விழா பதிவுகள் – 11

நண்பர் யுவ கிருஷ்ணா முகநூலில் எழுதியிருப்பது: போன வார இறுதி ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஓர் இலக்கிய விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொள்வது அரிதிலும் அரிதான நிகழ்வு. இத்தனைக்கும் அன்று இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி வேறு. சாருவின் புத்தக வெளியீடுகளில் 90% இளைஞர்கள்தான் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவும் விதிவிலக்கல்ல. இணையத்தளங்களில் அவர் மீது வெளிப்படும் வன்மம் எவ்வளவு போலியானது என்பதை ராஜா அண்ணாமலை … Read more

விழா பதிவுகள் – 10

ஹாய் சாரு, இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் பார்ப்பதா, இலக்கிய விழாவிற்கு போவதா என்று குழம்பி, நாஞ்சில்நாடனின் இந்த வரி “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” மனசாட்சியை உறுத்த விழாவிற்கு வந்தேன். ஒரு இலக்கிய விழாவிற்கு இவ்வளவு பேர் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. நீங்கள் சிறந்த பேச்சாளராகி விட்டீர்கள். விழாவில் பேசிய மற்ற அனைவரையும் விட உங்களது பேச்சு அருமையாக இருந்தது. முதல் இரண்டு நிமிடம் … Read more

விழா பதிவுகள் – 8

இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.  வலது கோடியில் ஒருவர், இடது கோடியில் ஒருவர் ஆகிய இருவரைத் தவிர மற்றவர் அனைவரின் வயதும் எத்தனை இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

விழா பதிவுகள் – 7

பெரும்பத்திரிகைகளில் எழுதாத, உயிர்மை, அந்திமழை போன்ற சிறுபத்திரிகளிலும் ப்ளாகிலும் எழுதும் ஒரு எழுத்தாளனான அடியேனின் புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமான காமராஜர் அரங்கிலும் ராஜா அண்ணாமலை மன்றத்திலும் தொடர்ந்து ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருவதற்குக் காரணம் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள்தான்.  வெளியிலிருந்து பார்த்தால் புத்தக வெளியீடா, அரசியல் மாநாடா என்று சந்தேகமாக உள்ளது.  அநேகமாக இப்படிப்பட்ட ஒரு புத்தக வெளியீடு இத்தனை பெரிய அரங்கங்களில் நடப்பது உலக அளவிலேயே நம்முடைய வாசகர் வட்டத்தின் மூலமாக சென்னையில் … Read more

விழா பதிவுகள் – 6

என் மூன்று பிள்ளைகள்.  வெளிநாடுகளில் வசிக்கும் நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ் மூவரும் இந்த விழாவுக்காகவே வந்திருந்தனர்.  நிர்மல் முந்தின இரவு அங்கிருந்து கிளம்பி மாலை சென்னை வந்து விழா முடிந்ததும் அன்று நள்ளிரவே திரும்பவும் கிளம்பி விட்டார்.  தூங்கி 24 மணி நேரம் ஆகிறது என்றார். இவர்களுக்கெல்லாம் என் எழுத்தைத் தவிர தருவதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை.  இதேபோல் தில்லியிலிருந்து வந்திருந்த தரணீஷ்வரும் நிகழ்ச்சி முடிந்ததுமே தில்லிக்கு ரயில் பிடிக்கக் கிளம்பி விட்டார்.  மூன்று … Read more

நெஞ்சோரத்தில்…

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிறேன்.  பாடலைப் பாடிய சுப்ரியா ஜோஷி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெங்களூர் பெண் என்று தெரிந்தது.  இனிமையான குரல்.  விஜய் ஆண்டனியின் இசை.