டாஸ்மாக் பற்றி…

இன்றைய தினமலரில் தேர்தல் களம் பகுதியில் டாஸ்மாக் பற்றிய என் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.  படித்துப் பாருங்கள்… இரண்டாவது விஷயம், அடுத்த பிரதமரின் பார்வைக்கு திர்லோக்புரி கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி இருக்கிறேன். அதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிடச் சொல்லி. காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப என்னால் முடிந்த சிறிய காரியம்.

அற்புதத் தருணம்…

இத்தனை நாள் பட்ட கஷ்டம் முடிவுக்கு வந்து விட்டது.  எக்ஸைல் எடிட்டிங் முடிந்து விட்டது.  மொத்தம் 1300 பக்கங்கள்.  இப்படிப்பட்ட தருணத்தை குடித்துக் கொண்டாடுவதே என் வழக்கம்.  கைவசம் ரெமி மார்ட்டினும் ஒயினும் உள்ளது.  ஆனாலும் என் (வளர்ப்பு) மகள் பூஜா வீட்டுக்கு வருவதால் கொண்டாட்டத்தை ஒத்தி வைத்து விட்டேன்.  பூஜா பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.  யாருக்கு ஞாபகம் இருக்கிறதோ!  இந்தக் கொண்டாட்டத்தை சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்து விட்டேன்.  ராஜேஷ் சென்னை வருகிறார்.  அராத்துவும் … Read more

aquarium

வீட்டில் மீன் தொட்டியில் அல்லது சிறிய குளத்தில் வீட்டு மீன்கள் வளர்ப்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?  அல்லது, உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரும் உண்டா?  எனக்கு சில சந்தேகங்கள் அவசரமாகக் கேட்க வேண்டும்.  எக்ஸைல் எடிட்டிங்கின் கடைசிப் பக்கங்களை நெருங்கி விட்டேன்.  இன்னும் பத்துப் பதினைந்து பக்கங்களே உள்ளன.  எனக்கு எழுதவும்… charu.nivedita.india@gmail.com

நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்?

நீங்கள் ஏன் மோடி ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டு தினமும் எனக்குக் கடிதங்கள் வருகின்றன.  விரைவில் சொல்கிறேன் என்றே பதில் சொல்லி வந்தேன்.  எக்ஸைல் எடிட்டிங் வேலை இருந்ததால் விரிவாக எழுத முடியவில்லை.  சவூதியிலிருந்து என் நண்பர் கார்ல் மார்க்ஸ் கூட கேட்டிருந்தார்.  இப்போது என் பதில் தினமலர் தேர்தல் களம் என்ற பகுதியில் விரிவாக வந்துள்ளது.  படித்துப் பாருங்கள். 3000 சீக்கியர்களை organised ஆகக் கொன்றார்கள் தில்லி காங்கிரஸ்காரர்கள்.  கொன்றது மக்கள் அல்ல.  ஆனால் காங்கிரஸை ஆதரித்தால் … Read more

இசைக் கடவுள்…

அல்ஜீரியாவில் கபீலியா என்று ஒரு பகுதி இருக்கிறது.  அங்கே சுதந்திரப் போராட்டம் நடந்தது.  அந்தப் பிராந்தியத்தில் அரபி மொழி பேசினால் அபராதம் விதிக்கப்படும்.  கபீலிய மொழி தடை செய்யப்பட்ட மொழியாக இருந்தது.  உதாரணமாக, தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்றால் என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள்.  இதையெல்லம் என்னுடைய கலகம் காதல் இசை என்ற நூலில் எழுதி இருக்கிறேன்.  சரி… விஷயத்துக்கு வருகிறேன்.  கபீலியாவில் ஷாப் ஹாஸ்னி பிரபலமாக இருந்தார்.  நீங்கள் நாட்டை … Read more