900 பக்கங்கள். இரண்டு பாகங்கள். என்னுடைய வேகத்துக்கு சில தினங்களிலேயே பிழை திருத்தம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாவலில் அப்படிச் செய்ய முடியவில்லை. மூன்றே மாதங்களில் எழுதியதுதான் என்றாலும் மூன்று ஜென்மங்களாக என்னோடு வாழ்ந்த மனிதர்களைப் போல் இருக்கிறார்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்கள். ஒருசில பத்திகளைப் படிக்கும்போது அடுத்த பத்திக்கே செல்ல முடியவில்லை. அங்கேயே நின்று விடுகிறது மனம். நாவல் வெளிவரும் வரை நாவலிலிருந்து ஒரு வாக்கியத்தைக்கூட வெளியே விடக் கூடாது என்று இருந்தேன். இன்று அந்த உறுதியை மீற வேண்டியதாயிற்று.
”சுயமாகவே கற்றுக்கொண்டது ஒரு பெருமை அல்ல. அது ஒரு தனிமை. யாரிடமும் பகிர முடியாத தனிமை. அதனால்தான் அவர் என்னை மிகுந்த வாத்ஸல்யத்தோடு சுவீகரித்துக்கொண்டார் என்று நினைக்கிறேன். இசையைக் கொடுத்தார். இலக்கியத்தைக் கொடுத்தார். தத்துவத்தைக் கற்பித்தார். அவர் எனக்கு எதைத்தான் கொடுக்கவில்லை? இல்லை என்ற சொல்லே இல்லாத உலகில் வாழ்ந்த மகான். என்னிடம் வயலினைக் கொடுத்து ”மென்மையாகத் தொடு, அழுத்தாதே” என்று சொன்ன அவர் வார்த்தைகளில் அவர் கடந்து வந்த பாதை முழுவதுமே இருந்தது.”
***
கடந்த மூன்று மாதங்களில் நிர்குண் தியாகராஜா நாவலுக்காக சுமார் முந்நூறு ஓவியங்களைத் தீட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். இன்று ஒரு பத்து ஓவியங்களை அனுப்பியிருந்தார். அதில் மூன்றை இங்கே பகிர்கிறேன்.



மூன்றாவது ஓவியத்தின் ஆங்கில எழுத்தில் ஒரு பிழை இருக்கிறது. அதை மட்டும் திருத்த வேண்டும். சம்பந்தமில்லாமல் நெடிலுக்கான macron உட்கார்ந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் ஓவியத்தின் அழகுக்காகத் தவறைத் திருத்தாமலேயே இங்கே பதிவேற்றம் செய்கிறேன். இப்போதைய என் நேர நெருக்கடியில் இந்தப் பஞ்சாயத்துக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது. இரவு பகலாக பிழைதிருத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.
***
முதல் ஓவியத்தையே அட்டைக்கு எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தொலைபேசியில் அழைத்த நிர்குண் ஆயிரக்கணக்கில் வரைந்து வைத்திருக்கிறேன், இதை விட சிறப்பான ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன், அதைப் பாருங்கள் என்றார். பதிப்பகம் என்ற ஆங்கில வார்த்தையில் ஏன் அனாவசியமாக macronஐப் போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். சும்மா, ஸ்டைலுக்கு என்று சிரித்தார். வாசகர்கள் என்னை நொக்கி எடுத்து விடுவார்கள், ஸ்டைலெல்லாம் வேண்டாம் என்று சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்துவிட்டேன்.
நாவலின் தலைப்பிலும் ஒரு சிறிய மாற்றம். தியாகராஜா: கடவுளைக் கண்ட ஞானியின் கதை. ”ஓர்” இல்லை. ஏன் இல்லை என்பது பெரிய கதை. இப்போதைக்கு நேரம் இல்லை.
முன்பதிவு செய்வதற்கான விவரம் கீழே:
முன்பதிவு செய்வதற்கான விவரம்:
சாரு நிவேதிதாவின் புதிய நாவலான தியாகராஜா: கடவுளைக் கண்ட ஞானியின் கதை விரைவில் ராஸலீலா பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவர உள்ளது.
இந்நாவலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
நூல் குறித்த விவரங்கள்:
– மொத்தப் பக்கங்கள்: 900
– இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.
– இரண்டு பாகங்களும் இணைந்து அழகிய Box Set-ஆக வழங்கப்படும்.
முன்பதிவு சிறப்புச் சலுகை
– புத்தகத்தின் அசல் விலை:1800Rs
– 10% தள்ளுபடி: 180Rs
– தபால் செலவு: இலவசம்
முன்பதிவு விலை: 1,620Rs மட்டும்!
இந்த நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட வழிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
WhatsApp / GPay: 7339680708
Website:
https://raasaleelapathippagam.com/
வங்கிக் கணக்கு விவரங்கள்:
Account Name: RAASA LEELA PATHIPPAGAM
A/c No: 25840200001634
IFSC Code: FDRL0002584
குறிப்பு: முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு இம்மாத இறுதியில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
***