தியாகராஜா நாவலுக்கான முன்பதிவுத்ப் திட்டம் பற்றி நேற்று எழுதிவிட்டு, இன்று ராஸலீலா பதிப்பகத்தின் உரிமையாளரான வர்ஷா தேவியை அழைத்து ”என்ன, ஒரு பிரதிக்குக் கூட பணம் வரவில்லையா?” என்று கேட்டேன். ”இல்லை, பதினோரு பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள்” என்று சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார் வர்ஷா.
சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் வந்தன. சமீபத்தில் ஹருகி முராகாமியின் ஒரு புத்தகம் ஒருநாள் நள்ளிரவில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தன. கடைகளில் ஒரே தள்ளுமுள்ளு கூட்டம்.
இங்கே பத்து பிரதிக்கும் பதினைந்து பிரதிக்கும் நான் குட்டிக்கரண வித்தையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், அந்தப் பதினோரு பேருமே என் நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; வெளியிலிருந்து என்னை வாசிக்கும் நண்பர்கள்.
ஆனால் இருநூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகரின் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஜனரஞ்சகப் படங்களை மக்கள் அதிகாலையில் போய் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கிப் பார்க்கிறார்கள். இப்படிப் பார்ப்பவர்கள் லட்சக்கணக்கான மக்கள். ஆனால் புத்தகம் வாங்கும் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்ட மாட்டேன் என்கிறது. மற்ற புத்தகங்கள் என்றால்கூட நான் புரிந்து கொள்வேன். ஆனால் தியாகராஜர் பற்றி எழுதிய நாவலுக்குக்கூட இந்த நிலைதானா?
என் தந்தை இறந்த போது ”இறுதிச் சடங்குகளுக்கு வர இயலாது, அவசரமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்று நான் சொன்னது பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன். அதுவாவது கல்யாணச் சாவு. என் நைனாவுக்கு வயது எண்பத்தைந்துக்கு மேல்.
ஆனால் தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது மரணமடைந்த என் நண்பனின் வயது நாற்பதை எட்டியிருக்குமா என்பதே சந்தேகம். சாலை விபத்து. இறுதிச் சடங்குக்குப் போக முடியவில்லை. நேற்றுகூட என் நண்பர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என்னால் அடக்க முடியாமல் அழுது விட்டேன். நண்பருடைய இளம் மனைவியும், மகளும் இனி எப்படி மீதிக் காலத்தை வாழப் போகிறார்கள் என்பதே எனக்கு இப்போது பெரும் கவலையாகியிருக்கிறது.
இப்படியெல்லாம் என் வாழ்வை ஒரு மூலையில் தூக்கிக் கடாசி எறிந்து விட்டு, உங்களுக்காக எழுதினால் அதை வாங்கிப் படிக்கக் கூட மாட்டேன் என்றால் நான் என்ன செய்ய முடியும்?
தியாகராஜா நாவலுக்காக நான் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படிக்கவும், ஆய்வு செய்யவும் வேண்டியிருந்தது. அதில் ஒரு சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து நாவலின் முடிவில் Selected Bibliography என்று கொடுத்திருக்கிறேன். அதில் ஒரு புத்தகம் எம்.எஸ். ராமஸ்வாமி அய்யர் எழுதியது. ஆங்கில நூல். நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நூல். அதில் ராமஸ்வாமி அய்யர் இரண்டு பாடல்களை மேற்கோள் காட்டுகிறார். இரண்டு பாடல்களுமே பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த படிக்காசுத் தம்பிரான் என்ற புலவர் எழுதியது. காளமேகப் புலவனின் ’அண்ணன்’ போலிருக்கிறது. சும்மா கெட்ட வார்த்தைகளை அள்ளி அள்ளித் தெளித்திருக்கிறார். அவர் காலத்தில் அவை கெட்ட வார்த்தைகள் இல்லை போல. அந்தப் பாடல்களை இங்கே தருகிறேன்.
மூவேந்தருமற்றுச் சங்கமும்போய்ப் பதின்மூன்றோ டெட்டுக்
கோவேந்தருமற்று மற்றொருவேந்தன் கொடையுமற்றுப்
பாவேந்தர் காற்றி லிலவம் பஞ்சாகப் பறந்தனரே
அடகெடுவாய்ப் பலதொழிலு மிருக்கக்கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்
திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச்
செம்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லை
தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்
சநியான தமிழைவிட்டுத் தையலர்தம்
இடமிருந்து தூதுசென்றுப் பிழைத்தோமில்லை
என்ன ஜென்மமெடுத்து உலகில் இருக்கின்றோமோ?
இரண்டு பாடல்களின் பொருள்:
மூவேந்தர்களும் போய்விட்டார்கள். தமிழ்ச் சங்கமும் போய்விட்டது. இருபத்தொரு குறுநில மன்னர்களும் இல்லை. புலவர்களை ஆதரித்துப் பரிசளிப்பதற்கு இப்போது யாரும் இல்லை. ஆகவே, புலவர்களாகிய நாங்கள் காற்றில் பறக்கும் பஞ்சைப் போல ஆதரவற்றுத் திரிகின்றோம்.
