தேவகானம்

முதலில் இவரைக் கேளுங்கள்.  இதுவரை என் வாழ்நாளில் இவ்வளவு அற்புதமான இசைக் கலைஞனைக் கேட்டதில்லை.  இசைக் கடவுள்.  நாளை விரிவாக எழுதுகிறேன்… மின்விசிறி சத்தம் கூட இல்லாமல் மிக நிசப்தமான சூழலில் கேட்கவும். முக்கியமாக Divenire என்ற பாடல்.  இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம் போல் இருக்கிறது.  அற்புதம்.  அற்புதம்.  அற்புதம். https://www.youtube.com/watch?v=MmMnYM9DoEc  

அடியேனைப் பற்றி அவந்திகா

ட்ராகுலா படம் பார்த்திருப்பீர்கள்.  ட்ராகுலா யாரையாவது கடித்தால் அவர்களும் ட்ராகுலாவாக ஆகி விடுவார்கள்.  என்னுடைய 15 வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  என்னோடு கூட இருப்பவர்களும் என்னைப் போலவே எழுத்தாளர்களாகி விடுகிறார்கள்.  2005-இல் எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்த போது கலா கௌமுதி, மாத்ரு பூமி, மாத்யமம் என்ற மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.  அறுவை சிகிச்சையின் காரணமாக மூன்று பத்திரிகைகளிலும் இடைவெளி வருவதை நான் விரும்பாததால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே … Read more

தமிழ் ஸ்டுடியோ திரையிடல்

நாள்: 02-11-2014, ஞாயிறு, மாலை 6 மணிக்கு. இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236 திரையிடப்படும் படம்: The White Balloon (இயக்கம்: ஜாபர் பனாஹி) நண்பர்களே, சிறுவர்களின் திரைப்பட ரசனையை வளர்க்கும் பொருட்டு, தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வில் இந்த மாதம், ஜாபர் பனாஹி இயக்கத்தில் வெளியான, … Read more

ஒரு கடிதம்

Hi Charu,  உடல் எடைக் குறைப்புக் கட்டுரை முற்றிலும் fake.  ப்ராஸ்டேட் கேன்சர் பற்றிய கட்டுரை fake கிடையாது; ஆனால், unproven, not widely accepted among medical fraternity; the research still has to undergo multiple trials to be placed in textbooks and to be widely accepted in medical fraternity. “According to a new study” என்று ஆரம்பித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் மருத்துவ கட்டுரைகளை முற்றிலும் … Read more

மை டியர் திருவள்ளுவர்…

மை டியர் திருவள்ளுவர், நான் உங்கள் மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  நீங்கள் உங்களுடைய ஆவி உலகத்தில் ஷேக்ஸ்பியர், இளங்கோ, கம்பர் போன்றவர்களோடு நண்பராகி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறீர்கள் என்றே நம்புகிறேன்.  ஷேக்ஸ்பியர் தான் கொஞ்சம் கெட்டவர்.  அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.  உங்களுக்கே தெரிந்திருக்கும்.  உலகளந்த ஞானி.  என்னைப் போன்ற ஒரு பொடியன் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்பத்தில் நான் சின்ன பையனாக இருந்த போது நீங்கள் திமுக கட்சிக்காரர் என்று எண்ணி ரொம்ப வெறுப்புடன் இருந்தேன். … Read more