குருப் பெயர்ச்சி நடந்திருக்கிறதாம். இனிமே ஐயாவுக்கு ஜாலிதான். ஜோதிடர் ஆர்.கே. சதீஷ்குமார் சொல்கிறார். முகநூலில் படித்தேன்.
ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும்.
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்…5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே இல்லை.
திருப்பதி போய் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என திருப்பதி பெருமாளே உங்களை ஏதேனும் ரூபத்தில் திருப்பதி தரிசனம் காண வைப்பார்.