ஒரு சின்ன விஷயம்

முன்பெல்லாம் எனக்கு நன்கொடை மற்றும் சந்தா அனுப்புபவர்கள் என் வங்கிக் கணக்குக்கே அனுப்புவார்கள்.  ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்தன.  அதன் காரணமாக, நண்பர்கள் உதவியுடன் ரேஸர் பே என்ற சாதனம் வழியாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தேன்.  ரேஸர் பே மூலம் அனுப்புவதற்கு எந்தச் சிரமமும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  ஒரு பட்டனை அமுக்கி, தொகை எத்தனை என்பதைத் தெரியப்படுத்தினால் தொகை சம்பந்தப்பட்ட நபருக்குச் சேர்ந்து விடும்.  ஆனால் பாருங்கள், வங்கிக் கணக்கு மூலம் அனுப்பிக் கொண்டிருந்த … Read more

அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-literature

வாசகர் வட்டம்

இரண்டு பேருக்குத்தான் தமிழ் இலக்கிய சூழலில் வாசகர் வட்டம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜெயமோகனின் வாசகர் வட்டம் உலகளாவியது. வடகிழக்கு மாகாணங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை பரவியிருப்பது. அவர்களின் செயல்திறனும் உலகம் அறிந்தது. ஜக்கிக்கு அடுத்தபடியான மக்கள் திரளைக் கொண்டது ஜெ. வாசகர் வட்டம். என்னுடைய வாசகர் வட்டம் அளவில் மிகவும் சிறியது. என்றாலும் ஒரு காலத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததுதான். இல்லாவிட்டால் காமராஜர் அரங்கத்தில் இரண்டு முறை புத்தக வெளியீட்டு விழா நடத்தியிருக்க … Read more

டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-t20-reels

மனப்பிறழ்வும் கலையும்…

அன்புள்ள சாரு, என்னை முகநூலில் பிளாக் செய்துள்ளீர்கள், இன்றுதான் கவனித்தேன். என்ன காரணமென்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று நேரமிருந்தால் கூறுங்கள் சாரு. செந்தில்குமரன், ஆட்டையாம்பட்டி. அன்புள்ள செந்தில், பொதுவாக மனிதர்கள் ஒரு தவறு செய்து விட்டு, அதை சரி செய்வதாக நினைத்துக் கொண்டு அதை விடப் பெரிய தவறைச் செய்வார்கள்.  நீங்களும் அதையேதான் இப்போது செய்திருக்கிறீர்கள்.  இப்போது எனக்குக் கடிதம் எழுதிக் கேட்பதுதான் இரண்டாவது தவறு.  காரணத்தை நீங்கள் மிகச் … Read more

இளையராஜாவின் உளறல்

இளையராஜாவுக்குக் காமன்சென்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.  ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கிறதா என்று கேட்டு, அதற்கு அவர் பதில் சொன்னதும், உனக்கு அறிவு இருக்கிறதா என்பதை எந்த அறிவைக் கொண்டு கண்டு பிடித்தாய் என்று கேட்டுத் தன் காமன்சென்ஸை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் ராஜா.  ரஹ்மானை மேடைக்கு அழைத்து, உனக்கு இசை ஹாபி, எனக்கு இசை சுவாசம் என்று அவமானப்படுத்தியவர்.  இப்போது இயேசுவின் மீது கை வைத்திருக்கிறார்.  இயேசு உயிர்த்தெழவில்லை, யூட்யூபில் … Read more