மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி

மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன்.  இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல்.  அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர். இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு.  மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும்.  கூட்டம் … Read more

ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள சவால்கள்…

ஜெயலலிதா ஸ்டாலினுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  அவர் தானே விஜயகாந்தை திமுகவிலிருந்து விரட்டியது?  ஏஷியாநெட்டில் நான் எழுதிய மூன்றாவது கட்டுரை இது.  திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுதியது.  செல்வகுமார் காரை ஓட்டி வந்தார். அவரும் நானும் மட்டுமே போயிருந்தோம்.  ஜவ்வாது மலைக்கு அழைத்தார் வெங்கடேஷ் (செங்கம்).  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவலை முடிக்க வேண்டியிருக்கிறது என்று அந்த சொர்க்கத்தை விட்டுவிட்டுக் கிளம்பினேன்.  டீக்கடையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து எழுதி அதைக் … Read more

”சூப்பர் ஸ்டாருக்காக எதையும் செய்வேன்…”

ஏஷியாநெட் டிவியின் இணைய தளத்தில் ஒரு பத்தி தொடங்கியிருக்கிறேன்.  Unfaithfully Yours… என்பது தொடரின் தலைப்பு.  ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியானது.  அதன் இணைப்பு கீழே: http://newsable.asianetnews.tv/home-page/charu-nivedita-tn-elections இப்போது அந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை இன்று வெளிவந்துள்ளது.  சூப்பர் ஸ்டாருக்காகத் தீக்குளிப்பேன் என்பது கட்டுரையின் சாரம். http://newsable.asianetnews.tv/home-page/charu-tamil-society-money-worship நண்பர்களும் எதிரிகளும் பெருவாரியாகப் படித்து ரசித்து, திட்டி இந்தத் தொடருக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  சென்ற கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர் இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்று … Read more

Tamil Nadu Elections : Not Much To Choose… http://newsable.asianetnews.tv

ஏஷியாநெட் டிவியின் இணைய தளம் ஒன்று துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.  அதில் என்னுடைய பத்தி (Column) நேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  முதலில் தமிழக தேர்தல் பற்றி.  இந்தத் தேர்தல் பற்றி நான் அதிகம் கருத்து சொல்லவில்லை.  இந்துவில் அன்புமணி பேட்டிக்கு ஒரு மறுப்பு எழுதியதோடு சரி.  நேற்று கூட வீட்டுக்கு ஒரு கூட்டம் ஓட்டு கேட்டு வந்தது.  ஒருத்தர் பாக்கியில்லாமல் ரவுடிகள்.  எல்லோருடைய கழுத்திலும் அடை அடையாக தங்கச் சங்கிலி.  தாம்புக் கயிறு சைஸுக்குப் போட்டுக் கொண்டு … Read more