எக்ஸைல் – 2 உருவாக்கம் பற்றி இன்னும் கொஞ்சம்…

பாலு மகேந்திராவுடன் உரையாடிக் கொண்டிருந்த போது தலைமுறைகள் சரியாகப் போகவில்லையே என்று கேட்டேன்.  அதற்கு அவர், “அதை நான் international audience-க்காக அல்லவா எடுத்தேன்” என்றார்.  அதேபோல் எக்ஸைல் – 2 ஐ நான் ஆங்கில வாசகர்களுக்காகவே எழுதினேன்.   நாவலில் Tango என்று வந்தால் என்ன ஏது என்று உடனே புரிய வேண்டும்.    Tango இசையைக் கேட்டிருக்க வேண்டும்.  அந்த நடனத்தைப் பார்த்திருக்க வேண்டும்.  ஸல்ஸா ஜல்ஸாவாக இருக்க, த்தாங்கோவில் மட்டும்  ஏன் அந்த meloncholy என்று … Read more

Making of Exile – 2

இன்னும் 200 பக்கங்கள் இருக்கின்றன.  நான்கு நாட்களாக தினம் 12 மணி நேரம் ஸால்ஸா, த்தாங்கோ (Tango) இசையையும் நடனத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அஞ்சலி ஸால்ஸா டான்ஸர் என்று எக்ஸைலில் வரும்.  ஆனால் அதோடு அந்த விபரம் நின்று விடும்.  இந்த இடங்களையெல்லாம் தான் நிரப்ப வேண்டும் என்று நினைத்தேன்.  ஏன் அவள் த்தாங்கோ நடனம் கற்காமல் ஸால்ஸா வகுப்பில் சேர்ந்தாள்.  ஸால்ஸா நாய் என்றால் த்தாங்கோ பூனை.  நாய்க்கு நீங்கள் உணவிட்டால் அது உங்களை எஜமானாக … Read more

எக்ஸைல் – 2

பத்து  ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தின் மாத்ருபூமி  இதழில் உலக இசை பற்றி தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது என்னிடம் கணினி வசதி இல்லை.  எல்லா இசையையும் அந்தந்த நாடுகளில் வசிக்கும் வாசக நண்பர்களின் மூலம் குறுந்தகடுகளாக தருவித்துக் கேட்டே எழுதிக் கொண்டிருந்தேன்.  அந்தத் தொடர் கட்டுரை கலகம் காதல் இசை என்ற தொகுப்பாக தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக 100 பிரதிகள் விற்றது.  (தமிழில் எழுதுவது வீண் என்று நினைப்பது இது போன்ற கட்டுரைத் தொகுப்புகளால்தான்.) நாவல் … Read more

வாழ்த்துக்கள் ஞாநி!

ஞாநியின் நீண்ட கால நண்பர்களில் அடியேனும் ஒருவன்.  அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணி புரிந்த போதும் அந்த நிர்வாகத்தை எதிர்த்து பல ஆண்டுகள் வழக்குத் தொடுத்துப் போராடிய போதும் பீட்டர்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.  இன்னமும் அவர் வீட்டு பச்சரிசி சோறும் சாம்பாரும் ரசமும் உருளைக் கிழங்கும் எனக்கு ஞாபகம் உள்ளன.  வீட்டுக்கு எதிரே இருக்கும் சுவரில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்போம், ஆறேழு நண்பர்கள்.  யார் யார் சாப்பிடுகிறீர்கள் என்று வந்து … Read more

crazy sexy wild…

உங்கள் கணவரோ மனைவியோ கூட இருக்கக் கூடாது.  தனியாக இருக்கும் போது மட்டுமே இந்தப் பாடலைக் கேளுங்கள்.  சப்தத்தை அதிகமாக வைத்துக் கேட்க வேண்டும்.  enjoy this crazy sexy wild world… https://www.youtube.com/watch?v=4yffvW-QCfc