்

ஜோக்கர் பார்க்கவில்லையா என்று சுமார் நூறு பேர் என்னிடம் கேட்டிருப்பார்கள்.  குக்கூவைப் பார்த்த பிறகு இனிமேல் ராஜு முருகன் படங்கள் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.  மேலும் என் மதிப்புக்கு உரிய நண்பர் ஒருவராவது ஒரு படத்தைப் பற்றி ஒரு நல்ல வார்த்தையாவது சொன்னால்தான் தமிழ்ப் படம் பார்ப்பதாக இருக்கிறேன்.  இறைவி, கபாலி போன்ற படங்களால் நான் பட்டது போதும்.  சகாயம் போன்றவர்கள் நல்ல படம் என்று சொல்லி விட்டார்கள்.  இனிமேல் என் கழுத்தில் கத்தி … Read more

அனுராக் காஷ்யப், லீனா மணிமேகலை, அடியேன்…

இரண்டு மாலை நேரங்கள் அனுராக் காஷ்யப், தமிழ் ஸ்டுடியோஸ் அருண் மற்றும் லீனா மணிமேகலையுடன் கழிந்தன.   அருணின் அன்பு இல்லாதிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது.  ஏன் இத்தனை சொல்கிறேன் என்றால், இந்தியாவிலேயே நான் வெகுவாக மதிக்கும் இயக்குனர்களில் முதலில் இருப்பவர் அனுராக் காஷ்யப்.  அதற்குக் காரணம், நான் சினிமா எடுத்தால் அனுராக் மாதிரிதான் எடுப்பேன்.  தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வாஸேபூர், ராமன் ராகவ் எல்லாம் என்னுடைய படங்கள்.  அப்படித்தான் நினைக்கிறேன். தமிழ் ஸ்டுடியோஸின் செயல்பாடுகளில் … Read more

திரைப்பட ரசனை

கடந்த சனிக்கிழமை முதல் வகுப்பு எடுத்த பிறகு இன்று இரண்டாவது வகுப்பு.  காலை 11.15க்கு ஆரம்பித்தது வகுப்பு.  Empire of the Sun மற்றும் The Artist ஆகிய இரண்டு படங்களை முன்வைத்து மாணவர்களுக்கு சினிமா பற்றி கற்பித்துக் கொண்டிருந்தேன்.  கூடவே இலக்கியமும் இசையும் வாழ்க்கையும்.  ரொம்ப உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.  ஒரு கட்டத்தில் கல்லூரியின்/ வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து மாணவர்கள் லஞ்சுக்குப் போக வேண்டும், அடுத்த வகுப்பு இரண்டு மணிக்கு இருக்கிறது என்றதும்தான் … Read more

ஜி. கார்ல் மார்க்ஸ் மீண்டும்… விநாயக முருகனும்…

முகநூலில் பார்த்த பதிவு. ஜி. கார்ல் மார்க்ஸ்: முந்தைய பதிவில் ‘சராசரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன். அந்த வார்த்தையை யாரையும் காயப்படுத்தும் நோக்கிலோ அல்லது அவமதிக்கும் நோக்கிலோ சொல்லவில்லை. இதன் பின்னுள்ளது ஒரு சலிப்பு. நமது பொதுபுத்தி, அறிவுஜீவித்தனத்துக்கு எதிராக கொண்டிருக்கிற மூர்க்கத்தின் மீதான எரிச்சல் அது. ஒரு உதாரணத்துடன் இதைப் பார்ப்போம். உங்களுக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் பத்து கிலோமீட்டர் தூரம் ஓடுகிற பழக்கம் இருக்கிறது. நல்ல பழக்கம்தான் அது. அதற்காக உசைன் போல்ட்டைப் பார்த்து, … Read more

தமிழ் ஸ்டுடியோவின் B.லெனின் விருது வழங்கும் விழா – 2016 – சிறப்பு விருந்தினர் அறிமுகம்

அனுராக் காஷ்யப் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு சினிமா சார்ந்த தளங்களில் பயணிப்பவர். உலகெங்கிலும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் குரலாக ஒலிப்பவர். ஒரு திரைப்படம் எடுத்துவிட்டால் அத்துடன் தங்களது கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் பெரும்பாலான படைப்பாளிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு உலகில் நடக்கும் அதிகம் அறியப்படாத பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்திய திரைப்படம் என்றாலே அனுராக் என்கிற அளவிற்கு தன்னுடைய படங்களை எல்லா திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைத்து அதற்குரிய நியாயத்தை … Read more

ஜோக்கர்

உனது துன்பங்களுக்கு நீயேதான் காரணம். -ஸ்வாமி விவேகானந்தர். …கரெக்ட் ஸ்வாமீ. நானாதான் ஜோக்கர் படத்துக்குப் போனேன். எனக்கு நல்லா வேணும். இது பத்தாது ஸ்வாமீ… பிரபு காளிதாஸ்