சாரு என்னும் சகாப்தம்: ஆர். அபிலாஷ்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான … Read more

இன்று சாருவுக்குப் பிறந்தநாள்: மனுஷ்ய புத்திரன்

இன்று சாருவுக்கு பிறந்த நாள் என்று காலையில் கண் விழிக்கும்போதே நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்களுக்கிடையே வரும் சச்சரவுகள், பதிப்பாளர்- எழுத்தாளர்களுக்கிடையே வரும் கசப்புகளை எல்லாம் தாண்டி நட்பின், அன்பின் உயரிய கண்ணியத்தை எப்போதும் என்னை உணரச் செய்தவர் சாரு. அவரை புண்படுத்தக்கூடிய பல வாசகங்களை பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் அதைப்பொருட்படுத்தியதில்லை. எழுத்திலோ பேச்சிலோ எந்தக் கசப்பையும் என் மேல் வெளிபடுத்தியதில்லை. உயிர்மையைவிட்டு எவ்வளவோ விலகிச் சென்றபிறகும்கூட உயிர்மை அவர் எழுத்து வாழ்க்கைக்கு அளித்த பங்களிப்பை … Read more

விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (2)

அபிலாஷ் என் நெருங்கிய நண்பர். பிரச்சினை என்னவென்றால், எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாது. ஒரு ஹிந்துப் பண்டிகை தினத்திலா இதைப் போய் பேசுவது? அதுவும் நாடு இப்போது இருக்கும் நிலையில்? பண்டிகை என்பது கொண்டாடுவதற்குத்தானே? நான் காலையிலிருந்து கொழுக்கட்டை சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அங்கே வந்து ரகளை செஞ்சால் நான் எப்படி இனிக்க இனிக்கக் கொழுக்கட்டை சாப்பிடுவது? சரி, பகுத்தறிவுவாதிகளே, நீங்கள் எப்போது கொழுக்கட்டை தருவீர்கள்? கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்திலா?

மஞ்சள் விநாயகர்

மனிதனின் கற்பனை உச்சங்களில் ஒன்று, விநாயகர். எப்போதும் போல் நேற்று இரவும் பத்து மணிக்கு நான் உறங்கப் போய் விட்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கும் அவந்திகாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்து பார்த்தால் ஹாலில் இந்த மஞ்சள் விநாயகர். எங்கள் வீட்டில் இரண்டு பால்கனிகள் உள்ளன. ஒன்றில் பூச்செடிகள். இன்னொன்றில் மூலிகை. என்னவோ தெரியவில்லை, காய்கறிகளே வருவதில்லை. பூந்தோட்டத்தில் பறித்தது அந்த இரண்டு பூக்களும். கண்கள் என்ன என்றேன். மிளகு என்றாள்.