ஒரு அதிசயம்

’ஒழிவு திவசத்த களி’ இந்தியத் திரை உலகில் நிகழ்ந்த அதிசயம் என்று எழுதியிருந்தேன்.  ஏஷியாநெட் இணையப் பத்திரிகையில் அந்தக் கட்டுரையை இதுவரை 29000 பேர் படித்திருக்கிறார்கள்.   இது ஒரு சாதனை.  இதை சாத்தியப்படுத்திய ஏஷியாநெட் நிறுவனத்துக்கும் குறிப்பாக என் நண்பர் ட்டி.ஆர். விவேக்குக்கும் நன்றி. http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-ozhivu-divasathe-kali

கபாலிடா கடுப்புடா…

கபாலியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன உளைச்சல் தாங்க முடியாமல் லீனா மணிமேகலையிடம் புலம்பினேன்.  அப்போது அவர் கொடுத்த தலைப்பே கபாலிடா கடுப்புடா என்பது.  அழகான தலைப்பைக் கொடுத்த லீனாவுக்கு நன்றி.  கபாலி பற்றிய என் மதிப்புரை கீழே: http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-kabali-review

ராஸ லீலா : ஒரு மதிப்புரை

யமுனை செல்வன் ராஸ லீலாவுக்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதியிருக்கிறார்.  அந்த மதிப்புரையில் அவர் குறிப்பிடும் references-ஐப் படிப்பதற்கும் பார்ப்பதற்குமே நாட்கள் ஆகும் போல் இருக்கிறது.  இதுவரை ராஸ லீலாவுக்கு இப்படி ஒரு மதிப்புரை வந்ததில்லை.  ம்ஹும்.  ராஸ லீலாவுக்கு இதுவரை மதிப்புரையே வந்ததில்லை.  யமுனை செல்வனுக்கு என் மனமார்ந்த நன்றி. யமுனை செல்வனின் வலைதளம்

ஒழிவு திவசத்தெ களி

இந்தப் படத்துக்கு இவ்வளவு சிறிய மதிப்பீடு போதாது.  வரும் முதல் தேதி விரிவான மதிப்பீடு ஒரு தமிழ் இலக்கிய இதழில் வெளிவரும். http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-ozhivu-divasathe-kali

ஒளியின் பெருஞ்சலனம் – உலக சினிமா 100

மேற்கண்ட தலைப்பில் இனி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் தினமலர் சினிமா பக்கத்தில் எழுதுவேன்.  இன்று முதல் கட்டுரையின் முதல் பகுதி வந்துள்ளது.  நண்பர்கள் படிக்கவும்.  கட்டுரை விரிவான ஆய்வாக இராது.  300 வார்த்தைகளில் எந்த அளவுக்கு அறிமுகப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு செய்திருக்கிறேன்.  பொதுவாக உலக சினிமா என்றால் அது ஹாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கிறது.  பல சினிமா கலைஞர்களின் உலக சினிமா பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் ஹாலிவுட் சினிமா.  மனப்பாடமாகவே சொல்லி விடலாம்.  காட்ஃபாதர், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், … Read more

இனிமேல் ஜாலி…

குருப் பெயர்ச்சி நடந்திருக்கிறதாம்.  இனிமே ஐயாவுக்கு ஜாலிதான்.  ஜோதிடர் ஆர்.கே. சதீஷ்குமார் சொல்கிறார்.  முகநூலில் படித்தேன். ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு … Read more