ஒரு இரங்கல் கட்டுரை

பின்வரும் கட்டுரையை எழுதியவர் நண்பர் கருந்தேள் ராஜேஷ்.  என்னுடைய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஒரு முக்கியமான இழப்பை, மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இனி வருவது கருந்தேள் ராஜேஷ்: எரியும் உடலின் வாய் அரிசியை நோண்டித் தின்பவர்கள் நம்மூருல ஒரு மனுசன் செத்துப்போனா என்னலாம் பிரச்னை என்பதை ப்ராக்டிகலாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். அப்பா கடந்த வெள்ளியன்று மதியம் இறந்துவிட்டார். வயது 78. கிட்னி பிரச்னை. டயாலிசிஸ் வேண்டாம் என்று உறுதியாக இருந்து, நினைத்தபடி ஜாலியாக … Read more

சண்முகம் மாமாவும் குட்லியும்… (சிறுகதை)

வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம்… மேற்கண்ட ஐந்து நற்குணங்களும் என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிடையாது.  ஏன் என்றெல்லாம் யோசித்ததில்லை.  இதனால் எனக்குப் பல வழிகளிலும் லாபமாக இருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு.  என் எழுத்தை மட்டமாகப் பேசுபவர்களை மட்டும் என் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடுவேன்.  அவ்வளவுதான்.  அவ்வளவேதான்.  அவர்களோடு பகைமை பாராட்டுவதோ திட்டுவதோ எல்லாம் கிடையாது.  விலகி விடுவேன்.  நமக்கு எழுத்துதான் வாழ்க்கை, உயிர், … Read more

எம்.எஸ். பற்றி டி.எம். கிருஷ்ணா…

அன்புள்ள சாரு அவர்களுக்கு மே மாத காலச்சுவடு இதழில் டீ.எம். கிருஷ்ணா  எம்.எஸ். பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புதான்.  அது என்னை மிகவும் பாதித்தது.  ஒரு பதில் எழுதிப் போட்டிருக்கிறேன். வருமா என்று தெரியாது.  அதை நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது.  படித்து அது சரியென்றால் ஓகே.  இல்லையென்றால் அதற்கு எதிர்வினையாற்றவும் நீங்கள்தான் ஏற்றவர் என்பது என் கருத்து. அன்புடன், வி.என். ராகவன். Dear Sir, உங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி.  நீங்கள் … Read more

படிக்க வேண்டிய பத்து நூல்கள்

http://bit.ly/1Txd52g தி இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பட்டியலில் உள்ள நூல்களெல்லாம் நம் முந்தின தலைமுறையின் புத்தகங்கள்.  அதற்காக நூறு ஆண்டுகள் முன்பு அல்ல.  நம் தந்தையரின் நூல்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இதே பட்டியலை சமகால எழுத்தாளர்களின் நூல்களை வைத்து எழுதினால் யார் யாரை எழுதலாம்; யார் யாரை சிபாரிசு செய்யலாம்.  இதில் ஒரு தர்மம் இருக்கிறது.  நாம் பரிசு கொடுக்கும் போது … Read more

பெருமாள் முருகனின் பூக்குழி

பெருமாள் முருகனின் பூக்குழி ஆங்கிலத்தில் Pyre என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவின் மிகச் சிறந்த நாவல் என்று The Hindu-வில் மதிப்புரை எழுதப்பட்டது.  அந்த நூலுக்கு என் மதிப்புரை இன்றைய Asian Age/Deccan Chronicle நாளிதழின் அகில இந்தியப் பதிப்பில் வெளிவந்துள்ளது.  Asian Age லண்டனிலும் வெளிவருவதால் அங்குள்ள நண்பர்களும் வாங்கிப் பார்க்கலாம்.  கட்டுரையின் முதல் பத்தி repeat ஆகியுள்ளது.  மன்னிக்கவும்.  இரண்டு பத்தியில் எந்தப் பத்தி புரிகிறாற்போல் உள்ளதோ அதை எடுத்துக் கொள்ளும்படி ஆசிரியருக்கு எழுத … Read more