புத்தகக் காட்சியில் சிற்றிரங்க விவாதத்தில் அடியேன்…

ஞாயிற்றுக் கிழமை 18ஆம் தேதி முன்மாலை 3.30 மணிக்கு புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன்.  ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழாவின் போது நேரம் கிடைக்காத காரணத்தால் வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற முடியாமல் போய் விட்டது.  நாளைய நிகழ்ச்சியை அந்தக் கலந்துரையாடலாக மாற்றுவோம். பொதுவாக இது போன்று நான் கலந்து கொண்டு பேசும்  நிகழ்ச்சிகளில் வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என்பதை கவனிக்கிறேன்.  கலந்து கொண்டால் எனக்கு ஒரு … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (2)

இன்றைய தினம் அந்திமழையில் வெளிவந்த கேள்வி பதில்: பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு கிளம்பியது போல் உங்கள் எழுத்துக்கு ஏதாவது எதிர்ப்பு கிளம்பியது உண்டா? தற்போதைய விவகாரத்தைக் கவனித்தீர்களா? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? கவிமணி, சேலம். பதில்:  என்னுடைய எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பினால் ‘அப்பாடா, இப்போதாவது நம்மை இவர்கள் கவனிக்கிறார்களே, நம்மையும் ஒரு எழுத்தாளன் என்று அங்கீகரித்து எதிர்க்கிறார்களே!’ என நினைத்து சந்தோஷப்படுவேன்.   ஏனென்றால், தமிழக புத்திஜீவிகள், பிரமுகர்கள், சக எழுத்தாளர்கள் … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (1)

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா ஆச்சி, சலீம் கௌஸ் நடித்து 1992-இல் வெளிவந்து சக்கைப் போடு போட்ட சின்ன கவுண்டர் திரைப்படம் பிறகு பல ஆண்டுகள் கழித்து மாதொரு பாகன் என்ற பெயரில் ஒரு நாவலாக வெளிவரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.  ஆனால் முடிவை மட்டும் ஆபாசமாக, வக்கிரமாக, பொய்யும் புரட்டும் கலந்து மாற்றி விட்டார் பெருமாள் முருகன்.  பத்தாண்டு காலம் தமிழில் எதுவும் படிக்காமல் இருந்தது நல்லது தானோ என்று … Read more

தமிழுக்கு ஒரு பொக்கிஷம்

சமஸ் எழுதிய கடல் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடியேன் எழுதிய முன்னுரை.  என் பெயரைச் சொல்லவே தயங்கும் சூழலில் என்னிடம் முன்னுரையே கேட்ட சமஸின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.  இந்த நூல் தி இந்து அரங்கில் கிடைக்கும்.  நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.  தி இந்து அரங்கு எண்: 343 A &B   இனி முன்னுரை: சமஸின் ‘நீர், நிலம், வனம்’ கட்டுரைகள் ‘தி இந்து’வில் தொடராக வெளியானபோது அதை ரசித்துப் படித்த ஏராளமான வாசகர்களில் … Read more

சிங்கப்பூரில் சாரு & அராத்து நூல்கள்

சிங்கப்பூரில் உள்ள கீழ்க்கண்ட இடத்தில் என்னுடைய கோணல் பக்கங்களும் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளும் அராஜகம் 1000 நூலும் கிடைக்கும். Artisan dessert bar. 31 Rochester Drive, Park Avenue Hotel #01-02 Singapore 138637 Phone:- 85153324.  

நான் வாங்கிய புத்தகங்கள்

சென்னை புத்தக விழாவில் நான் வாங்கிய புத்தகங்கள் பற்றி இன்றைய தி இந்து நாளிதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  முடிந்தால் படித்துப் பயன் பெறுங்கள். அதில் குறிப்பிடாத சில பல புத்தகங்களும் வாங்கினேன்.  அவை: 1. Marguerite Yoursenar கீழை நாட்டுக் கதைகள் 2. குட்டி இளவரசன் 3. அந்நியன் 4. காண்டாமிருகம் 5. மரியோ பர்கஸ் யோசாவின் The Bad Girl 6. Gabriel Garcia Marquez / The General in his Labyrinth … Read more