அருஞ்சொல் இணைய இதழில் என் நேர்காணல்

இதுவரை என்னிடமிருந்து எடுத்த எத்தனையோ நேர்காணல்கள் வந்துள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றாக இது இருக்கும் என்று நம்புகிறேன். த அவ்ட்ஸைடர் என்ற ஆவணப்படத்துக்காக என் இளம் பிராயத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டதால் இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுதலாகிறது. விஷ்ணுபுரம் விருது விழா சமயத்தில் – அதாவது, டிசம்பர் பதினெட்டுக்கு முன்பாக நான் தொடர்ந்து ஐந்து நாட்கள் ராக்கண் விழித்தேன். ராக்கண் என்றால் பன்னிரண்டு மணி வரை விழிப்பதுதான். ஏனென்றால், எப்போது … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 : ஸோர்பா த இண்டியன்

அனுவின் வயது 22. இப்போதுதான் சட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.  மாடலிங் செய்கிறார்.  எதற்கு இத்தனை முஸ்தீபு என்றால் வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பர் 16) என்னைச் சந்திப்பதற்காகவே தன் தமையன் சேகரனோடு வட சித்தூர் வந்து நள்ளிரவு இரண்டு மணி வரை பண்ணை வீட்டில் நடந்த ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் அராத்துவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.  அன்றைய தினம் நான் களைப்பாக இருந்தேன்.  அருஞ்சொல் பேட்டியில் மும்முரமாக இருந்ததால் நான் ஒரு வாரமாக … Read more

ஒரு வரி

மகாமுனி என்ற படம் 2019இல் வந்திருக்கிறது. அதில் ஒரு காட்சியில் நாயகி நாயகன் ஆர்யாவிடம் உங்க கிட்ட சாரு எழுதின கலகம் காதல் இசை புக் இருக்கா எனக் கேட்கிறாள். ஆர்யா இருக்குங்க என்கிறார். இதை சாத்தியப்படுத்த நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு வரி வருகிறது என்பதைக் கண்டு பிடிக்க அந்தப் படம் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நோ காமெண்ட்ஸ். https://www.facebook.com/nirmal.mrinzo/videos/2226986110820672/?mibextid=NnVzG8

த அவ்ட்ஸைடர் – 31

பப்பு லாப்ரடார் இனம்.  ஸோரோ க்ரேட் டேன்.  இரண்டு நாய்களும் அவைகளின் வாழ்க்கையில் அதிகமாக நேசித்தது என்னைத்தான்.  அப்புறம்தான் மற்றவர்கள்.   குணாதிசயங்களில் இரண்டும் இரண்டு வகை.  ஸோரோவுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது, என்னைப் போலவே.  பப்புவுக்கு அது ஜாஸ்தி.  பப்புவை நான் ஏதாவது கடுமையாகத் திட்டி விட்டால் ஒரு நாள் முழுதும் சாப்பிடாது.  நான் நூறு முறை மன்னிப்புக் கேட்டாலும் சாப்பிடாது.  ஆண் நாயாக இருந்தாலும் பெண்கள் மாதிரி அடம்.  நாம் உயிரையே வைத்திருக்கும் இவனா … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 Miserere mei, Deus!

1770ஆம் ஆண்டு சிறுவன் மொட்ஸார்ட் தன் தந்தையுடன் ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்துக்கு ஒரு ஈஸ்டர் தினத்தன்று செல்கிறான்.  அப்போது அவன் வயது பதினான்கு.  அந்தக் காலத்தில் பாதிரிகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு துதிப்பாடல் Miserere mei, Deus!  (என் மீது கருணை கொள்ளுங்கள், கடவுளே!) ஆனால் அந்தப் பாடலை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தைத் தவிர வேறு எங்கும் இசைப்பதில்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் க்ரிகேரியோ அலெக்ரி (Gregario Allegri:1582 – 1652).  அதைக் … Read more

த அவ்ட்ஸைடர் – 30

செல்வேந்திரனிடம் சொல்லியிருந்தேன், அவ்ட்ஸைடர் படத்தின் படத்தொகுப்பாளரையும் கலரிஸ்டாகவும் மற்றபடி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த கணேஷ் அன்புவையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று.  அதிலும் இசையமைப்பாளர் சத்ய நாராயணனை மறந்து விட்டேன்.  இன்னொரு முக்கியஸ்தரையும் மறந்து போனேன்.  ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள்.  ஒளியிடம் எனக்குப் பிடித்தது கொஞ்சம் கூட ஆணவமோ அகங்காரமோ இல்லாதது.  அவரை மேடைக்கு அழைக்கவில்லை.  நேற்று அவரைத் தொலைபேசியில் அழைத்து அது பற்றி என் வருத்தத்தைத் தெரிவித்த போது அவர் … Read more