மதிகெட்டப் புலவர்களாகிய எங்களை என்னவென்று சொல்வது! உலகத்தில் பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் நாங்களோ எங்கள் அறியாமையினால் கல்விக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அதைக் கற்றுத் தொலைத்துவிட்டோம்.
எவ்வளவு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்!
இந்தப் பாழாய்ப்போன கல்வியை எப்போதோ விட்டொழித்துவிட்டு ஆடல் கலையையோ, கழைக்கூத்தையோ, வித்தைகளைக் காட்டிப் பிழைக்கும் தொழிலையோ கற்றிருக்கலாம். அப்படிச் செய்யாமல் போய்விட்டோமே என்று வருந்துகிறோம்.
அதையும்விட, பருத்த முலைகளைக் கொண்ட வேசிகளாகவோ, அவர்களுக்குத் தரகர்களாகவோ பிறக்காமல் போய்விட்டோமே! புலவனென்றும் கவிஞனென்றும் சொல்லிக்கொண்டு திரியும் இதெல்லாம் ஒரு ஜென்மமா?
இந்த இரண்டு பாடல்களையும் படித்தபோது ரஜினியெல்லாம் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பும்கூட எழுத்தாளனின் நிலை இப்படித்தான் இருந்திருக்கிறதென்று தெரிகிறது.
ஆனானப்பட்ட தியாகராஜரே இப்படிச் சில கீர்த்தனைகளை எழுதியிருக்கிறார். சில அல்ல, பல. தியாகராஜர் சுட்டுப் போட்டாலும் கெட்ட வார்த்தை பேச மாட்டார் என்பதால் எல்லாம் சுத்தமான மொழியில் பாடியிருக்கிறார். ஆனால் கருத்து இதுதான். எள்ளளவும் மாற்றமில்லை. என்ன ஏது என்ற விவரத்தை நாவலில் நீங்கள் படித்துக்கொள்ளலாம்.
தியாகராஜா நாவல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வார்த்தைகள். இந்த நாவல் அவசியம் ஆங்கிலத்துக்குப் போக வேண்டும். நான் பெரிய ஆள் ஆவதற்காக அல்ல. அப்படி நினைத்தால் ராஸ லீலாவை மொழிபெயர்க்கச் சொல்லியிருப்பேன். ஆனால் தியாகராஜா இந்தியா முழுக்கவும் அறியப்பட வேண்டும். அது ஒன்றுதான் என் நோக்கம். மொழிபெயர்ப்புக்கு ஐந்து லட்சம் ஆகும். அந்தக் காரணத்தினால்தான் சிறப்புப் பிரதி நன்கொடை பத்தாயிரம் என்று எழுதியிருந்தேன். இன்னும் ஒரு வார காலம் இருக்கிறது. ஒரு வாரத்தில் நாவல் அச்சுக்குப் போய் விடும். அதற்குள் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் பணம் செலுத்தலாம். சிறப்புப் பிரதி என்றால், நாவலின் அந்தப் பிரதியில் உங்கள் பெயர் அச்சில் இருக்கும். இந்தப் பத்தாயிரம் ரூபாயில் இரண்டாயிரம் ரூபாய் அச்சு செலவுக்கும், தபால் செலவுக்குமே ஆகி விடும் என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.
அல்லது, நாவலின் பிரதியை முன்பதிவு செய்யுங்கள். அதுவும் நாவலுக்காக அச்சகத்துக்குக் கொடுக்க வேண்டிய பெரிய தொகையை ஓரளவு ஈடு கட்டும்.
முன்பதிவு செய்வதற்கான விவரம்:
சாரு நிவேதிதாவின் புதிய நாவலான தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை விரைவில் ராஸலீலா பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவர உள்ளது.
இந்நாவலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
நூல் குறித்த விவரங்கள்:
– மொத்தப் பக்கங்கள்: 900
– இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.
– இரண்டு பாகங்களும் இணைந்து அழகிய Box Set-ஆக வழங்கப்படும்.
முன்பதிவு சிறப்புச் சலுகை
– புத்தகத்தின் அசல் விலை:1800Rs
– 10% தள்ளுபடி: 180Rs
– தபால் செலவு: இலவசம்
முன்பதிவு விலை: 1,620Rs மட்டும்!
இந்த நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட வழிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
WhatsApp / GPay: 7339680708
Website:
https://raasaleelapathippagam.com/
வங்கிக் கணக்கு விவரங்கள்:
Account Name: RAASA LEELA PATHIPPAGAM
A/c No: 25840200001634
IFSC Code: FDRL0002584
குறிப்பு: முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு இம்மாத இறுதியில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
***
சிறப்புப் பிரதிக்கான பணம் அனுப்புவதற்கு உரிய விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai