கெட்ட வார்த்தை (சென்ற கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள ———க்கு, காலையில் எழுந்ததும் நீ அனுப்பியிருந்த பத்துப் பதினைந்து வாட்ஸப் தகவல்களைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன்.  மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த நடிகர்.  அவரிடம் அவரது நெருங்கிய நண்பர்களால்கூட மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க முடியாது.  தெரிவித்தால் அவர் அவர்களை ஜென்ம விரோதிகளாகக் கருத்த் தொடங்குவார்.  உதாரணமாக, அவர் அடிக்கடி எழுதி வெளியிடும் கவிதைகளை “குப்பை” என்று சொல்ல அவரைச் சுற்றி ஒருத்தரும் இல்லை.  இத்தனைக்கும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் இலக்கிய ஜாம்பவான்கள்.  சொல்ல முடியும்தான்.  ஆனால் சொல்வதற்கான … Read more

உங்கள் அழுக்கை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்!!!

இந்தக் கட்டுரையின் தலைப்பு “உங்கள் மூத்திரத்தை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்” என்றுதான் இருக்க வேண்டும். இருந்தாலும் தலைப்பிலேயே மூத்திரம் என்று வருவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அழுக்கு என்று வைத்திருக்கிறேன். தில்லையின் தாயைத்தின்னி நாவலுக்கு ஒரு நீண்ட மதிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நடுவில் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். நகம் நீண்டு கிடக்கிறது. முடி காடு மாதிரி வளர்ந்து விட்டது. இதுபோல் இன்னும் பல ஜோலிகள். எதையும் செய்யவில்லை. தில்லையின் தாயைத்தின்னி … Read more

ஆக்ஸ்ஃபோர்ட் புத்தக அட்டை விருது

Oxford Bookstore நிறுவனம் வழங்கும் சிறந்த புத்தக அட்டை விருதுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb நாவலின் முகப்பு அட்டை இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு வாழ்த்து

எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான். ஆனாலும் நீங்கள் அனைவரும் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுவதால் நானும் உங்கள் கொண்டாட்டத்தில் இணைகிறேன். இப்போது கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் செல்கிறேன். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.