”சூப்பர் ஸ்டாருக்காக எதையும் செய்வேன்…”

ஏஷியாநெட் டிவியின் இணைய தளத்தில் ஒரு பத்தி தொடங்கியிருக்கிறேன்.  Unfaithfully Yours… என்பது தொடரின் தலைப்பு.  ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியானது.  அதன் இணைப்பு கீழே:

http://newsable.asianetnews.tv/home-page/charu-nivedita-tn-elections

இப்போது அந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை இன்று வெளிவந்துள்ளது.  சூப்பர் ஸ்டாருக்காகத் தீக்குளிப்பேன் என்பது கட்டுரையின் சாரம்.

http://newsable.asianetnews.tv/home-page/charu-tamil-society-money-worship

நண்பர்களும் எதிரிகளும் பெருவாரியாகப் படித்து ரசித்து, திட்டி இந்தத் தொடருக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  சென்ற கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர் இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்று எகத்தாளமாகச் சொன்னார்.  உண்மைதான்.  எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் ஒருத்தர் கூட சொல்லவில்லையே என்பதுதான் அதை நான் எழுதக் காரணம்.

இந்தக் கட்டுரையின் கருத்துக்கள் யாவும் நேற்று இரவு கனவில் வந்தவை.  காலை நான்கு மணிக்கு எழுந்து எழுதினேன்.  மழை பெய்ததால் நடைப் பயிற்சிக்குப் போகவில்லை.  கட்டுரை லாபம்.

இன்று என்ன கனவு வரும் என்று தெரியவில்லை…