exile (new)

இன்று மாலை ஆறு மணிக்குள் எக்ஸைல் 2ஐ முடித்து விடுவேன். 1700 பக்கங்களில் 1300 பக்கங்களை எடிட் செய்து விட்டேன். நேற்று சுந்தர் சொன்னதால் நேற்று மதியம் மூன்று மணியிலிருந்து இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு அத்தியாயம் கடைசியில் சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் தான் ஆகும். அந்த அத்தியாயம் ஒரு little apocalypse. தானாக அப்படி ஒரு முடிவு வந்தது. இறைவனுக்கு நன்றி. இப்போது அனிஸ் மூன்றாவது ரவுண்ட் ஓடிக் … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா – 4

பேசா மொழி 23-ஆவது இதழ் வெளிவந்து விட்டது.  அதில் வரும் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடரின் நான்காம் பகுதி வெளிவந்துள்ளது.  இணைப்பு: http://pesaamoli.com/Mag_23_LAC_Charu_4.php இதழ் பற்றி அருண் எழுதியுள்ள குறிப்பு கீழே: நண்பர்களே, பேசாமொழி இதழில் 23வது இதழ் வெளியாகிவிட்டது. கீலோ பொண்டகார்வோவின் அருமையான நேர்காணல் ஒன்றும், அவரது ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் பற்றிய நேர்த்தியான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து, கே.வி.ஷைலஜா திரை இதழுக்காக மொழிபெயர்த்த இந்த கட்டுரையை … Read more

ட்சைக்காவ்ஸ்கி

லத்தீன் அமெரிக்க சினிமாவின் நான்காம் அத்தியாயத்தை எழுதி முடித்த போது தலை பூராவும் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.  ஒயின் அருந்தலாமா என்று யோசித்தேன்.  இரவு பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதை விட்டு விட்டு கரப்பான் பூச்சிகளை விரட்ட என்ன வழி என்று பார்த்தேன்.  கிடைத்தார் ட்சைக்காவ்ஸ்கி.  மனம் பின்னோக்கிச் சென்றது.  ஊட்டியில் (குன்னூர்) ஒரு மலை முகட்டில் கட்டப்பட்ட மர வீட்டில் பிரம்மராஜனோடு விஸ்கி அருந்திய படி நடுநடுங்கும் ஜனவரி மாதக் குளிரில்  இரவு … Read more

அக்டோபர் முதல் தேதி திருவாரூரில்…

நாளை அக்டோபர் முதல் தேதி திருவாரூரில் உள்ள ராபியாம்மாள் அஹ்மது மெய்தீன் கல்லூரியில் காலை பத்து மணி அளவில் இன்றைய வாழ்வில் இலக்கியத்தின் அவசியம் பற்றி உரையாற்ற இருக்கிறேன்.  இன்று இரவு திருவாரூர் கிளம்பிச் சென்று நாளை இரவு அங்கிருந்து சென்னை ரயிலைப் பிடிப்பேன்.  நாளை ஒரு பகல் திருவாரூரில் இருப்பேன்.  திருவாரூர் நண்பர்கள் சந்திக்கலாம்.  ஒரு வாரத்திற்கு முன்பே இந்தக் கூட்டம் திட்டமிடப்பட்டாலும் சாருஆன்லைனில் தெரிவிக்க நேரம் இல்லை.  லத்தீன் அமெரிக்க சினிமா தொடர் நான் … Read more