முன்பெல்லாம் எனக்கு நன்கொடை மற்றும் சந்தா அனுப்புபவர்கள் என் வங்கிக் கணக்குக்கே அனுப்புவார்கள். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்தன. அதன் காரணமாக, நண்பர்கள் உதவியுடன் ரேஸர் பே என்ற சாதனம் வழியாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தேன். ரேஸர் பே மூலம் அனுப்புவதற்கு எந்தச் சிரமமும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு பட்டனை அமுக்கி, தொகை எத்தனை என்பதைத் தெரியப்படுத்தினால் தொகை சம்பந்தப்பட்ட நபருக்குச் சேர்ந்து விடும்.
ஆனால் பாருங்கள், வங்கிக் கணக்கு மூலம் அனுப்பிக் கொண்டிருந்த காலத்தை விட பாதிதான் இப்போது ரேஸர்பே மூலம் வருகிறது. வரும் தொகையை விட இரண்டு மடங்கு செலவு ஆகிக் கொண்டிருக்கிறது. காரணம், தொடர்ந்து பெரிய தொகை அனுப்பிக் கொண்டிருந்த சில நண்பர்களை விமர்சித்து எழுதி அவர்களைப் பகைத்துக் கொண்டு விட்டேன்.
பூனைகள் இல்லாவிடில் எனக்குப் பணமே தேவையில்லை. பூனை உணவுக்காகத்தான் பெரும் பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு என்றால் உங்களால் நம்ப முடியாது. வாழ்க்கை மிகவும் அபத்தமானது. என் அபத்தம், எழுபது வயதில் என்னிடம் உள்ள பத்து பூனைகளின் உணவுக்காக என் வாசகர்களிடம் யாசிப்பது அல்லது சந்தா கேட்பது. ஆனால் எந்த நிலையுமே என் மன இயல்பை, மனோ லயத்தை பாதித்தது கிடையாது.
சமீபத்தில் ஒரு சிநேகிதி என்னிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னாள். நான் ரோபோவின் குரலில் அப்படியா என்றேன். நொந்து போய் விட்டாள். அதனால் போயும் போயும் பண விஷயமெல்லாம் என் இயல்பைப் பாதித்து விடாது. இருந்தாலும் என்னுடைய வாழ்க்கை எந்த ரகசியங்களும் இல்லாத திறந்த புத்தகம் என்பதால் இதையும் எழுத நேர்ந்தது.
ஆரோவில்லில் உள்ள எங்களுடைய வன இல்லத்துக்கு என்னுடைய மூன்று மாதப் பங்களிப்பு ரூ.10000. அதை அனுப்பச் சொல்லி நேற்று வினித் மெஸேஜ் அனுப்பியிருந்தார். நாளை அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பினேன். ஆனால் அனுப்ப இயலவில்லை. போன மாதம் வரவை விட செலவு இரண்டு மடங்கு. இப்படியே போனால் சீலே போக முடியாது. என்னிடம் வரும் பணம் அத்தனையும் பயணத்துக்கானதுதான். இப்போதைய கோவா பயணத்தில் ஒரு சிறுகதையும் ஒரு பயணக் கட்டுரையும் லாபம். இதற்கு செலவு ஒரு இருபதாயிரம் இருக்கும். எனவே பணம் அனுப்ப விரும்பும் நண்பர்கள் ரேஸர்பே மூலம் அனுப்பலாம். அல்லது, என் வங்கிக் கணக்கின் மூலம்.
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai